பலகையிழந்த பல்கலைக்கழகங்கள்
இன்று உலகளாவிய நிலையில் கல்வி நிறுவனங்கள் வெகுவேகமாக வளர்ந்து வருகின்றன. சர்வதேச தரமுள்ள கல்வியை வளர்ந்த நாடுகளுடன் சரிநிகர் சமானமாய் வாங்குவதில் இந்தியா முன்னேறி வருகிறது.
இந்நிலையில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பலவற்றின் அங்கீகாரங்களை அரசு ரத்து செய்துள்ளது. அவை கல்வி நிறுவனங்களாய், கல்லூரிகளாய் தொடரலாமா என்பதும் அதில் இதுவரை படித்த மாணவர்களின் நிலை குறித்தும் இந்நேரம் தெளிவாகியிருக்கும்.
ஆனால் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்கிற அந்தஸ்து எந்த அடிப்படையில் தரப் படுகிறது என்பதையும் எதனால் ரத்தானது என்பதையும் அறியும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
மிகச்சமீபத்தில்தான் தொடக்கப்பள்ளிகள் தொடர்பான விதிகளையும் அரசு கடுமையாக்கி இருக்கிறது. அங்கீகாரமிழந்த பள்ளிகள், பயிற்சிக் கல்லூரிகள் தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரை பட்டியல் பட்டியலாய் வெளியிடப்படும் நிலையில் கல்வி குறித்த நம்பிக்கைமிக்க சூழலை உருவாக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு.
Leave a Reply