– சிந்தனைக் கவிஞர் கவிதாசன்
தேடல்தான்
நம்மீது
தெளிவின் வெளிச்சத்தைத்
தெளிக்கிறது!
தேடல்
இல்லாதுபோனால்
நாம்
தொலைந்து போய்விடுவோம்!
வெளியில் தேடுபவர்கள்
வெறும்கையோடு அலைகிறார்கள்
உள்ளுக்குள் தேடுபவர்கள்
உலகையே வெல்கிறார்கள்!
கரையில் தேடுபவனுகுகு
மணலும் கல்லும்தான்!
கடலுக்குள் தேடுபவன்
முத்துக் குவியலுக்கு
முத்தம் கொடுக்கிறான்!
வயதுக்கும் தேடுதலுக்கும்
எந்தவித உறவுமில்லை!
ஏனென்றால்
தேடல் தொடங்கும் போதெல்லாம்
வயது வாலிபமடைகிறது!
இலக்கைத் தேடும்முன்
இறக்கைகளைத் தேடுபவனே
வெற்றிப் பறவையாய்
மகிழச்சி வானில்
சிறகை விரிக்கிறான்!
தேடலைத் தொலைத்தவன்
இளமையிலேயே
முதுமைக்கு
முகவரி எழுதுகிறான்!
வேலையைத் தேடும்முன்
தகுதியை தேடுபவன்தான்
வெற்றியின் கண்களில்
வெளிச்சமாய் நிற்கிறான்.
ஆகவே
தேடலைத் தொடங்கு!
வெற்றியை முழங்கு!
fathima
nice lines i toke it to my book
arulmozhi
un natpin thedalai thodangi viten .e-mail-il alla idayathil