நீங்கள் எந்த முறையில் கற்கிறீர்கள்?

– கிருஷ்ண வரதராஜன்

மாணவர்கள் கற்கும் விதம் குறித்து உலகம் முழுவதும் ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டு அறிவிக்கப் பட்ட வழிமுறைகளில் குறிப்பிடத் தகுந்த முறை யஅஓ முறையாகும்.

மனிதர்கள் மூன்று விதமான வழிமுறைகளில் கற்றுக்கொள்கிறார்கள் என்பதோடு, எந்த முறையில் கற்பவர்கள் என்னென்ன வழி முறைகளை பின் பற்றினால் இன்னும் சிறப்பாக படிக்க முடியும் என்பதையும் இந்த யஅஓ முறை வலியுறுத்துகிறது.

1. Visual learnersபார்ப்பதன் வாயிலாகக் கற்பவர்கள்
2. Auditory leanersகேட்பதன் வாயிலாகக் கற்பவர்கள்
3. Kinesthetic learnersசெயல்வழி கற்பவர்கள்
இதில் நீங்கள் எந்த வகை என்பதை எப்படிக் கண்டறிவது ?

இதைக்கண்டறிவதற்கு இணைய தளத்தில் பல சோதனைகள் உள்ளது. இணையத்தை பயன்படுத்தாதவர் களுக்காக இங்கே ஒரு மாதிரியை பார்ப்போம்.

உங்கள் கற்றல் விதத்தினை தெரிந்து கொள்ள விரும்பினால் பின் வரும் கேள்விகளுக்கு விடையளியுங்கள். உடனே நீங்களே புரிந்து கொள்ளலாம்.

1. புதிதாக ஒரு செல்போனை வாங்குகிறீர்கள். அதன் முழுமையான செயல் பாடுகளை தெரிந்து கொள்ள கீழ்கண்ட வழி முறைகளில் நீங்கள் எதை பின்பற்றுவீர்கள் ?

அ)அதனுடன் கொடுக்கப் பட்டுள்ள யூசர் மேனுவலை முழுமை யாக படிப்பேன். அல்லது இணைய தளத்திலோ அல்லது செல்போனிலோ கொடுக்கப்பட்டுள்ள வீடியோ விளக்கப் படங்களை பார்ப்பேன்.
ஆ) விற்பனையாளரிடம் செல் போனில் உள்ள வசதிகளைப்பற்றி விளக்குமாறு கேட்டு தெரிந்து கொள்வேன்.

இ) இதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்று நானாக ஒவ்வொன்றாக ஆப்ரேட் செய்து கற்றுக் கொள்வேன்.

2. உங்கள் சிறு வயது நினைவுகளில் பதிந்துள்ள காட்சியை இப்போது நினைவு படுத்திப்பாருங்கள். அது
அ) ஏதோ ஒரு காட்சி

ஆ) யாரோ சொன்ன வார்த்தைகள்
இ) அது ஒரு செயல் அல்லது சம்பவம்.
3. புதியவர்களை பார்க்கும்போது எதை அதிகம் கவனிக்கிறீர்கள்?
அ) தோற்றம் மற்றும் உடை
ஆ) குரல் மற்றும் பேசும்விதம்
இ) நிற்கும் விதம் நடக்கும் விதம் மற்றும் செயல்பாடு

4. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நண்பனை சந்திக்கும்போது என்ன செய்வீர்கள்?
அ)உன்னை பார்த்து எத்தனை நாளாச்சு.

ஆ)உன் குரலை கேட்டு எத்தனை நாளாச்சு
இ)கையை பிடித்து குலுக்குவேன் அல்லது கட்டியணைத்துக்கொள்வேன்.

5. ஒருவர் பொய் சொல்கிறாரா என்பதை எப்படி கண்டுபிடிப்பீர்கள்?

அ)அவர்கள் கண்ணைப் பார்த்தாலே கண்டு பிடித்து விடுவேன்.
ஆ)அவர்கள் குரலை வைத்தே கண்டுபிடித்து விடுவேன்
இ) அவர்கள் முகபாவனை உதட்டு அசைவு என அவர்கள் நடத்தையை வைத்து கண்டு பிடிப்பேன்.
இதில், ‘அ’தான் அனைத்திற்கும் உங்கள் பதில் என்றால் நீங்கள் விஷூவல் லேனர்ஸ். ‘ஆ’தான் உங்கள் பதில் என்றால் நீங்கள் ஆடிட்டரி லேனர்ஸ். ‘இ’ தான் உங்கள் பதில் என்றால் நீங்கள் கினஸ்தடிக் லேனர்ஸ்.

மேற்கண்ட கேள்விகளுக்கான பதிலை கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் இனிமேல் உங்கள் செயல்பாடுகளை உற்று கவனியுங்கள். அல்லது மற்றவர்களின் உதவியை நாடுங்கள்.
இதில் உள்ள இரண்டு முறைகள் உங்களுக்கு பொருந்துவதாக தோன்றினால் இரண்டு முறை களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள கற்றல் வழி காட்டுதல்களை பின்பற்றுங்கள்.

1. Auditory learners
சிலருக்கு கேட்கும் திறன் மிகச்சிறப்பாக இருக்கும். எனவே காதால் கேட்கும் எந்த ஒரு விஷயத்தையும் சுலபமாக மனதில் பதிய வைத்துக் கொள்வார்கள். அதனால்தான் சில குழந்தைகள் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து அம்மாவிடம் கொடுத்து, “அம்மா ஒரே ஒரு முறை சொல்லிக் கொடு. நீ சொல்லிக் கொடுத்தால்தான் மனதில் சுலபமாக பதிகிறது” என்பார்கள்.

இவர்கள் பாடத்தை டேப்பிலோ செல்ú பானிலோ பதிவு செய்து கொண்டு அதை அடிக்கடி போட்டுக்கேட்கலாம். இந்த வகை மாணவர்கள் பாடங்களை தங்கள் நண்பர்களுக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலமும் சுலபமாக மனதில் பதிய வைத்துக்கொள்ள முடியும். இல்லை மற்ற மாணவர்களுடன் விவாதம் செய்யலாம்.

இவ்வகை மாணவர்கள் படிக்கும்போது இசைக் கருவிகளால் மட்டும் அமைந்த இசைத் தொகுப்பை கேட்டபடி படிக்கலாம். இதனால் அவர்கள் மேலும் தூண்டப்பட்டு கற்றல் இன்னும் சிறப்பாக இருக்கும்.

2. Visual learners
கண்ணால் கண்டவற்றையெல்லாம் சிறப்பாக கற்றுணரும் திறன் படைத்தவர்கள் விஷூவல் லேனர்ஸ். இவ்வகை கற்றல் திறன் உடையவர்கள் வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது போர்டில் வரையும் படங்களையும் கிராப்களையும் சுலபமாக மனதில் பதிய வைத்துக்கொள்வார்கள். புத்தகங்களில் உள்ளவற்றில் படமாக உள்ள விஷயங்களையும் எளிதில் உள்வாங்கிக்கொள்ளும் திறனுடைய வர்களாக இருப்பர். இவர்களுக்கு டட்ர்ற்ர் ம்ங்ம்ர்ழ்ஹ் நன்கு இருக்கும்.

இப்போது எல்லா வகுப்பு பாடங்களும் அனிமேஷன் வடிவில் சிடியாக கிடைக்கிறது. இவர்கள் இத்தகைய வீடியோ படங்கள் மூலம் சுலபமாக கற்றுக்கொள்ள முடியும். (இவை ஆடியோவோடு வருவதால் இது ஆடிட்டரி லேனர்ஸ்க்கும் உகந்ததே).

இவ்வகை திறன் உடையவர்கள் ஃபார்முலாக்கள் மற்றும் வேதியியல் சமன்பாடுகள் போன்றவற்றை ஒரு ஏ4 பேப்பரில் எழுதி வீட்டில் ஐந்தாறு இடங்களில் ஒட்டி வைத்து அதை அடிக்கடி பார்த்தாலே போதும், எளிதில் மனதில் பதிந்துவிடும்.

3. Kinesthetic learners
கினஸ்தடிக் என்றால் தசைகளை அசைத்தல் (muscular action) தொடுதல் அல்லது செய்து பார்த்தல் என்று பொருள். பார்ப்பதைவிட கேட்பதை விட செய்து பார்க்கும் விஷயத்தை இவர்கள் மறக்கவே மாட்டார்கள். அதனால்தான் இந்தப்பெயர்.

இவர்கள் செய்து பார்ப்பதாக கற்பனை செய்துகூட இந்த நிலையை அடைய முடியும் அல்லது மைன்ட் மேப் முறையில் பாடங்களை படித்தால் இவர்களுக்கு சுலபமாக மனதில் பதியும். புரிந்தால்தான் மனப்பாடம் ஆகிறது என்று கூறும் மாணவர்கள் இவ்வகை கற்கும் திறனுடையவர்கள்.

இவ்வகை மாணவர்கள் ஏதாவது ஆய்வை பற்றி படிக்கும்போது, அந்த ஆய்வை தான் செய்வது போல் எண்ணிக் கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு பியூரட்டினை எடுத்துக் கொள்ளவும். அதில் அமோனியாவை ஊற்றவும் என்றிருந்தால் அதை நான் பியூரட்டினை எடுக்கிறேன். அதில் அமோனியாவை ஊற்று கின்றேன் என்று எண்ணிக் கொள்ள வேண்டும். ஆதிவாசிகள் குகைளில் வசித்தார்கள் என்பதற்கு பதில், நான் குகைளில் வசித்தேன். இலைகளை உடுத்தினேன். பழங்களை உண்டேன் என்று படிக்க வேண்டும்.

தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள சூழலில் இந்த முறைகள் பாடங்களை விரைவாக படிக்க உதவிகரமாக இருக்கும். இவற்றை பயன் படுத்தி எதிர்வரும் தேர்வுகளை சிறப்பாக எதிர் கொள்ள வாழ்த்துக்கள்.

பயத்தை பயமுறுத்துவோம்

தேர்வுகள் நெருங்கிவிட்டால் மாணவர் களுக்கு தேர்வு பயம்தான் வருகிறது ஆனால் பெற்றோர்களுக்கோ தேர்வு ஜூரமே வந்து விடுகிறது. இப்படி தானும் பயந்து குழந்தை களையும் பயமுறுத்தும் பெற்றோர்களுக்காகத் தான் இந்தக் கட்டுரை.

பயம் என்பது இந்த வயதில் பழகிவிட்டால் நாளை அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அது எதிரொலிக்கும். எனவே இப்போதே அதைத்தடுத்துவிட்டால் நாளை அவர்கள் வெற்றியை மட்டுமே சுவைக்க நாம் செய்த உதவியாக இருக்கும்.

‘கொஞ்சமாவது பயம் வேண்டாம்’ என்று சொல்லி சொல்லி நாம்தான் குழந்தைகளிடம் பயத்தை வளர்த்துவிடுகிறோம். பயம் இல்லை என்றால் கட்டுப்பட மாட்டான் என்று நினைத்து சின்னச்சின்ன விஷயத்திற்கும் நாம் நம் குழந்தை களை பயமுறுத்தியே வைத்திருக்கிறோம்.

குழந்தையாக இருக்கும்போது சாப்பிட வில்லை என்று பூச்சாண்டியை கூப்பிட்டோம். தூங்கவில்லை என்று ஒத்தக்கண்ணணை அழைத்தோம். அப்போது வந்து உட்கார்ந்தவர்கள் இன்னும் எழுந்திருக்கவில்லை, அவர்கள் மனதை விட்டு.

தேர்வு பயம் என்பதுகூட பெற்றோர்கள் மீதான பயம்தான். மார்க் குறைந்தால் வீட்டில் தொலைத்து விடுவார்கள் என்பதுதான் பயத்திற்கான பிரதான காரணமே. “என்ன மார்க் வாங்கினால் என்ன… நான் ஒன்றும் சொல்ல மாட்டேன்” என்று பெற்றோர்கள் சொல்லி விட்டால் போதும் அந்த நிமிடமே தேர்வு பற்றிய பயமே போய்விடும்.

நாமும் பயந்து நம் குழந்தைகளையும் பயமுறுத்துவதை விட்டுவிட்டு நாமும் தைரியமாக இருந்து நம் குழந்தைகளையும் வாழ்க்கையை எதிர் கொள்ள தைரியப்படுத்துவோம்.

அவர் ஒரு இளந்துறவி. சக துறவிகளுடன் ஆற்றில் குளித்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அவர் அழகில் மயங்கிய இளம் பெண் ஒருத்தி அவர் காலில் விழுந்து தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டாள்.

அவர் உண்மையான துறவி என்பதால் அவளை பொருட் படுத்தாமல் சென்றுவிட்டார். மறுநாள் அவர் வரும் போது மறுபடியும் அந்தப்பெண் காலில் விழுந்து தன்னை மணந்துகொள்ளுமாறு கெஞ்சினாள். துறவி எதுவும் பேசாமல் சென்று விட்டார். ஆனாலும் அந்தப்பெண் விடுவதாயில்லை.

தினமும் துறவி வருகிறபோது அவர் காலில் விழுந்து கேட்க ஆரம்பித்தாள். விஷயம் ஊர் முழுவதும் பரவி இதைப்பார்க்க கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது. செய்தி குருவை எட்டியது. இளம் துறவியை அழைத்து நாளை அந்தப்பெண் உன்னை அழைத்தால் அவளுடன் சென்றுவிடு என்றார். குருவுக்கு சம்மதம் சொன்னார் இளம் துறவி. சொன்னபடியே மறுநாள் அந்தப் பெண் காலில் விழுந்தபோது எதுவும் பேசாமல் அந்தப் பெண்ணோடு அவள் இல்லம் சென்றுவிட்டார்.

ஒரு வாரம் இரண்டு வாரம் ஆயிற்று. இளம் துறவி ஆசிரமம் திரும்பவில்லை. ஊர் முழுக்க பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தபோது துறவி நாளை ஆசிரமம் திரும்புகிறார் என்ற செய்தி எட்டியது.

துறவறத்திலிருந்தபோது இருந்த அந்த இறை அழகு, இப்போது இல்லறத்திலிருக்கும் துறவியிடம் இருக்குமா? என்று பார்க்க, மறுநாள் ஊரே ஆசிரமத்தில் திரண்டிருந்தது. துறவி வந்தார். எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், துறவி தன்னுடன் ஒரு பெண் துறவியையும் அழைத்து வந்திருந்தார்.
குரு புன்னகைத்தார். இது எனக்கு முன்னரே தெரியும் என்பதுபோல.

எல்லோரும் எதிர்பார்த்ததுபோல துறவி இல்லறத்திற்கு மாறவில்லை. அந்த பெண்ணை துறவுக்கு மாற்றிவிட்டார், அவள் போக்கிலேயே சென்று.

நாம் கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இருந்தால் நம் நிலையிலிருந்து மாறமாட்டோம். நம் குழந்தைகளின்மீது நமக்கு நம்பிக்கை இல்லை அதனால்தான் நாம் பதட்டமடைகிறோம். நம் குழந்தைகளிடமும் அந்த பதட்டத்தை விதைக்கிறோம்.

நமக்கு நம்பிக்கை இருந்தால் நம் குழந்தைகளிடமும் அதையே விதைத்திருப்போம்.
நாம் நம்பிக்கையை இழந்துவிடாமல் இருந்து குழந்தைகளை போக்கிலேயே சென்று அவர்களையும் நம்பிக்கை படுத்தவேண்டும் என்பதற்கு உதாரணமாகத்தான் இந்தக்கதை சொல்லப்பட்டிருக்கிறது.

2 Responses

  1. amalaananth

    nice concept …… what is the way of presence of mind……….. and memory short notes…………………… send me

  2. Balaji

    Hello sir. I like this story and ur techings. Can i plz hav ur email address. I want to talk 2 u.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *