புது வாசல்

நூற்றுக்கு நூறு இயக்கம்
நீங்களும் சுய முன்னேற்ற பயிற்சியாளராகலாம்

நூற்றுக்கு நூறு இயக்கம்

எல்லோரும் வெற்றியாளர்கள்தான் என்பதை எல்லோருக்கும் உணர்த்தும் இம்முயற்சிக்கு நூற்றுக்கு நூறு என்ற வார்த்தைதான் பொருந்தும் என்பது யோசிக்கும்போதே முடிவாகிவிட்டது. ஆனால் இயக்கம்?

இயக்கம் – சாதாரண வார்த்தையல்ல… மிகப்பெரிய அர்த்தம் கொண்டது. மகாத்மா காந்தி போன்றவர்கள் நடத்திக்காட்டியது.

நல்ல நோக்கத்துடன் துவங்கப்பட்ட பல இயக்கங்கள் துவக்கியவர்களின் காலத்துக்குப்பின் துவண்டுவிட்டதை கண்டதால் இயக்கம் என்பது சாத்தியமா? என்ற கேள்வி மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது. இயக்கம் என்பது இயங்கிக்கொண்டே இருப்பது. தொடங்கியவர்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் என்று யோசிக்கும் போதுதான் ஓர் உண்மை புரிந்தது அது:-

தங்கள் குழந்தைகள் வெற்றி பெற வேண்டும் என்றே எல்லோரும் விரும்புகிறார்கள்., அதற்காகவே தங்கள் வாழ்வில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் குழந்தைகள் நிச்சயம் வெல்வார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதும், உங்கள் குழந்தைகளை அன்பாக அணுகி அவர்களிடம் தன்னம்பிக்கை ஏற்படுத்துங்கள், நேர்மறை சிந்தனையை மட்டும் அவர்களுக்குள் விதையுங்கள் என்று சொல்வதும்தான் எங்கள் இயக்கப்பணி.

இது சாத்தியமா? உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் 6 கோடி பேர், ஒரு வீட்டிற்கு நான்கு பேர் எனில் 1 1/2 கோடி குடும்பங்கள், யோசித்தால் மலைப்பாக இருக்கும். செயல்பட்டால் எளிதாகிவிடும்.

நூற்றுக்கு நூறு இயக்கத்தை சாத்தியமாக்கும் திட்டம்தான்… – ஊருக்கு நூறு பேர்.

வெற்றிக்குத் தேவையான நேர்மறை சிந்தனையை, நேர்மறை அணுகுமுறையை ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் விதைக்க… முதல் கட்டமாக இந்த ஆண்டுக்குள் தமிழகத்தில் பயிற்சியாளர்களை ஒன்றிணைப்பது எனவும் அடுத்த கட்டமாக ஊருக்கு நூறு பேர் என்ற இலக்கோடு நூற்றுக்கு நூறு இயக்கத்தின் செயல் வேகத்தை அதிகப்படுத்துவது எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வாகனத்தின் இயக்கத்தை துவக்கி வைக்கும் சாவி போலத்தான் நாங்கள். இந்த மாற்றத்தை நீங்கள்தான் செய்யப்போகிறீர்கள்.

காந்தியடிகள் தண்டி யாத்திரை துவங்கியயோது அவருடன் இருந்தவர்கள் விரல்விட்டு எண்ணிவிடும் அளவுதான். ஆனால் அவர் யாத்திரையை நிறைவு செய்தபோது கோடிக்கணக்கானவர்கள் உடனிருந்தார்கள்.

ஆனால் நாம் (குழந்தையை) தண்டிக்காதே யாத்திரை துவங்கும்போதே நமது நிகழ்ச்சிகளில் பங்கேற்று இனி குழந்தைகளுக்கு நம்பிக்கைச், சிந்தனைகளை மட்டுமே தருவோம் என்று உறுதி ஏற்ற ஆயிரக்கணக்கானவர்கள் உடனிருக்கிறார்கள். நாம் இந்த யாத்திரை நிறைவு செய்யும்போது இந்த உலகமே நம் பக்கம் இருக்கும்….
என்றென்றும் நம்பிக்கையுடன்…
கிருஷ்ண. வரதராஜன்
சுதந்திரா ஹாலிடே ஸ்கூல்
நூற்றுக்கு றூறு இயக்கம் WWW.CENTUMMOVEMENT.IN

6 Responses

 1. A.A.DILIPKUMAR

  i am a regular reader of namadhu nambikkai. i want to join nootrukku nooru iyakkam. i am very interestedto become a trainer of motivation. please inform regarding this. i am in madurai. ok.

  thans
  dilipkumar.

 2. ramanathan subbiah

  i read your book.iwould like to meet you and see how i can participate in your organisation.
  thankyou.
  ramanathan subbiah
  chennai.
  9840070096

 3. S.SWAMINATHAN

  Respected sir,

  I am regular reader of “NAMATHU NAMBIKKAI” since December 2008. And I appreciate the efforts taken to publish such a wonderful magazine in TAMIL and this is the need of the hour for our society.

  I am S.SWAMINATHAN, aged 42 years, and a B.COM., graduate working in a private company as operator, I am also serving as a LIC AGENT, and MUTUAL FUND ADVISOR.

  Hereby I request you to consider my name for ‘SELF DEVELOPMENT TRAINER’ which you have planned to train atleast 100 persons for a village.

  I am residing in PLOT NO.7, JAGADEESH NAGAR, URAPPAKKAM WEST.PIN 603 211.Kancheepuram District.

  Thanking you, Yours faithfully,

  S.SWAMINATHAN.

 4. Rtn.P.S.GANESAN

  Dear Sir, I Regularly Reade your NAMATHU NAMBIKKI Since2004nd I Appreciate your valuable thoughts,Motivations and your Human Resource Development Service. And I Would Like To Join Your Organisation. Furtherly you please contact; Rtn.P.S.GANESAN ,Correspondent,
  St.THOMAS SCHOOL,
  3/28-B Savulur X Road, KAVERIPATINAM.Krishnagiri Dist.635112.
  PH.NO;04343-250800,CELL;9842285267

 5. Selvam

  Hello sir,

  I was in search of a topic in Namadhu nambikai – Appavuku oru kaditham
  which i couldnt find again which i read once.

  can u please advise me in which month edition it was published or reuqesting you to mail me the same,

  thanks and regards,
  Pulavar.Selvam

 6. SAKTHIVEL.C

  DEAR SIR, I AM A REGULAR READER OF NAMATHU NAMBIKKI. I CONGRATULATE YOUR VALUABLE THOUGHTS,MOTIVATIONS AND PRESENTATIONS.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *