ஆளுமையின் குணங்கள்

– மகேஸ்வரி சற்குரு

”ஏம்ப்பா! உனக்கு கொஞ்சமாவது நன்றி இருக்கா?”
”இவர் என்ன சுத்த நன்றி கெட்ட மனுஷரா இருக்காரே?” அது சரி… அதே நன்றி கெட்ட மனுஷர்னு சொல்லியாச்சு. இதுலே சுத்தம் என்ன வேண்டிக் கிடக்கு? இல்லையா? இந்த வாக்கியங்கள் அன்றாட வாழ்வில் நாம் கேட்கின்ற, பார்க்கின்ற காட்சிகள்.

97 நிமிடங்கள் ஓடக்கூடிய ‘ஏஹஸ்ரீட்ண் அ ஈர்ஞ் பஹப்ங்’ என்கின்ற ஆங்கிலப்படம் இந்தத் தலைப்புக்குப் பொருந்தி வரும் என நினைக்கிறேன். நான்காம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களின் வகுப்பறையில் இந்தத் திரைப் படம் ஆரம்பிக்கிறது. ”ஙஹ் ஏங்ழ்ர்.” என்கின்ற தலைப்பிலே ஒவ்வொரு மாணவனும் தங்கள் கருத்துக்களைச் சொல்கின்றனர். ஒரு மாணவன் எழுகிறான். ”என் ஹீரோவுக்கு நாலு கால்” என ஆரம்பிக்கிறான். எல்லா குழந்தைகளும் சிரிக்கின்றன. அந்தச் சிறுவன் சொல்கிறான், சிரிப்பதற்கு அல்ல. இந்தக் கதை சிந்திப்பதற்கு! என்று சொல்லி விட்டுத் தொடர்ந்தான்.
வேறு ஊருக்கு ஒரு அழகான நாய்க் குட்டி ஒன்று மூங்கில் பெட்டியில் வைக்கப் பட்டு ரயில் மூலம் பார்சலாக அனுப்பப் படுகிறது.

இரயில் நிலையத்திற்கு வந்த பார்சல்கள் டிராலிகளில் வைத்துத் தள்ளப் படுகின்றன. நாய்க்குட்டி இருந்த மூங்கில் பெட்டி கீழே விழ அதன் மூடி திறந்து நாய்க் குட்டி வெளியே வந்து விடுகிறது. கீழே விழுந்த மூங்கில் பெட்டியின மேல் ஒட்டியிருந்த முகவரியும் கிழிந்து பறந்து போகிறது. தினசரி இரயில் மூலம் தன்னுடைய இசைக் கல்லூரிக்குச் சென்று கொண்டிருக்கும் இசை ஆசிரியர் ஒருவர் தன் காலைத் தடவிய அந்த நாய்க்குட்டியை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று வளர்க்கிறார்.

இசை ஆசிரியர் நாய்க்குட்டிக்கு எஜமானன் ஆகிவிட, தன் அன்பாலும், விசுவாசத்தாலும் முதலில் தன்னை வெறுத்த தன் எஜமானனின் மனைவி, குழந்தை இருவரையும் கவர்கிறது. தினமும் தன் எஜமானனுடன் இரயில் நிலையத்திற்குச் சென்று அவரை வழி அனுப்புவது, பின் திரும்பி வரும்போது சென்று அழைத்து வருவது என கதை நகருகிறது. ஒருநாள் காலை இசைக்கல்லூரி சென்ற இசை ஆசிரியர் அங்கேயே மரணமடைய நாய் மாலையில் வந்து காத்திருக்கிறது. தன் எஜமான் வருவார் என்று. அவர் குடும்பத்தினர் வந்து நாயை அழைத்துச் செல்கின்றனர். வேறு ஊருக்கும் சென்று விடுகின்றனர்.

வளர்ந்து விட்ட இந்த நாய் அவர்களுடன் இருக்காமல் தன் எஜமானனைக் காண தினமும் இரயில் நிலையத்திற்கு வர ஆரம்பித்தது, ஒரு நாளோ, ஒரு மாதமோ ஒரு வருடமோ அல்ல. 9 வருடங்கள். தினந்தோறும் நாளிதழ்களில் இடம்பிடிக்கின்ற நாயாக மாறிப் போனது நன்றியுள்ள இந்த நாய். ஒரு குளிர் காலத்தில் கொட்டுகின்ற பனியில் காத்திருந்த நாய் அமர்ந்த நிலையில் உறைகிறது உயிரோடு! மக்கள் மனத்திலும்தான்! தன் எஜமானனுக்காக காத்திருந்து காந்திருந்து உயிரோடு பனியில் உறைந்து போன அந்த நாய்க்கு அரசாங்கம் சிலை வைக்கிறது. அந்த எஜமான் எங்க தாத்தாதான் என்று முடிக்கிறான் சிறுவன்.

முதலில் சிரித்த குழந்தைகள் எல்லாம் கண்களில் நீர்மல்க விசும்பிக் கொண்டிருந்தன. நன்றி பாராட்டுகின்ற நாய்க்குச் சிலை என்றால் நன்றி பாராட்டும் மனிதன் எவ்வளவு உயர்வான்?

உழைப்பு, நேர்மை, நன்றி இம்மூன்றும் நம்மை ஆளுகின்ற பொழுதுதான் நாம் முழு ஆளுமை கொண்டவர்களாக மாறுகிறோம். இன்று உயர்ந்த நிலையில் இருக்கின்ற அனைவரும் நன்றி சொல்லும் வித்தையைக் கற்றவர்கள்தான்.

ஒரு பேச்சாளர் மேடையேறுகின்ற போது வணக்கத்துடன் ஆரம்பித்து பின் நன்றி வணக்கம் என்று முடிப்பார். கிரிக்கெட் வீரர் 50 ரன்கள் எடுத்தவுடனே மண்ணைத் தொட்டு வணங்கி நன்றி சொல்கின்றவர் 100 ரன்கள் எடுக்கின்றபோது விண்ணைப் பார்த்து நன்றி சொல்கிறார்.

உந்தி உந்தித் தள்ளி முட்டையின் ஓட்டை உடைத்துத் தள்ளிவிட்டு உயர எம்பிப் பறக்க நினைக்கும் குஞ்சுப் பறவை நின்று தான் வந்த முட்டை ஓட்டினைத் திரும்பிப் பார்ப்பது தன் நன்றியை வெளிப்படுத்த…

வருடத்தின் பெரும்பாலான நாளில் விளைச்சலைத் தருகின்ற விவசாய நிலத்திற்கு வருடத்தின் ஒருநாள் பொங்கல் அன்று நன்றி சொல்கிறார் விவசாயி. ஆயுதபூஜையும், சரஸ்வதி பூஜையும் நன்றி சொல்லும் நிமித்தம் செய்யப் படுவதுதான்.

தங்கள் ஆசிரியருக்கு இன்று உயர்ந்த நிலையில் இருக்கும் சிலர் ஒன்று சேர்ந்து ”குரு நிவாஸ்” என்ற இல்லத்தை பரிசாகத் தந்து நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

வளர்ந்த வல்லரசு நாடுகள் நமக்கு ஒரு மிகப் பெரிய விஷயத்தைக் கற்று தந்திருக்கின்றன. விமானத்தில் பயணத்திற்குப் பிறகு பைலட்டுக்கும், பேருந்து பயணத்திற்குப் பிறகு ஆன்ள் ஈழ்ண்ஸ்ங்ழ்க்கும், ஏர்ற்ங்ப்ல் சர்வருக்கும். இரயில் பயணத்தில் உடன் வந்த சக பயணிக்கும் என பல்வேறு நபர்களுக்கும். தங்களுக்கு உதவி செய்கின்றவர்களுக்கும். அவர்கள் சொல்கின்ற ஒரு சொல் பட்ஹய்ந் ஹ்ர்ன். பதிலுக்கு சம்பந்தப்பட்டவர்கள் சொல்கின்ற பதில் ரங்ப்ஸ்ரீர்ம்ங்.

நன்றி. உணர்வோடு நன்றிச் செய்கின்ற எந்த ஒரு செயலுமே வெற்றிச் செயல்தான். ஆளுமைப் பண்புகளில் நம்மை தலைமைப்பண்பில் சிறந்தவராக அடையாளம் காட்டுவது நன்றி. நம்மை அடையாளம் காட்டுவதற்கும், நம் உள் முகத்தை வெளிப்படுத்தவும் இருக்கின்ற ஒரு செயல், நன்றி. சின்னச்சின்ன உதவிகளுக்கும்கூட இந்த ஒற்றைச் சொல்லை சொல்கின்றபோது நாம் நிச்சயமாக பெருமிதத்தோற்றம் பெறுவோம். எந்நன்றி கொண்டவரும் வெற்றியாளரே!! நன்றி! பட்ஹய்ந் ஹ்ர்ன்.

2 Responses

  1. rajarajacholan

    I read your ariticle. It is very nice. This article gives me an energy. Thanks for your ariticle

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *