பிரச்சனைக் கணைகள்
உன்னைச் சுற்றிச் சுற்றி
முற்றுகையிடும்போது-
நிதானத்தின் நிழலில்
அறிவிடம் ஆலோசனை நடத்து!
‘தெளிவுவரம்’ வேண்டி
ஞானத்திடம் யாகம் நடத்து!
சோதனைகளை
ஆய்வகங்களாக்கித்
தீர்வுகளின் வெளிச்சத்தில்
உன்னை நீயே வாசி!
புரியவில்லை என்றால்
திரும்பத் திரும்ப யோசி!
சிந்தனைக்குத்தான்
தெளிவின் வெளிச்சத்தை
தேடி எடுக்கும்
வல்லமையிருக்கிறது!
இலட்சிய நெருப்பு
நெஞ்சில் எரிந்தால்
சின்னச் சின்ன சிக்கல்கள்
உன்னைச்
சிறைப்பிடிக்காது!
வெற்றியின் திசைநோக்கி
உனது செயல்கள்
தொடர்ந்தால்
பின்னடைவுகள்
உன்னைப்
பின்னுக்குத் தள்ளாது!
முயற்சிக் கரங்கள்
உயரும் போதெல்லாம்
வெற்றியின் கனிகள்
குவியத் தொடங்குகிறது!
சிரமங்களைக் கடந்தால்
சிகரங்கள் உனதாகும்!
சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன்,
இயக்குனர் மற்றும் தலைவர்,
மனிதவள மேம்பாட்டுத்துறை,
ரூட்ஸ் நிறுவனங்கள், கோவை.
karthik
realy super