மாத்தி யோசி
– ரமேஷ் பிரபா
பயனற்ற ஞாயிற்றுக்கிழமையை பயனுள்ள ஞாயிற்றுக்கிழமையாய் மாற்றி வெற்றிவாசல் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவரையும் பாராட்டுகிறேன். பணம் கொடுத்து நிகழ்ச்சிகள் கேட்கிறோம், புத்தகம் வாங்குகிறோம். செலவே இல்லாமல் நம்மை உற்சாகப்படுத்துகிற விஷயம் கைதட்டல். நம் அனைவரில் பலருக்கு கை தட்டுவதும், சிரிப்பதும் கௌரவக் குறைச்சல் என்ற எண்ணம் இருக்கலாம். அது முற்றிலும் தவறானது. கைதட்டி பாராட்டுவதும் வாய்விட்டு சிரிப்பதும் வெற்றியின் அடையாளம், உற்சாகத்தின் அடையாளம்.
இங்கே இருக்கும் வாசகர்களை நான் ஒரு வித்தியாசமான பார்வையில் பார்க்கிறேன். வெற்றி வாசல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள 700 வாசகர்களில் குறைந்தது 200 நபர்களாவது சிறந்த பேச்சாளர்களாக இருப்பார்கள் என்பதை நான் அறிவேன். வெற்றி வாசல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அத்தனை வாசகர்களும் சிறந்த படிப்பாளிகள். உங்கள் முன் பேசுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
பெரும்பாலும் மதிய நேரங்களில் கூட்டங்கள் கேட்கிறபோதும், வகுப்பறையில் பாடம் கேட்கிறபோதும் நமக்கு ஒரு விதமான உடல் தளர்வு ஏற்படுகிறது. அதற்கான காரணம் என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
ஒரு நாளின் உச்சபட்ச வெட்பம் மதிய நேரங்களில்தான் மையம் கொள்கிறது. அந்த சமயத்தில் எப்பேர்ப்பட்ட சுவாரஸ்யமான தகவலையும் நம் மனம் ஏற்பதில்லை என்ற செய்தியுடன் “மாத்தி யோசி” என்ற தலைப்பினுள் செல்வோம்.
இன்று நான் படித்தவனாகவும் நம்மில் பலரும் படித்து சிறந்தவர்களாகவும் விளங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன் நம் பாட்டனான தந்தை பெரியார் அவர்கள் மாற்றி யோசித்ததே இந்த வளர்ச்சிக்கான காரணம். இன்று நம்மால் யோசிக்கக்கூட முடியாத பல விஷயங்களை 70, 80 ஆண்டுகளுக்கு முன்னரே யோசித்து அதில் வெற்றியும் காண்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். மாற்றி யோசித்த பல துணிச்சலான சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, “வெற்றி வாசல்” நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெண்கள் கூட்டத்தை. இந்த மாற்றம் வரவேண்டும், “பெண் கல்வி” வளர வேண்டும் என்றுதான் அன்று பெரியார் யோசித்தார். அதற்காக பாடுபட்டார்.
“பெண்கல்வி” என்பதற்கு பெரியார் கொடுத்த விளக்கம் மிக சிறந்த ஒன்று. ஓர் ஆண் கல்வி கற்கிறபோது அந்தக் குடும்பத்தினுடைய பொருளாதாரச் சூழலும் தலையெழுத்தும் மாறும். ஆனால் ஒரு பெண் கல்வி கற்கிறபோது அந்தத் தலை முறையின் தலையெழுத்தே மாறும். அதன் பிறகு அந்தத் தலைமுறையில் படிக்காத குழந்தைகளே இருக்க மாட்டார்கள். இதுதான் ஆண் கல்வி கற்பதற்கும் பெண் கல்வி கற்பதற்குமான வித்தியாசம்.
நான் “மாத்தி யோசி” என்ற இந்த வார்த்தையை வெவ்வேறு பார்வைகளில் பார்க்கிறேன். நம்மில் அனைவரையும் மூன்று பிரிவாக பிரித்துவிடலாம். ஒன்று மாணவர்கள். இரணடாவது வேலை செய்பவர்கள் அல்லது தேடுபவர்கள். மூன்றாவது தொழில் செய்பவர்கள். “மாற்றி யோசி” என்கிற இந்த கருத்தாக்கம் இந்த மூன்று பிரிவினருக்கும் எப்படி பயன்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.
அடிப்படையில் கல்வி. இன்று உயர் கல்வியின் சதவீதம் உயர்ந்திருக்கிறது. பெண்களை கல்லூரி விடுதிகளில் தங்க வைத்த காலங்கள் மறைந்து இன்று வீட்டின் அருகிலேயே கல்லூரிகள் உருவாகிவிட்டன. ஆனால் எந்த படிப்பை படிக்க வேண்டும் என்பதில் மாற்றி யோசித்திருக்கிறோமா என்றால் இல்லை. நெடுநாட்களாகவே படிப்பு என்றால் முதல் இரண்டாம் இடம் வகிப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது பொறியியலும், மருத்துவமும்தான். மருத்துவமும் பொறியியலும் படிப்பது தவறல்ல. ஆனால் ஏன் அந்தப் படிப்பை தேர்வு செய்கிறோம் என்ற தெளிவு நமக்கு வேண்டும். முந்தைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் (ஐப) துறைதான் அனைவரின் வருங்காலம் என்று சொல்லப்பட்டது. ஏன் தகவல் தொழில்நுட்பம் எதற்காக? இந்த துறையை படிக்கிறோம் என்ற தெளிவு இல்லாமல் அனைவரும் இந்தத் துறையையே தேர்ந்தெடுத்தார்கள். இன்று தகவல் தொழில் நுட்பத் துறை மிகுந்த வீழ்ச்சியடைந்துள்ளது. அதனால் இன்று யாரும் இதைப்படிக்க முன் வருவதில்லை. இன்று வீழ்ச்சி கண்டுள்ள இந்த துறை 4 ஆண்டுகளில் மீண்டும் புத்துயிர் பெறலாம். இந்த தொலைநோக்குப் பார்வை பலருக்கு இல்லை. விவசாயத்தில் நாம் பயன்படுத்துகிற விதிமுறையை அப்படியே கல்வியிலும் புகுத்த ஆரம்பித்து விட்டோம். ஒரு விவசாயி தக்காளி விளைவித்தால் அனைத்து விவசாயிகளும் தக்காளியை பயிரிடுவார்கள். அப்பொழுது தக்காளியின் விலை சரிந்துவிடும். அடுத்த ஆண்டு ஒருவர் அதை பயிரிடத் தயங்கினாலோ தவறினாலோ மற்றவர்களும் அதையே தொடருவார்கள். இந்த விதிமுறையை கல்வியில் பயன்படுத்துவதால் ஏன் படிக்கிறோம், எதற்குப் படிக்கிறோம் என்ற தெளிவு இல்லாமல் வீட்டு அருகில் இருப்பவர் படிக்கிறார், என் நண்பன் இந்தத் துறையை தேர்வு செய்து படிக்கிறான் என்ற காரணங்களுக்காக இன்றைய மாணவர்கள் பொருந்தாத துறையை தேர்வு செய்கிறார்கள்.
பெரும்பாலான பெற்றோர்களும் இதற்கு காரணம். மூன்று வகையான பெற்றோர்கள் உண்டு. எனக்கு படிப்பை பற்றி எதுவும் தெரியாது. நீயே உன் படிப்பை தேர்வு செய்துகொள் என்பது முதல் வகை. இவர்களால் எந்தப் பிரச்சனையும் கிடையாது. ஓரளவு படிப்பைப் பற்றி விபரம் தெரிந்த பெற்றோர்கள் இரண்டாம் வகை. அவர்களாலும் பிரச்சனை கிடையாது. வெறும் அரைகுறையான தகவல்களை தெரிந்துகொண்டு பிள்ளைகளின் விருப்பத்திற்கும் விடாமல் தங்களையும் குழப்பிக் கொண்டு சரியான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறிப் போவார்கள்.
அதேபோல் மாணவர்களிடமும் தவறான பழக்கம் ஒன்று உண்டு. பள்ளி பருவத்திலிருந்தே ஒன்றாகப் படித்தவர்கள் என்று கூறி தன் நண்பர் வட்டம் எடுக்கிற முடிவிற்கு உடன்படுவது. மொத்தத்தில் ஒரு படிப்பை தேர்வு செய்கிறபோது அனைவரும் இன்றைய சூழலில் முடிவு செய்கிறோம். மாணவர்கள் படிப்பை முடிக்கும் 3 ஆண்டுகள், 4 ஆண்டுகள் கழித்து எந்த சூழல் இருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
உதாரணமாக பொறியியலில் பல துறைகள் உண்டு. அதில் குறிப்பிட்ட துறையை படித்தே தீருவேன் என்ற முனைப்புடன் படிக்கும் மாணவர்களும், மற்ற துறையைச் சேர்ந்த மாணவர்களும் இன்று நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்டு அனைவரும் அடுத்தடுத்த மேசையில் அமர்ந்து வேலை பார்க்கும் அவல நிலைதான் இன்று உள்ளது. அப்படியாகின் நீங்கள் குறிப்பிட்ட துறையை தேர்வு செய்து படித்ததற்கான தனித்துவம் எங்கே என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.
பெரும்பாலானோர் பொறியியல், மேலாண்மை போன்ற படிப்பை படிப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப் பட்ட 450 கல்லூரிகளில் நம் பிள்ளைகளை சேர்ப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுகிறோம். ஆனால் இவை அனைத்தையும் தாண்டி சென்னை தரமணி, அடையார் பகுதிகளில் ஐஐப (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) என்ற மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மேலாண்மை மற்றும் பொறியியலுக்கான உச்சபட்ச சிறந்த கல்லூரி. இதை அறிந்தவர்கள் வெறும் 1 சதவீதம்தான். அதற்காக முயற்சி செய்கிறவர்களின் சதவீதம் அதைவிட குறைவு. பல்வேறு படிப்புகளும், துறைகளும் இருக்கிறபோது மாணவர்கள் ஒரே துறையை தேர்வு செய்து படிப்பதால் வேலை வாய்ப்பு சிக்கலாகிப் போகிறது. இந்த கடின போட்டியில் வேலையை பெற்று வெற்றி பெறுகிற மாணவர்கள் நிச்சயம் மாற்றி யோசித்திருப்பார்கள்.
ஒரு சில பட்ட படிப்புகள் மிகவும் கடினமானது. பலரால் முத்திரையிடப்பட்டு அதை தேர்வு செய்ய யாரும் முன் வருவதில்லை. உதாரணமாக சி.ஏ., (இ.அ.,), ஐஇர, அஇந போன்ற படிப்புகளெல்லாம் நல்ல வாய்ப்புகள் குவிந்து கிடக்கும் துறைகள். குறிப்பாக ஐஅந, ஐடந போன்ற தேர்வுகளெல்லாம் இந்திய போட்டித் தேர்வுகள். தற்பொழுது ஐஅந தேர்வினை தமிழிலும் எழுதலாம். ஐஅந தேர்வுகளைப் பொறுத்தவரை எந்த மாநிலத்திற்கும் இட ஒதுக்கீடு கிடையாது. ஒரே மாநிலம் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவது தேர்வாளர்களின் திறமையை பொறுத்தது. இதை மனதில் கொண்டு சற்று மாற்றி யோசிக்கவேண்டும். தமிழில் தேர்வு எழுதுகிற போது அதை திருத்துபவர் தமிழ் ஆசிரியராகத்தான் இருக்க வேண்டும். அந்த தமிழுணர்வு நம்மை வெற்றி பெறவைக்கும்.
