நல்ல நாள்

– மரபின் மைந்தன் முத்தையா

காற்றில் தவழ்கிற ஒருபாடல்– – அது
காதில் விழுந்தால் நல்லநாள்
நேற்று மலர்ந்தது ஒருதேடல்- – அது
நெஞ்சில் இருந்தால் நல்லநாள்
ஊற்றெனப் பொங்கும் உற்சாகம்- – அது

உந்தித் தள்ளினால் நல்லநாள்
போற்றிய கனவுகள் நிஜமானால்- – உங்கள்
பாதையில் அதுமிக நல்லநாள்.

முன்பின் தெரியா ஒருகுழந்தை- – சிறு
முறுவல் சிந்தினால் நல்லநாள்
தன்னைத் தேடும் ஒரு மனிதர்- – உங்கள்
தோள்களைத் தொட்டால் நல்லநாள்
இன்னல்கள் சுமக்கும் ஒருகிழவர்- – அவர்
இரைப்பை நிரப்பினால் நல்லநாள்
இன்னும் இன்னும் எனும் ஆர்வம்- – உங்கள்
இதயத்தில் மலர்ந்தால் நல்லநாள்

வாழ்வின் கடமைகள் நடுவினிலே- – அந்த
வானம் பார்த்தால் நல்லநாள்
தாழ்வும் உயர்வும் இயல்பென்றே- – மனம்
தெளிந்தால் அதுவும் நல்லநாள்
சூழ்நிலை முகிலாய் மறைத்தாலும்- – நாம்
சூரியன் ஆனால் நல்லநாள்
ஆழம் அகலம் உணர்ந்திருந்தால்- வரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *