தேர்தல் கமிஷன் முன்வைத்திருக்கும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் வேகம், நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும், தேர்தல் நடக்க வேண்டிய முறைகள் குறித்தும் மிகத் தெளிவான வரையறைகள் முன்மொழியப் பட்டுள்ளன என்றாலும், இந்த விதிகளின் வெற்றி, வாக்காளர்களின் கைகளில்தான் இருக்கிறது.
ஐந்தாண்டு காலங்கள், நேர்மையான ஆட்சி வேண்டுமென்று நினைக்கும் யாரும், அதற்கான ஆரம்பகட்டம் தேர்தல் என்பதை உணர வேண்டும். வாக்காளர்கள், தங்கள் தரப்பிலான நேர்மையை ஒன்றிணைந்து கூட்டாக உணர்த்துவதற்கான நேரம் இது. ஆட்சியையோ அமைப்பு முறையையோ குறை சொல்வதால் எந்தப் பயனும் இல்லை. திண்ணைப்பேச்சு வீரர்களின் வெட்டி விமர்சனங்களுக்கு செயல்வடிவம் தந்தால் அவை ஆக்கபூர்வமான மாற்றங்களுக்கு அடித் தளம் அமைக்கும் என்பது ஆச்சரியமான உண்மை.
தங்கள் வாக்குகள் விலை மதிப்பில்லா தவை என்பதை உணர்வது, வாக்காளர்களின் முதல் கடமை. அந்த வாக்குகளுக்கு யாரும் விலை வைத்துவிடாமல் பார்த்துக் கொள்வது இரண்டாவது கடமை. தவறாமல் வாக்களிப்பது, இவை இரண்டைக் காட்டிலும் முக்கியமான கடமை. சில ஆயிரம் ரூபாய் களுக்காகவோ, சின்னச்சின்ன சலுகை களுக்காகவோ தங்கள் வாக்குரிமைகளை விற்பவர்களுக்கு அரசியல் தலைவர்களின் ஊழல்கள் பற்றிப் பேசும் அருகதை இல்லை. இலவசங்களை நாடாத குணம் இந்தியர் களுக்கு வந்தால், அங்கேதான் தூய ஜன நாயகம் துலங்கும். வாக்குச்சாவடிகளில் முத்திரையிடுவதில் தொடங்குகிற நேர்மை ஆட்சி முறையையே மாற்றித்தரும். இதன் மூலம் ஜனநாயகத்தில் ஆக்கபூர்வமான மாற்றம் வரும்.
nethaji
well sir nice message.
raja
thanks