நமது பார்வை

நோய்க் கிருமிகள் தொற்று நோய்கள் போன்றவை பரவுவது காலங்காலமாய் நிகழ்ந்து வருவதுதான். போதிய மருத்துவ வசதி இன்மையால் கொத்துக் கொத்தாக மக்கள் செத்தனர். இன்று மருத்துவ வசதியும் ஊடக வசதியும் பெருகியுள்ளதால் பாதிப்புகள் குறைவு.

பொதுவாகவே யோகா, உடற்பயிற்சி போன்றவை நோயெதிர்ப்பு சக்தியைப் பெருக்குவதில் பெரும்பங்கு வகிப்பவை. இதுபோன்ற காலங்களில் அவற்றின் அருமை கூடுதலாவே தெரியும். தேகத்தைத் தாக்கும் நோய்களைப் போலவே தேசத்தைத் தாக்கும் நோய்களுக்கும் எதிர்ப்பு சக்தி அவசியம்.

ஊடகங்கள் விழிப்புணர்வை வளர்க்கப் பயன்படுவது உவப்பானது. சில மிகைத் தகவல்களால் தேவையில்லாத அச்சம் பரவுவதைத் தவிர்க்கும் விதமாய் செயல்படுவதும் ஊடகங்களின் கடமை. ஏனெனில் எல்லாக் கிருமிகளைக் காட்டிலும் கொடியது… அச்சம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *