நீண்ட காலத்தில் நம்பிக்கை வையுங்கள்

சோம. வள்ளியப்பன்

(கோவையில் 20.09.2009 அன்று நடந்த வல்லமை தாராயோ நிகழ்ச்சியில் திரு. சோம. வள்ளியப்பன் அவர்கள் ஆற்றிய எழுச்சியுரையின் சில பகுதிகள்)

நமது நம்பிக்கை மாத இதழும், கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் வல்லமை தாராயோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நீண்ட காலத்தில் நம்பிக்கை வையுங்கள், ‘பிலிஃப் இன் லாங் டர்ம்’ (Belief in Long term) என்பது, நான் இன்றைக்கு பேசவிருக்கிற பொருள்.

இன்றைக்கு இங்கே இவ்வளவு நபர்கள் கூடியிருக்கிறீர்கள். சுமார் 90 நிமிடங்கள் வரை நான் பேசப்போகிறேன். அப்படி என்றால், சுமார் 1200 மனித மணி நேரத்திற்கு (மேன் அவர்ஸ்)க்கு நான் பொறுப்பு. அது பயனுள்ளதாகவே நகரும் என்று நான் நம்புகிறேன். நீங்களும் அந்த நம்பிக்கையுடனே இங்கே வந்திருக்கிறீர்கள்.

இப்படி நேர்மறையாக எதிர்பார்ப்பது பாசிட்டிவ் எண்ணம். இப்படி எண்ணுவதால், சிலவிடுகிற நேரம் கட்டாயம் முதலீடாக மாறும். நிச்சயம் பலருக்கு பலன் தரும். இப்படி பாசிட்டிவ் ஆக இருந்த ஒருவரைப் பற்றி சொல்லுகிறேன். அந்தப் பெண்மணிக்கு வயது எழுபதிற்கும் அதிகமிருக்கலாம். ஒரு மருத்துவமனைக்கு செல்கிறார். அவருக்கு எந்த அறை என்று முடிவு செய்யப்படும்வரை பொறுமையாக காத்திருக்கிறார். சற்று நேரத்தில் அறை எண் முடிவாகிறது. வாருங்கள் என்று அவரது பையை எடுத்துக்கொண்டு மருத்துவமனை ஊழியர் முன்னே நடக்கிறார். போகும் வழியில் அந்த மூதாட்டியிடம் அவர் சொல்லுகிறார்,

‘மேடம், உங்கள் அறை எண் ஐந்து. அந்த அறை……’

அவர் சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் அந்தப் பெண்மணி சொல்லுகிறார்,

‘நல்ல அறை…..’

‘கரெக்ட். அந்த அறையில் வெளிச்சம்…..’

‘நன்றாகவே இருக்கும்….’

ஊழியருக்கு ஆச்சரியம். நின்று திரும்பிப் பார்த்து அந்தப் பெண்மணியைக் கேட்டார், ‘என்ன மேடம், நீங்க அந்த அறையை இன்னும் பார்க்கவேயில்லை. அதற்குள்ளாக அது நல்ல அறை, காற்றோட்டமாக இருக்கும் என்றெல்லாம் சொல்லுகிறீர்களே!’ மென்மையாக சிரித்தார். பின்பு, ‘தம்பி, அந்த அறை எப்படியிருக்கும் என்று நான் ஏற்கனவே இங்கே முடிவுசெய்துவிட்டேன்’ என்று சொல்லியபடியே தனது தலையை தொட்டுக் காட்டினாரே பார்க்கவேண்டும். தொடர்ந்து, ‘அது நன்றாக இருக்கும் என்று நான் ஏற்கனவே முடிவு செய்துவிட்டதனால், அது எனக்கு நன்றாக இருக்கும்’ என்றார்.

‘மேன்ஸ் சர்ச் பார் மீனிங்’ புத்தகத்தில், #பிராங்கிளின் விக்டர் சொன்னதுபோல, எதையும் நாம் எப்படி பார்க்கவேண்டும், எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிற சுதந்திரம் நம்மிடம்தான் இருக்கிறது. நல்லது என்று பார்த்தால் நல்லதுதான். வீட்டிற்குள்ளும் வெளியிலும் பலரையும் சந்திக்கிறோம். நிலைமை எப்படியும் இருக்கலாம். ஆனால் அவற்றை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற மனப்பான்மை நம்மிடம்தான் இருக்கிறது.

