நமக்குள்ளே…

ஜுன் 2011 இதழில் துணை ஆட்சியர் திரு.ங.எ.ராஜமாணிக்கம் அவர்களின் பேச்சு, தூங்கும் நெஞ்சங்களை தட்டி எழுப்பும் தன்மையுடன் வெளிவந்தது அருமை. கல்யாணப் பரிசு தொடர் நமது தினசரி வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆசிரியருக்கு நன்றி!! ஜெ.ச.நித்யா, மதுரை.

வேலைக்கு ஆட்கள் தேவையில்லை

வேலைக்கு ஆட்கள் தேவை. அதுவும் உடனடியாக தேவை. நிறுவனத்தில் உள்ள எல்லாத் துறைகளுக்குமே தேவை. இப்படிப்பட்ட சூழல்தான் ஏறத்தாழ எல்லா நிறுவனங்களிலும் இருக்கிறது. பணியாளர்கள் பற்றாக்குறை என்ற விஷயத்தில் சிறிய நிறுவனம் பெரிய நிறுவனம் என்ற வித்தியாசங்களெல்லாம் இல்லாமல் எல்லா நிறுவனங்களிலும் இதே சூழல்தான்.

முடியாதென்று நினைக்காதீர்கள்

ஒன்றைச் செய்ய முற்படும்போது அதற்கு இருக்கக்கூடிய ஒரே தடை, நம்மால் முடியாது என்கிற எண்ணம் மட்டும்தான். அந்த எண்ணத்தை அகற்றியவர்கள் அத்தனை பேரும் சாதித்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு வெளிச்சம் போட்டு காட்டுகிற உண்மை.

உள்ளே இருப்பதை உணர்ந்தால் போதும்

நேர்காணல் என்.எல்.பி. நிபுணர் திரு. ஜெயசேகரன் விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சி எனக்கு சொந்த ஊர். மிகவும் ஏழ்மையாக குடும்பம் எங்களுடையது. என் தந்தை தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அம்மா வீட்டில் உள்ள நான்கு எருது களையும் ஒரு பசு மாட்டையும் பார்த்துக் கொள்வார். அவைதாம் என் குடும்பத்தின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்தன … Continued

படம் சொல்லும் பாடம்

எனக்கு மட்டும் ஏன் இப்படி? எதற்கு இப்படி? என்ற கேள்விகளையும் புகார்களையும் நாம் அன்றாடம் செய்து கொண்டிருக்கிறோம். எந்த வித உடல் குறையும் இல்லை, நாம் விரும்பியதை தேர்ந்தெடுக்க சுதந்திரம் உண்டு, இருந்தும் வாழ்வின் பாதி நேரங்களில் நமக்கு நிறைவே ஏற்படுவதில்லை. இந்த சிந்தனையை மாற்ற நாம் நிச்சயம் கற்றுகொள்ள வேண்டும், இந்த படங்கள் சொல்லும் … Continued

பயிற்சியால் எல்லாமே முடியும்

வாடிக்கையாளர்கள், எந்த ஒரு நிறுவனத்தையும் வாழ வைப்பவர்கள். ஒவ்வொரு நிறுவனமும் புது வாடிக்கை யாளர்களைப் பெறவும், உள்ள வாடிக்கையாளர் களைத் தக்க வைத்துக் கொள் வதற்கும் நிறைய உத்திகளைக் கையாளுகின்றன. சில நிறுவனங்கள் இதற்காகத் தங்கள் பணியாளர்களுக்கு அளிக்கும் பயிற்சியும், சந்தையில் கொடுக்கும் விளம்பரங்களும், மற்றும் பிற செயல் களையும் கணக்கிட்டால் செலவுகள் பிரமிக்க வைக்கும்.

நீங்களும் பொதுமேடைகளில் பேசலாம்

முனைவர் எக்ஸ்.எல்.எக்ஸ்.வில்சன் உங்களுக்கு வேண்டியவர்கள் யாராவது உங்களை பொதுமேடையில், மக்கள் மத்தியில் உரை நிகழ்த்த வேண்டும் என்று உங்களை அழைக்கும்போது, உங்கள் மனநிலை எவ்வாறு இருக்கும்? பொதுவாக பலருக்கு இது ஒரு கடினமான செயல்பாடாகவே இருக்கும். பொதுவாக நாம் ஐந்து அல்லது ஆறு நபர்களுடன் எளிதாக பேச முடிகிறது.

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 6

மனித வாழ்வின் மகத்தான சோகம் எதுவென்று சாதனையாளர் ஒருவரிடம் சில இளைஞர்கள் கேட்டார்கள். ”எந்த இலக்கையும் வகுத்துக் கொள்ளாமல், வாழ்வில் எதையுமே சாதிக்காமல் இருப்பதுதான் மகத்தான சோகம்” என்றார் அவர். இளைஞர்கள் புறப்பட நினைத்தபோது, ”இன்னொரு பெரிய சோகம் இருக்கிறது” என்றார்.

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 5

வியட்நாம் யுத்தத்தில் சிறைப்பிடிக்கப்பட்டார். மேஜர் ஜேம்ஸ் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை. அந்தச் சின்னஞ்சிறிய அறையின் தனிமையில், பைத்தியம் பிடிக்காமலிருக்க, தனக்குப் பிரியமான கால்ஃப் விளையாட்டை மனதுக்குள்ளேயே விளையாடிப் பார்த்தார்.

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 4

அந்தப் பணக்காரச் சிறுவனுடன் ஏழைச் சிறுவன் ஒருவன் கட்டிப் புரண்டு சண்டை போட்டான். தோற்றுப் போனதும் ஏழைச் சிறுவன் சொன்னான். ”உன்னைப் போல நல்ல சாப்பாடு கிடைத்திருந்தால் நானும் ஜெயித்திருப்பேன். பணக்காரச் சிறுவன் அதிர்ந்து போனான். அன்று முதல் எளிய ஆடைகளே அணிந்தான்.