உதாரணமாக, நான் சன் டிவி-யில் முதல் நாள் முதல் நிகழ்ச்சியை வழங்கியபோது ஒரே ஒரு சேனல்தான். ஆனால் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட சேனல்கள். இவை அனைத்திலும் வேலை பார்ப்பவர்கள் அதற்கான படிப்பை பிரத்யேகமாக படித்தவர்கள் அல்ல. விஷுவல் கம்யூனிகேஷன் போன்ற படிப்புகள் எல்லாம் ஊடகத் துறைக்கு வர நினைப்பவர்கள் தேர்வு செய்து படிப்பது நல்லது. இன்னும் இதுபோல் பல உதாரணங்கள் உண்டு.
எதிர்காலத்தில் நம் படிப்புமுறை மாற வேண்டும். யாரும் பட்டம் சார்ந்து படிக்கக் கூடாது. துறை சார்ந்து படிக்க வேண்டும். எந்தத் துறையில் வாய்ப்புள்ளது என்பதை தெரிந்து படிக்க வேண்டும்.
அடுத்து வேலை வாய்ப்பு. இன்று கல்லூரிகளில் நடைபெறும் வளாக நேர்காணல்களாக இருந்தாலும் சரி, தனியாக சென்று வேலை வாய்ப்பை தேடுவதாக இருந்தாலும் சரி, ஒரு சில சதவீதம் மாணவர்களுக்குத்தான். இதற்கு நாம் சொல்லும் காரணம் சிபாரிசிலும், பணம் கொடுத்தாலும் வேலை கிடைக்கிறது என்பதே. இது நம்மை ஆறுதல் படுத்திக்கொள்ள சொல்லப்படும் காரணமே தவிர இது உண்மையில்லை. பத்திரிகைகளில் பல ஆயிரம் பணங்களை கொட்டி வேலைக்கு ஆட்கள் வேண்டி அறிவிப்பு வருகிறது. அவர்களுக்கெல்லாம் சிபாரிசு மூலமாகவும் பணத்தைக் கொட்டிக் கொடுத்தும் வேலைக்கு ஆட்களை எடுக்கலாம். இருப்பினும் இதுபோன்ற விளம்பரங்கள் வெளியிடுவதன் காரணம் தகுதியான ஆட்கள் வேலைக்கு தேவையென்பதே.
உதாரணமாக, சில ஆண்டுகள் முன்பு என் அலுவலகத்தில் கணக்கர் பணிக்கு ஆட்கள் தேவை என்ற அறிவிப்பை ஹிந்து பத்திரிகையில் வெளியிட்டேன். எனக்கு வந்த மொத்த விண்ணப்பங்கள் 425. இதில் 85 பேர் பொறியாளர்கள். 20 பேர் மேலாண்மை படித்தவர்கள். இவர்களுக்கு கணக்கர் பணிக்கான எந்த அடிப்படையும் தெரியாது. 425 விண்ணப்பங்களில் நான் மொத்தம் 25 நபர்களை தேர்வு செய்தேன். 425 பேரில் வெறும் 25 நபர்களை தேர்வு செய்வது எனக்கு சுலபமாக இருந்தது. காரணம் பட்டப்படிப்பை மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் அடிப்படை விஷயமான தன் விபர குறிப்பு (க்ஷண்ர்-க்ஹற்ஹ) தயார் செய்யத் தெரியவில்லை. இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். இதில் பலர் தங்கள் தன் விபர குறிப்பின் நகலில் கையெழுத்துகூட போடாமல் அனுப்பி வைத்திருந்தார்கள். இவர்களுக்கு தன்னைப் பற்றியே திறம்பட சொல்ல இயலவில்லை. வேலை வேண்டி அனுப்புகிற விண்ணப்பத்தில் கையெழுத்துப் போட வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சிகூட இல்லாதவர்களை 425 விண்ணப்பங்களில் என்னால் சுலபமாக அடையாளம் காண முடிந்தது. 25 நபர்களில் 5 நபர்களை நான் நேர்காணலுக்கு அழைத்தேன். காரணம் 425 நபர்களில் அந்த ஐவர்தான் மாற்றி யோசித்தவர்கள்.
இன்று வேலைக்கு ஆட்களை எடுப்பதில் பல தேர்வு முறைகள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது கூட்டு விவாதம் (எழ்ர்ன்ல் ஈண்ள்ஸ்ரீன்ள்ள்ண்ர்ய்), பொது அறிவு என இன்னும் பல. நம்மில் பலருக்கு கூட்டத்தில் பேசுவது என்பதும் ஆங்கிலத்தில் நம் கருத்துக்களை சொல்வதும் மிக கடினமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக பொது அறிவு சார்ந்த விஷயங்களிலும் நாட்டு நடப்புகளிலும் சரியான தெளிவு இல்லை. எனவே வேலை பெறுவது கடினமாகிறது. இதையே நாம் சற்று மாற்றி யோசித்தால் வெற்றியாளர் ஆகிவிடலாம்.
அதற்கு உதாரணமாக என் வாழ்வில் நடந்த சம்பவம். நான் பொறியியல் முடித்து ஐஐங (ஐய்க்ண்ஹய் ஐய்ள்ற்ண்ற்ன்ற்ங் ர்ச் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற்) இல் சேருவதற்காக பல தேர்வு முறைகள் இருந்தது. பல லட்சம் மாணவர்களில் நூறு பேர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அங்கே படிக்க வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். நான் பல சுற்றுகள் தேறி கூட்டு விவாதத்தில் பங்கேற்றேன். மொத்தம் 8 பேர் என்னுடன் கலந்து கொண்டார்கள். அதில் 3 பேர் நிராகரிக்கப்பட்டு 5 பேர் அடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனக்கும் பொது அறிவு சரியாக தெரியாது. தமிழ் வழி கல்வி கற்றவன் என்பதால் ஆங்கிலம் சரியாக பேச வராது. இந்த கூட்டு விவாதத்தை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்தேன். கூட்டு விவாதங்களின் அடிப்படை நோக்கமே நம் அறிவை சோதிப்பது அல்ல. நம் பண்புகளையும் குணங்களையும் அறிந்து கொள்வதேயாகும். இந்த சிந்தனை எனக்கு தோன்றியவுடனே என்னால் இந்த சுற்றை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வந்தது. எங்கள் விவாதத்திற்கு ‘பஞ்சாப் பிரச்சனை’ என்று தலைப்பு வழங்கப்பட்டது. அதற்கு மூன்று பேனலிஸ்ட்டு தலைமை வகித்தார்கள். அவர்கள் இந்த தலைப்பைச் சொல்லி விவாதத்தை துவங்க சொன்னவுடன் நான் எழுந்து அவர்கள் சொன்னதையே திரும்ப சொன்னேன். “ஊழ்ண்ங்ய்க்ள் ப்ங்ற் ன்ள் க்ண்ள்ஸ்ரீன்ள்ள் ர்ய் ல்ன்ய்த்ஹக்ஷ ல்ழ்ர்க்ஷப்ங்ம்” உடனே எனக்கு பொறுப்பை ஏற்று முன் நின்று துவக்கியதால் “ஐய்ண்ற்ண்ஹற்ண்ஸ்ங்” என்ற அடிப்படையில் 2 மதிப்பெண்கள் பெற்றேன். “பஞ்சாப் பிரச்சனையை பேசவில்லை ஏன் என்றால் அதைப்பற்றி ஒன்றும் எனக்கு தெரியாது. அந்த விவாதத்தில் பஞ்சாபிலிருந்து வந்த ஒருவர் எழுந்து மிகத் தெளிவாக பேசினார். அதை வைத்து என்ன பிரச்சனை என்பதை புரிந்து கொண்டேன். என் அருகே இருந்தவர் சம்மந்தம் இல்லாத தலைப்பில் எதையோ எழுந்து பேசினார். அதை தவறு என்று மட்டும் சுட்டிக்காட்டி அமர்ந்து கொண்டேன். அப்போதும் “பஞ்சாப் பிரச்சனையை”ப் பற்றி பேசவில்லை. ஆனால் “தலைமைப் பண்பு” என்ற வரிசையில் எனக்கு 2 மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டது. விவாதம் முடிய சில மணித்துளிகள் இருந்த நேரத்தில் நான் எழுந்து மற்ற ஏழு பேர் பேசியதையும் தொகுத்துச் சொன்னேன். அப்போதும் நானாக எதுவும் “பஞ்சாப் பிரச்சனை” குறித்து பேசவில்லை. இருந்த போதும் “நிர்வாகப் பண்பு” என்ற அடிப்படையில் எனக்கு கூடுதல் மதிப்பெண் அளிக்கப்பட்டது. அந்த சுற்றை வெற்றிகரமாக கடந்து, ஐஐங இல் என் படிப்பை முடித்து இன்று ஒரு வெற்றி பெற்ற தொழிலதிபராக விளங்க நான் அன்று மாற்றி யோசித்ததே காரணம்.
நாம் தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து, தாழ்வு மனப்பான்மை போன்ற பிரச்சனைகளை அகற்றி வெற்றி காண்பதே அடிப்படை.
அடுத்து சுயதொழில்:
சுயதொழில் பற்றிய கருத்தாக்கம் பிறக்கும் போதே அதற்கான தடைகளும் தயாராகி விடுகின்றன. அப்பா, அம்மா, மனைவி எச்சரிக்கை செய்வார்கள். அடுத்தது சுயதொழில் செய்வதற்கான முதற்கட்ட பிரச்சனை பணம். பெரும் பாலானோர் சுயதொழில் செய்வதற்கு தயங்கும் காரணமும் இதுவே. இதைப்பற்றி நான் கேவின் கேர் திரு. ரங்கநாதன் அவர்களிடம் பேசிய போது அவர் சொன்ன கருத்து நமக்கு பணம் பிரச்சனை அல்ல, பணத்தை ஈட்டும் வழிமுறை தெரியாததுதான் பிரச்சனை என்று சொன்னார்.
உதாரணமாக எனக்கு தெரிந்த நண்பர்கள் ஐந்து பேர். அவர்கள் அனைவரும் நல்ல பெரிய நிறுவனத்தில் பொறியாளர்களாக வேலை செய்கிறார்கள். அவர்கள் ஐவரும் இணைந்து ஒரு இயந்திரத்திற்கான உதிரி பாகங்கள் தயாரிக்கிற தொழிலை துவங்குவதாக முடிவு செய்து அதற்கு மொத்தம் 13 லட்சம் தேவை என்பதை கணித்திருந்தனர். அவர்களால் 8 லட்சம் மட்டுமே தயார் செய்ய முடிந்த நிலையில் என்னிடம் உதவி செய்யுமாறு கேட்டு வந்தார்கள். நான் அவர்களிடம் உதவி செய்வதாக கூறி அவர்கள் 13 லட்சத்திற்கு போட்டு வைத்த கணக்குகளின் விபரத்தைப் பெற்றுக்கொண்டேன். அதை ஆய்வு செய்தபோது வெறும் ஏழரை லட்சமே போதுமானது என்பது தெரிந்தது. காரணம், இவர்களுக்கு சொகுசு கார், ஏசி அறை என பல உற்பத்தியில்லாத பொருட்களுக்கு கணக்கு போட்டிருந்தார்கள். நான் அவர்களிடம் நிலையை விளக்கி எது தேவையோ அதில் மாத்திரம் பணத்தை முதலீடு செய்யச் சொன்னேன். இன்று அவர்கள் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சுயதொழிலில் நாம் எப்பொழுது மாற்றி யோசிப்போம்?
பிரச்சனைகள், கடும் போட்டிகள் வரும் போதுதான். மாற்றி யோசித்ததால் ஏற்பட்ட பல தொழில் வெற்றிகளின் கேஸ் ஸ்டடி சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஷேம்பூ பாக்கெட்டில் “சேஷே” என்ற கருத்தாக்கம் புகுத்தி சாதனை படைத்தவர் கேவின்கேர் திரு. ரங்கநாதன். 15,000 ரூபாயில் தொழில் துவங்கி வரும் நிதியாண்டில் அவர் நிறுவனத்தின் மதிப்பு 1000 கோடி ரூபாய். இந்நிறுவனத்தை திரு. ரங்கநாதனின் தந்தை திரு. சின்னி கிருஷ்ணன் துவங்கினார். அவர் அண்ணன் திரு. ராஜ்குமார் இதை நடத்தி வந்தார். இவர்களின் முதல் தயாரிப்பு “வெல்வெட்” ஷேம்பூ. ஷேம்பூக்கள் “சேஷே” வடிவில் வரும் முன்னே அதை “பில்லோ பேக்” என்று சிறு தலையணை வடிவில் ஷேம்பூவை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இந்நிறுவனத்தின் விநியோகஸ்தராக உலகப் புகழ் பெற்ற கோத்ரேஜ் நிறுவனம் திகழ்ந்தது. அந்த சமயத்தில் திரு. ரங்கநாதன் இந்நிறுவனத்திலிருந்து வெளியேறி “சிக்” ஷேம்பூ என்ற புதிய நிறுவனத்தை துவங்கினார். பலரும் அவரிடம் கோத்ரேஜ் போன்ற உலகப் புகழ் பெற்ற நிறுவனத்துடன் மோத முடியுமா என்று அவரிடம் கேட்டார்கள். அப்பொழுது அவர் மாற்றி யோசித்தார். பெரிய நிறுவனங்கள் பெரிய நகரங்களில் மட்டும்தான் கவனம் செலுத்தி வருகின்றன. ஆகையால் தன் நிறுவனம் கடை கோடி கிராமத்தில் இருக்கும் சிறு கடைகளில் கிடைக்க வேண்டும் என களப்பணியாற்றினார். அவர்களின் தயாரிப்பு பெரிய சர்வதேச சந்தையில் 10 பொருட்கள் விற்றால், “சிக்” ஷேம்பூ உள்ளூர் சந்தையில் 100 பொருட்கள் விற்று விற்பனையில் சாதனை படைத்தது. இந்த வித்தியாசமான அணுகுமுறை, துணிந்து முடிவெடுத்த அந்த திடம் இன்று நாட்டின் முன்னணி ஷேம்பூ நிறுவனமாக திகழ வழிவகுத்தது.
அடுத்து, டி.வி.எஸ் 50 என்ற இரு சக்கர வாகனம் மிகவும் பிரபலமாகவும் வெற்றிகரமாகவும் இயங்கியபோது அதற்கு போட்டியாக ‘பஜாஜ்’ நிறுவனத்தின் ‘சன்னி’ என்ற வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. அதனுடைய எழில்மிகு தோற்றத்தால் டி.வி.எஸ் நிறுவனம் வாகனத்தின் விற்பனை குறையத் துவங்கியது. இதை உணர்ந்த டி.வி.எஸ் நிறுவனம் அதை சரி செய்யும் விதமாய் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. 7 நாட்கள் தொடர்ந்து, டி.வி.எஸ் வாகனம் இயங்குவது என்று அறிவித்து அதை சாதித்தும் காட்டியது. இதனால் அந்த இயந்திரத்தின் திறன் வெளிப்படையாக மக்களுக்கு புரிந்தது. மக்களை கவர்ந்தது. அதன் மூலம் உண்மையை விளக்க ஒரு சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து விற்பனையை உயர்த்தி இருக்கிறார்கள். இது மாற்றி யோசித்ததால் மட்டுமே சாத்தியப்பட்டது.
மற்றொரு கேஸ் ஸ்டடி. சிடி, டிவிடிக்கள், கண்டுபிடிக்கப்பட்ட காலங்களுக்கு முன்பாக மிகவும் பிரபலமாக விளங்கியது டி-சீரிஸ் கேசட்டுகள். இது மிகவும் பிரபலமடைய காரணம் இதன் மலிவான விலை. இதன் உரிமையாளர் டில்லிகாரர். அவர் குடும்பம் டில்லியில் ஜுஸ் கடை நடத்தி வந்தது. அந்தத் தொழிலில் மாற்றம் தேவை என யோசித்து பாடல் கேசட் விற்பனை தொழிலை செய்ய முனைந்தார்.
விலை உயர்வாக விற்கப்பட்ட பாடல் கேசட்டுகளை மறுபதிவு செய்து விலை குறைவாக விற்க ஆரம்பித்தார். விற்பனை சூடு பிடித்தது. இது சட்டப்படி குற்றம் என்று அவர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட போது அதை உடைக்கும் விதமாய் மாற்றி யோசித்தார். பாடலை நேரடியாக மறுபதிவு செய்தால்தான் குற்றம். எனவே ஒரு இசைக் குழுவின் உதவியுடன் சினிமா பாடல்களை மீண்டும் ஒலிப்பதிவு செய்து கேசட்டுகளை விற்பனைக்கு கொண்டுவந்தார்.
இதன் பெயர் “Version Recording”. இது சட்டப்படி தவறில்லை. பின்பு அதிகாரப்பூர்வமாக திரைப்படங்களின் பாடல் உரிமையை பெற ஆரம்பித்து பின்பு திரைப்படங்களை தயாரிக்கும் அளவு உயர்ந்தார். குடும்ப தொழிலை உதறி சுயதொழில் துவங்க வேண்டும் என்ற துடிப்பும் வித்தியாசமான அணுகுமுறை மேற்கொள்ள அவர் மாற்றி யோசித்ததுமே இந்த வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
அடுத்த சிறு உதாரணம். இன்று கியோகார்பி என்ற கூந்தல் தைலம் மிகவும் பிரபலம். இது பிரபலம் அடையக் காரணம், மற்ற எண்ணெய்கள் போல் இது பிசுபிசுப்பாய் இல்லாததும் இதன் நறுமணமுமே காரணம். இந்த வித்தியாசமான சிந்தனையைக் கண்டறிந்தவர் இதன் உரிமையாளர். இவர் கல்கத்தாவைச் சேர்ந்த டேஸ் மெடிக்கல்ஸ் என்ற நிறுவனத்தில் மருந்து விற்பனையாளராக இருந்தார்.அடிப்படையில் இவர் ஒரு விற்பனையாளர் என்பதால் இவர் விற்பனை யுக்திகளே வித்தியாசமாக இருக்கும். இவர்கள் நிறுவனம் நறுமண திரவியங்களை தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வந்தது. அதன் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வெளிநாட்டவர்களே.
அனைத்து நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் நிகழ்ச்சிகள் பல நடக்கும். அந்த சமயம் தன் நிறுவனத்தின் நறுமண திரவியத்தை சிறு கண்ணாடிக் குடுவையில் அடைத்து பல வெளிநாட்டவர்கள் கூடி இருக்கும் இடத்தில் போட்டு உடைத்து கை தவறி விழுந்தது போல் பாவனை செய்வார். அதன் நறுமணம் அங்கு கூடி இருப்பவர்களை இவரிடம் விசாரிக்கத் தூண்டும். பின்பு தன் சாதுர்யத்தைப் பயன்படுத்தி அனைத்து பொருட்களையும் விற்றுவிடுவார். மாற்றி யோசிக்கும் திறனும் தொழில் சாதுர்யமும் இவர் வெற்றிக்கு வழி வகுத்தது.
இன்னும் இதுபோல் பல உதாரணங்கள் உண்டு. அனைத்தின் சாரமும் கல்வி, வேலைவாய்ப்பு, சுயதொழில் என அனைத்து தளத்திலும் மாற்றி யோசிக்கும் போது தடைகள் நிச்சயம் வரும். அதை தகர்த்தெறிந்து நம்பிக்கையுடன் தொடர்ந்தால் வெற்றி நிச்சயம்.
Leave a Reply