ஒரு இளம் தம்பதியர் அவர்கள். விடிகாலை நேரம். கணவன் மனைவி இருவரும் படுக்கையில் மல்லாந்து படுத்திருக்கிறார்கள். ஜன்னல் வழியாக தெரிந்த எதிர்வீட்டினைப் பார்த்தபடி மனைவி சொன்னாள், ‘பாருங்கள் அவர்கள் வீட்டில் காயப்போடப்பட்டிருக்கும் துணிகளை! எல்லாம் பழுப்பு நிறம். எவ்வளவு அழுக்காக இருக்கிறது சே!’.

அடுத்த நாள் காலை மனைவியின் கண்கள் மீண்டும் எதிர்வீட்டுப்பக்கமே. படுக்கையில் படுத்திருந்தபடியே கணவனிடம் சொன்னார், ‘பாருங்கள், அவர்கள் வீட்டில் நிற்கும் வெள்ளை நிறக் காரின் லட்சணத்தினை! எவ்வளவு தூசி. துடைக்கக்கூடாது?’

மூன்றாம்நாள், மனைவி ஏதோ சொல்ல எத்தனிக்க, கணவன் படுக்கையில் இருந்து எழுந்தான். ‘கொஞ்சம் பொறு’ என்று சொல்லிவிட்டுப்போய், ஒரு துணி எடுத்துவந்தான். அவர்களுடைய அறையில் இருந்த கண்ணாடி ஜன்னலை அந்த ஈரத்துணியால் அழுந்த துடைத்தான். படுக்கையில் இருந்து பார்த்த மனைவிக்கு அதிர்ச்சி, இப்போது எதிர்வீட்டில் காய்ந்து கொண்டிருந்த துணிகளும், காரும் மற்ற பிறவும் சுத்தமாகவே இருப்பது தெரிந்தது.

அழுக்கு எங்கே இருக்கிறது? எல்லாம் பார்ப்பவரிடத்தில் அல்லவா இருக்கிறது!

மற்றவர்களின் கோணத்தில் இருந்தும் பார்க்கத் தெரிந்தவர்கள் வெற்றி பெறுகிறார்கள். சாலையில் காரில் போகிறோம். குறுகலான சாலை. எதிரிலும் வண்டி. சில ஓட்டுனர்கள் என்ன செய்வார்கள் என்று பார்த்திருப்பீர்கள். தங்கள் வண்டியை சற்றுத் தள்ளியே நிறுத்திக்கொண்டுவிட்டு, எதிரில் வரும் வண்டியைப் பார்த்து ‘நீ முன்னால் வா. போய்க்கொள்’ என்பது போல சாடை காட்டுவார்கள். வழிவிடுவார்கள். இப்படிச் செய்வது எதிராளியிடமும் அதே பண்பினைத் துளிர்க்க வைக்கும். பதிலுக்கு அவர் ‘நீங்க வாங்க’ என்பார். இவர் வழிவிடுவார். ஈகோவை விடவேண்டும்.

எமன் ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.

அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார். தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார். எமன் வந்தார். பார்த்தார், திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டுதான் என்பதை யூகித்துவிட்டார். ஆனால் எவை சிலைகள், எது சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தி. தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே! நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

யோசித்தார். ஒரு யோசனை வந்தது. சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், ‘அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது. என்னாலேயே எது சிலை எது ஆள் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே!’ இப்படி சொல்லிவிட்டு மூன்று சிலைகளையும் உன்னிப்பாக கவனித்தார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது. தற்பெருமைதான், வேறென்ன!. சடாரென வீசினார் கயிற்றை. கெடுத்தது எது? தான் என்கிற ஈகோ.

பலருடைய பிரச்சனைகளுக்கு, மனவருத்தங்கள், சோர்வுகளுக்கு காரணம்,

3 Responses

  1. athi

    Pastive approach can win anything.
    We will try…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *