“சிகரம் உங்கள் உயரம்” ஆண்டுவிழா சிறப்புக் கருத்தரங்கம்
“இளம் இந்தியர்கள்” அமைப்பின் ஒருங்கிணைப்பில் ஜனவரி முதல் வாரத்தில் “கோயமுத்தூர் விழா” கோவையின் பல்வேறு இடங்களில் பற்பல அமைப்புகளின் ஆதரவில் கொண்டாடப்பட்டது.
இதன் தொடர்பாக சிகரம் உங்கள் உயரம் அமைப்பின் சார்பில் “கோவைக்கு வந்த இமயங்கள்” என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. “தினமலர் நாளிதழும் கோவை விக்னேஸ்வரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனமும் இந்த விழாவை இணைந்து வழங்கின.
“கோவையில் காந்தி” என்ற தலைப்பில் “கலைமாமணி” மரபின் மைந்தன் முத்தையா உரை நிகழ்த்தினார். “கோவையில் வ.உ.சி.” என்ற தலைப்பில் திரு. த. ஸ்டாலின் குணசேகரன் உரை நிகழ்த்தினார். “கோவையில் ஜீவா” என்ற தலைப்பில் புலவர் சி.இராசியன்னன் உரை நிகழ்த்தினார். கோவையில் இந்த முப்பெரும் தலைவர்களின் அனுபவங்கள் குறித்த அபூர்வமான தகவல்கள் இந்தக் கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
“சிகரம் உங்கள் உயரம்” அமைப்பின் கோவை மாநகரத் தலைவர் திரு.சௌந்தரராஜன் வரவேற்றார். பொருளாளர் திரு. சுரேஷ்குமார் பேச்சாளர்களை அறிமுகம் செய்தார். துணைச் செயலாளர் திரு. ராமலிங்கம் நன்றி கூறினார். விழாவை மற்றுமொரு துணைச் செயலாளர் திரு. சஜீத் தொகுத்து வழங்கினார்.
விழாவில் இளம் இந்தியர்கள் அமைப்பின் நிர்வாகிகள் திரு. சங்கர் வாணவராயர், திரு. ராஜீவ் கொய்மினி உள்ளிட்ட பலரும் பங்கேற்றார்கள்.
Leave a Reply