உங்களின் தகவல் தொடர்பு சரியான அலைவரிசையில் செல்கிறதா?

– ருக்மணி பன்னீர்செல்வம்

இயற்கையின் படைப்பில் மற்ற உயிரினங்களிலிருந்து மனித இனம் இன்றைய நிலையில் பெரும்வளர்ச்சி பெற்றிருப்பதற்கு அடிப்படையாய் அமைந்தது தகவல் பரிமாற்றம் தான்.

மனிதனால் முதன்முதலில் பயன்படுத்தப் பட்ட தகவல் பரிமாற்ற வழிமுறையானது இன்றைக்கு பெரிதாகப் பேசப்படும் ஆர்க்ஹ் கஹய்ஞ்ன்ஹஞ்ங் எனும் உடலசைவுதான்.

மனித வாழ்க்கையில் பேச்சுக்கலை வளர்ந்த பிறகுதான் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.

நாம் வெளிப்படுத்தும் கருத்துக்கள் தகவல் பரிமாற்றம் வழி எந்த அளவில் மிகச் செம்மையாய் செய்யப்படுகிறதோ, அதைப் பொறுத்துத்தான் நம் எதிர் பார்ப்புகள் நிறைவேறும்.

எந்தவொரு துறையிலும் மிகச்சிறப்பாகச் செயல்படுவதற்கு பல அடிப்படைத் தேவைகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானதாய் இருப்பது தகவல் பரிமாற்றமும், தொடர்புத் திறன்களும்தான். இர்ம்ம்ன்ய்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் நந்ண்ப்ப்ள் எனப்படும் தொடர்புத் திறன்களை ஒவ்வொரு நாளும் நாம் மேம்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

நாமே பணிகளை மேற்கொள்வ தென்றாலும், மற்றவர்களிடம் பணிகளை ஒப்படைத்து வேலை வாங்குவதென்றாலும் தேவையானதை வகைப்படுத்தி தெளிவாகச் சொல்வதும், கேட்டுக்கொள்வதும் இன்றியமையாததாகும்.

இதில் நேரம், காலம், அளவுகள், செலவுகள் இவற்றில் மிகக்கவனமாக தகவல் பரிமாற்றம் நடைபெறுதல் வேண்டும்.

தகவல் பரிமாற்ற இடைவெளி ஏற்படுத்தும் சிக்கல்கள் ‘நெருக்கமானவர்’, ‘வேண்டியவர்’ என்கிற சலுகைகளைக்கூட பறித்துவிடும். எனவே சிறிய வேலையாய் இருந்தாலும், யாரிடம் சொல்லப்படுவதாய், கேட்டுக்கொள்வதாய் இருந்தாலும் தொடர்புத்திறன்களை சரியாகப் பயன்படுத்துதல் முக்கியம்.

நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பணி தொடர்பாகவோ, அல்லது நாம் ஒப்படைக்கும் பணி தொடர்பாகவோ சில நேரங்களில் சின்னச் சின்ன விஷயங்கள் நமக்குத் தெரியாமல், அல்லது பிறருக்குத் தெரிவிக்கப்படாமல் போகும்போது அவற்றை உரியவரிடம் தயங்காமல் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.

இது பெரிய பெரிய பிரச்னைகள் எழாமல் தடுப்பதற்கான செயலாகும்.
‘இந்தச் சின்ன விஷயம் கூடவா தெரியாது’ என்று கேட்டுவிடுவார்களோ என்று அச்சப் பட்டே ஏதாவதொன்றை செய்து, அதற்காக ஏடாகூடமாய் மாட்டிக்கொண்டு விழிப்பதைவிட முதலிலேயே எல்லாவற்றையும் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
ஏதாவது ஒரு வேலை சரியாகச் செய்யப் படவில்லை என்றாலோ, தோல்வியுறுகிறது என்றாலோ அதற்கு பெரும் காரணமாயிருப்பது தொடர்புத்திறன்கள் சரியாக செயல்படுத்தப் படவில்லை என்பதுதான்.

நம்முடைய வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி, நாம் ஒருவருக்கொருவர் எதிர் பார்த்த பணிகளை சரியாகச் செய்யவில்லை என்றால் அங்கேயும் தொடர்புத்திறன்களை சரியாகக் கையாளாமல் போனதே காரணமாக இருக்கும்.

சண்டைகள், மன வருத்தங்கள், கருத்து வேறுபாடுகள், பிரிவுகள் இவையெல்லாம் தோன்றுவதற்கும் வேர்க்காரணங்களாயிருப்பது எதிர்பார்த்ததை நிறைவேற்றவில்லை என்பது ஒரு புறமும், அதற்கு சொல்லப்பட்டது சரியாகச் சொல்லப்படவில்லை என்பது மறுபுறமும் ஆகும்.

இந்த உணர்வுகளோடு பேசும்போது அது வேண்டாத விளைவுகளைத் தோற்றுவித்து விடுகிறது. அவ்விளைவுகளால் பாதிக்கப்பட்டு நிதானமாய் யோசிக்கும்போதுதான் அங்கே இர்ம்ம்ன்ய்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் எஹல் எனப்படும் தகவல் பரிமாற்ற இடைவெளி ஏற்பட்டுள்ளதை புரிந்துகொள்ள முடியும். ஆனால் அதற்குள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பமுடியாதபடி சூழல்கள் அமைந்து போயிருக்கும்.

இவற்றையெல்லாம் தவிர்ப்பதற்கும், எந்த இடத்திலும் நம்மீது பிறர் குற்றம் குறை காணாதபடியும், பிறர்மீது நாம் குற்றம் காணாதபடியும் பணிகளை முடிப்பதற்கும் நாம் தொடர்புத் திறன்களை மிகச்சரியாக கையாளத் தெரிந்துகொள்வது, எப்போதுமே அதில் விழிப்புணர்வுடன் இருப்பது மிகமிக அவசியமாகும்.

தொடர்புத் திறன்களை முழுவதும் அறிந்து கொள்ளுதல் என்பது ஒரேநாளில் நிகழ்ந்து விடாது.

நம்முடைய ஆளுமையில் முற்றிலுமாக திடீர் மாற்றங்கள் ஏற்படுவதை யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நம்மாலும் அவற்றை முழுமையாக கடைப்பிடிக்க முடியாமல் போகக் கூடும். அதுமட்டுமின்றி அவை கடும் விமர்சனங்களையும் உருவாக்கிவிடும்.

தகவல் தொடர்புத்திறன்களை அறிந்து கொள்ளுதலில் சூழல்களைப் புரிந்து கொள்ளுதலும், யாருடன் உரையாடுகிறோமோ அவர்களைப் பற்றி ஓரளவேனும் அறிந்து கொள்ளுதலும் முதல்படியாகும்.

நாம் வெளிப்படுத்தும் சொற்கள் மற்றவர்களிடம் எந்தவிதமான அசைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை பேசிக் கொண்டிருக்கும்போதே அறிகின்ற ஆற்றலை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

அவ்வாறு அறிகின்றபோதுதான் அதற்கேற்றாற்போல் நம்முடைய நிலையை மாற்றிக்கொள்ளுதலோ அல்லது உறுதிப் படுத்துதலோ செய்ய முடியும். தொடர்புத் திறன்களில் அடுத்த நிலை நடந்துவிட்ட தவறுகள் நம்முடையதாயிருப்பின் தயங்காமல் மேலதிகாரிகள் எனும்போது மன்னிப்பு கேட்பதும், நம்மிடம் பணிபுரிவோர் எனும்போது உணர்ந்து வருத்தத்தை வெளிப் படுத்துதலும் அடுத்தமுறை இருசாராரிடமும் அத்தவறுகள் நிகழ்வதை தடுத்து நிறுத்தும்.

தெளிவாக கேட்டுக்கொள்ளுதல், தெளிவாகச் சொல்லுதல் எந்த அளவிற்கு முக்கியமோ, அதைப் போன்றே முக்கியமானது ஆர்க்ஹ் கஹய்ஞ்ன்ஹஞ்ங் எனப்படும் உடலசைவுகளை வெளிப் படுத்துதலும், புரிந்துகொள்ளுதலும் ஆகும். இதனை ஆங்கிலத்தில் சர்ய்-யங்ழ்க்ஷஹப் இர்ம்ம்ன்ய்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் என்பார்கள்.
கண், கைகள், தலை அசைவுகள் பல நேரங்களில் தவறாய்ப் புரிந்துகொள்ளப் படுவதுண்டு.

அவ்வாறு குறிப்பிடும்போது யாரிடம் வெளிப்படுத்துகிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். வட்டார வழக்கில் பேசுவதா யிருந்தாலும், பேசுவோர் நடுவில் இருப்பதாய் இருந்தாலும் புரியாத சொற்களை மீண்டும் ஒருமுறை புரியும் வண்ணம் கேட்டுக் கொள்வதும், சொல்வதும் நல்லது. இதற்கு நகைச்சுவையாய் ஓர் உதாரணம் உண்டு. பேருந்தில் நடத்துனர் சீட்டைக் கொடுத்துவிட்டு சில்லறை இல்லை என்றபோது ஒருவர் ‘பையக் கொடுங்கள்’ என்றார்.

பைய என்றால் மெதுவாய் என்பது பொருள். ஆனால் அது தெரியாத நடத்துனர் சில்லறைக்கு ஏன் பணப்பையைக் கேட்கிறார் என்று கோபப்பட்டு சண்டையிட ஆரம்பித்து விட்டார்.

தகவல் பரிமாற்றத்தில் மற்றவர்களிடம் நம் வார்த்தைகளை பதிவு செய்தல் என்பது நம் எண்ணங்களைப் பதிவு செய்தலாக நிகழ வேண்டும். தகவல் பரிமாற்றம் சரியாக நிகழாததால் மிகப்பெரும் அழிவுகளை ஏற்படுத்திய வரலாற்றுப் பிழைகள் நிறைய இருக்கின்றன.

இலக்கியத்தில் எடுத்துக்கொண்டால்கூட சிலப்பதிகார கோவலன் கொலை செய்யப் பட்டதற்கு பாண்டிய மன்னனின் கவனச் சிதறல் காரணமாய் சரியாக உச்சரிக்கப்படாத வார்த்தைகள்தான் என்பதையும் நாம் நினைத்துப் பார்த்தல் நல்லது.

எப்படிப்பட்ட சொற்களை நாம் தேர்ந்தெடுத்துப் பேசவேண்டும் என்பதற்கு திருவள்ளுவர் சொல்லும் உதாரணம், ஒரு சொல்லைச் சொல்லும்போது அதனை வெல்லக் கூடிய மற்றொரு சொல் இல்லை என்பதையறிந்து தேர்ந்தெடுத்துச் சொல்ல வேண்டும் என்கிறார்.

தேர்ந்தெடுத்து தெளிவாகப் பேசுவோரும், தகவல் தொடர்பினை சரியான அலைவரிசையில் செலுத்துவோரும் வெற்றிபெறுவோர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *