உஷார் உள்ளேப்பார்

– சோம வள்ளியப்பன்

வெற்றிக்கான, மகிழ்ச்சிக்கான பல்வேறு விஷயங்கள் நமக்கு உள்ளேயே இருக்கின்றன. அங்கே சரி செய்து கொண்டுவிட்டால் போதும். எல்லாம் சரியாக இருக்கும். உள்மன ஒழுங்கு, சிந்தனை நேர்த்தி, பார்வை மாற்றம் என்று எவ்வளவோ செய்யமுடியும். செய்தவர்கள் வென்றிருக்கிறார்கள். மனதின் மாபெரும் சக்தி பற்றியும் அது செய்யும் பல மாயங்கள் பற்றியும் உஷார் உள்ளே பார் என்று ஒரு புத்தகம் 2005இல் எழுதினேன். அதன் தொடர்ச்சி, அதில் வந்தவை போன்ற தகவல்கள், சிந்தனைகள்தான் இந்தத் தொடரில் வரவிருக்கின்றன. ஆக, தொடர்கிறது உஷார் உள்ளே பார்.

எழுப்பியது யார்?

அவர் மறுநாள் காலை ஒரு விரைவு ரயிலினைப்பிடிக்க வேண்டும். அதற்காக விடி காலை நான்கு மணிக்கு எழுந்தால்தான் சரியாக இருக்கும். எழுந்துவிட்டார். சரியான நேரத்திற்கு ரயில் நிலையம் போய்விட்டார்.

அவர் நண்பர் கேட்டார், ‘அட! பரவாயில்லையே! சரியான நேரத்திற்கு வந்து விட்டீர்களே! எப்படி?’

நான்கு மணிக்கெல்லாம் எழுந்து விட்டேன்.
அப்படியா?

ஆமாம். அலாரம் வைத்திருந்தேன்.
ஓகோ! அலாரம் எழுப்பியதோ!
எழுப்பியது யார்? அலாரமா?

கடிகாரமோ அல்லது கைபேசியோ, அவை தன்னிச்சையாகவா செய்கின்றன? குறிப்பிட்ட நேரத்திற்கு மணியடிக்க வைத்தது யார்? அவை அப்படிச் செய்ய ஏற்பாடு செய்தவர் யார்? அலாரம் வைத்தது யார்?

அலாரம் அடித்ததுதான். ஆனால், அதனை மதித்து எழுந்தவர் யார்?

தனக்கு உதவக்கூடியனவற்றை தனக்கு உதவுமாறு செய்துகொள்ளத் தெரியவேண்டும். உதவி கிடைக்கும்போது பெற்றுக்கொள்ள வேண்டும்.

எனக்கு நல்லது சொல்லுங்கள் என்று கேட்க வேண்டும். சொல்லுபவற்றையும் கேட்டு நடக்கவும் வேண்டும். கேட்பவர்கள், நடப்பவர்கள் ஜெயிக்கிறார்கள். வெற்றிபெற முதலில் நமக்கு நம்முடைய ஒத்துழைப்பு வேண்டும். முழுமையான ஒத்துழைப்பு. கல்வி, பயிற்சி, ஒழுக்கம், முயற்சி, மேம்பாடு எதுவும் சுய ஒத்து ழைப்பில்லாமல் சாத்தியமில்லை.

சொல்லாததையும் செய்

நெய்வேலியில் பள்ளி மாணவ மாணவியருக் கான கருத்தரங்கு. சாக்லேட் சாப்பிடுங்கள் என்பது எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு. ஊக்கம் பெற தேவையான வற்றைப் பற்றிப் பேசினேன்.

இடையில் சொன்னேன். ரட்ஹற்ங்ஸ்ங்ழ் ட்ன்ம்ஹய் ம்ண்ய்க் ஸ்ரீஹய் ஸ்ரீர்ய்ஸ்ரீங்ண்ஸ்ங் ஹய்க் க்ஷங்ப்ண்ங்ஸ்ங், ண்ற் ஸ்ரீஹய் ஹஸ்ரீட்ண்ங்ஸ்ங் என்பார் நெப்போலியன் ஹில் சொல்லிவிட்டு நிறுத்தினேன். அடுத்து அதனையே தமிழில், எந்த ஒன்றை மனித மனம் கற்பனை செய்து பார்த்து, அது சாத்தியம் என்று நம்புகிறதோ, அதனை கண்டிப்பாக அடைய முடியும் என்கிறார் நெப்போலியன் ஹில் என்றும் சொன்னேன்.

சொல்லிவிட்டு மீண்டும் நிறுத்தினேன்.

நான் சொன்னதை யாரால் திருப்பிச் சொல்லமுடியும் என்று கேட்டேன். சிலர் கை தூக்கினார்கள். சிலர் தங்களுக்குள் சத்தமாக சொல்லிப் பார்த்துக்கொண்டார்கள்.

கை தூக்கியவர்களில் சிலரை எழுப்பிச் சொல்லச் சொன்னேன். அவர்களால் அரையும் குறையுமாகவே சொல்ல முடிந்தது. எவரும் முழுமையாகவோ சரியாகவோ சொல்லவில்லை.

முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒரு மாணவி அப்போதுதான் ஏதோ நினைத்துக் கொண்டவர்கள் போல திடீரென்று கையைத் தூக்கினார்கள். சொல்லச் சொன்னதும் மிகச்சரியாகவே சொன்னார்கள்.

எல்லோரும் கை தட்டினோம். அப்போது வேறு பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு மாணவி, “அவுங்க நோட்டைப் பார்த்துச் சொன்னாங்க” என்றார்கள்.

ஆமாம். சரியாகச் சொன்ன மாணவி, கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தினைப் பார்த்துத் தான் சொன்னார்கள். நானும் கவனித்திருந்தேன். “நோட்டைப் பார்த்துதான் சொன்னார்கள். அவர்களுக்காக கை தட்டிவிட்டோமோ! சரி வேறு என்ன செய்யலாம்?”

மௌனம். பின் சலசலப்பு.

நான் சொன்னேன், அதே மாணவிக்காக இன்னொரு முறை பலமாக கைதட்டலாம்.

காரணம் என்ன சொல்லியிருப்பேன் என்று நீங்கள் ஊகித்திருக்கலாம். இந்தக் கட்டுரையின் தலைப்பே அதுதானே!

அந்த மாணவி சொல்லாததையும் செய்தார்கள். நெப்போலியன் ஹில் சொன்னதை சொல்லிவிட்டு அதனை நோட்டுப்புத்தகத்தில் எழுதிக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லி இருக்கவில்லை. அந்த அரங்கத்தில் இருந்த பலரும் அந்த வாக்கியத்தினை குறித்து வைத்துக் கொள்ளவில்லை.

அவராகச் செய்த மாணவியால், அந்தப் பெருங்கூட்டத்தில் பல நூறுபேரால் செய்ய முடியாததை செய்ய முடிந்தது. பாராட்டுப் பெற முடிந்தது. அதைவிட முக்கியமாக, சொல்லப்பட்ட கருத்து மறந்துபோகாமல் இருக்குமாறு உறுதி செய்துகொள்ள முடிந்தது. எழுதிக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லாததுபோலவே, எவரையும் எழுத வேண்டாம் என்றும் சொல்லவில்லையே! ஏன் மற்றவர்கள் எழுதிக்கொள்ளவில்லை?

தோன்றவில்லை என்று சொல்லலாம். அப்படித் தோன்றாதது தவறுதானே? இழப்பில் தானே முடியும். முயற்சி எடுத்து கிளம்பி வந்திருக்கிறோம். சொல்லப்படுகிறது. ரசிக்கிறோம். உண்மைதான் என்று நம்புகிறோம். பயன்படும் என்று நினைக்கிறோம். நோட்டுப்புத்தகமும் இருக்கிறது. ஆனால் எழுதிக்கொள்ளவில்லை.

கூச்சமாக இருக்கிறது என்று சொல்லலாம். இதில் என்ன கூச்சம். தவறா செய்கிறோம்?

எழுத வலித்தது என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் சிலர் எழுதிக் கொள்ளாத தற்கு காரணம் அதுவாக இருக்கலாம். இதுதானே சிரமம் கொடுக்கும் சோம்பல்!

நினைவில் இருக்கும் என்று நினைத்தேன் என்று சொல்லலாம். நினைவு இல்லையே. சொல்ல முடியவில்லையே.

அரங்குகளில் கல்விக்கூடங்களில் மட்டுமில்லை. வீடு, அலுவலகம், பொது அமைப்புகள் எல்லா இடங்களுக்கும் இது பொருந்தும். அதே போல் எழுதிக் கொள்ளுவதில் மட்டுமல்ல. எல்லா செயல்பாடுகளுக்கும் இது பொருந்தும்.

சொன்னதையும் செய்ய வேண்டும். சொல்லாதனவற்றையும் செய்ய வேண்டும். தேவையானது எல்லாவற்றையும் எல்லா நேரமும் எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம்.

வெற்றி பெறுபவர்களுக்கும் தவற விடுபவர் களுக்கும் இடைவெளி பல சமயங்களில் நூலிழை தான் என்று சொல்லக் கேள்விப்படுகிறோம். அந்த வேறுபாட்டிற்கு காரணம் இப்படிப்பட்ட சின்னச் சின்ன இடைவெளிகள்தான். தாண்டிவிடலாம்.

5 Responses

  1. S.Bakyaraj

    sir, this is excellent words about confident thought, ie) difference bet’n successful person and unsuccessful person

  2. thirumurugan

    sir, namathu nambikkai is an excellent book to read for motivation .whenever time i feel depressed ,i generally go to library and read ur book . In 2010 each and every article is superb , but nowdays article clarity is missing and lots of ads also added.Tat time , i read ur book alteast twice .but nowdays not like tat ..pls increase the clarity of delivery ..

  3. murali krishna

    SIR how to make money ? thats easy using of meditation. but how to manage money ?

    that is deficult. please try to write a book

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *