தேர்வுகள் என்பதென்ன?
ஒரு மாணவனின் தகுதியை நிர்ணயிக்க அளிக்கப்படும் வாய்ப்புதான் தேர்வு. ஆனால் இன்று தேர்வு என்றால் அது மாணவர்களுக்கோர் அச்சுறுத்தல். பொதுத்தேர்வு என்றால் பெரும் அச்சுறுத்தல்.
இதற்கிடையில், ‘டியூஷன்’ என்ற பெயரில் சிலர் பொதுத்தேர்வு எழுதுபவர்களின் அனைத்து விடுமுறை நாள்களையும் ஓராண்டு முன்னே ஆக்ரமிப்பு செய்து, தானாய் மலரும் பூக்களைத் தடியால் அடித்து அலற அலற மலர வைப்பதும் உண்டு.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாய் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்ய அரசு பரிசீலனை செய்து வருவது பாராட்ட வேண்டிய அம்சம்.
இயல்பான அறிவு வெளிப்படும் விதமாய் கல்வி முறைகளிலும் தேர்வு முறைகளிலும் மாற்றம் வர வேண்டியது அவசியம். அதற்கான தொலைநோக்குத் திட்டங்களை அரசு தரும் என்பது நமது நம்பிக்கை.
Leave a Reply