பாதை நீள்வது உனக்காக

– மரபின் மைந்தன் ம. முத்தையா>

மனம் உன் செயல்களைப் பார்க்கிறது- – – அதன்
விழிகள் சூரியர் சந்திரராம்
கானம் உன்குரல் கேட்கிறது– – வரும்
காற்றுக்கும் உள்ளன காதுகளாம்

ஞானம் உனைத்தொட நினைக்கிறது- – இங்கே
நிகழ்பவை அதற்கு வாசல்களாம்
தானே நீயென நினைக்கிறது- – அந்த
தெய்வம் என்பதே வேதங்களாம்!

உள்ளே எல்லாம் இருக்கையிலே- — உன்
உள்ளம் அஞ்சுவ தெதற்காக
பள்ளம் மேடுகள் இருந்தாலும்- – உன்
பாதை நீள்வது உனக்காக
அள்ளிக் கொள்ள வானமுண்டு- — உன்
ஆற்றலை அளந்திடு கணக்காக
தள்ளிப் போட்டதை செய்துமுடி- — இங்கு
தினமும் விடிவதே அதற்காக!

திண்ணைப் பேச்சுகள் உதவாது- — வரும்
தினசரி வதந்திகள் நிலைக்காது
விண்ணைக் குறிவைக்கும் வீரனுக்கு- – -சின்ன
விட்டில் பூச்சிகள் பிடிக்காது
கண்ணில் சூரியன் உதிக்கவிடு- – உன்
கனவுகள் அனைத்தையும் முளைக்கவிடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *