நன்றியுடன்

-வழக்கறிஞர். த, இராமலிங்கம் குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை என்று ஒரு திரைப்படப்பாடலில் எழுதுகிறார் கண்ணதாசன். தான் ஈன்ற குட்டி களின் மீது இயல்பாக இருக்கும் பாசம் தவிர, விலங்குகளிடத்தில், மற்ற மெல்லிய உணர்வுகளைப் பார்க்க முடிவதில்லை. அப்படி ஏதேனும் கேள்விப் பட்டால், கண்டிப்பாக அது ஒரு செய்திதான்! மனிதனே, உணர்வுகளுக்கு ஆட்பட்டவன். … Continued

மௌனம் என்னும் பேச்சு

– வழக்கறிஞர் த. இராலிங்கம் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை, நம்முடன் இருப்பவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளுமாறு சொற்களில் வெளிப்படுத்துவது, மிகத் தேவையானது. மேடைகளில் பேசுவதைக் குறிப்பிடவில்லை. சாதாரணமாக உரையாடும் போதே, இத்திறமை மிகவும் தேவைப்படுகின்றது. ஒரு திறமையாகவே இதைக் குறிப்பிடக் காரணங்கள் உண்டு. நம் கருத்தினை எப்படி வெளிப்படுத்துகின்றோம் என்பதே, நமது உறவுகளைத் தீர்மானிக்கிறது. குடும்பங்களில் … Continued

உறவுகளின் உன்னதம்

– வழக்கறிஞர் த. இராமலிங்கம் புது வண்டி வாங்கும்போது, முதல் சில மாதங்களுக்கு அல்லது குறிப்பிட்ட சில கிலோ மீட்டர் தூரம் வண்டி ஓடும் வரை, அதற்கு இலவசச் சேவை உண்டு. வண்டி வாங்கும் எவரும், இந்த இலவசச் சேவைகளை இழப்பதில்லை. மிகச்சரியாக அதைப் பயன்படுத்தி, வண்டியின் பொறியினை யையும் மற்ற பாகங்களையும் சரி செய்து … Continued

நிலை உயரும்போது..

-வழக்கறிஞர் த. இராமலிங்கம் கிராமத்துக் கதைகளை எழுதுவதில் வல்லவரான பெரியவர் திரு.கி.ராஜ நாராயணன் அவர்களின் எழுத்தில், கரிசல் மண்ணின் மணம் ததும்பும். அத்துடன், அவற்றில் மிக ஆழமான செய்திகளும் கிடைக்கும். கொஞ்சம் அதிகாரம் கிடைத்தாலும் மனிதன் அதை வைத்து எப்படி ஆடுகின்றான் என்பதனைச் சொல்லும் கதை இது.

உள்ளொன்று வைத்து..

வழக்கறிஞர் த. இராமலிங்கம் எனக்கு நல்ல பழக்கம்தான் அவர்; அலுவலகத்தில் எல்லோருடனும் சிரித்துப் பேசுவார்; எல்லோருடைய பிரச்சனைகளுக்கும் ஏதாவது தீர்வு சொல்வார்… ஆனால் அலுவலக மேலாளரிடம் நான் சொல்லாததைச் சொன்னதாகச் சொல்லி, அவர் நல்ல பெயர் வாங்கிக் கொண்டார். எனக்குப் பெரிய சிக்கலாகி விட்டது என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டார் நண்பர் ஒருவர்.

அன்று சொன்னவை..! அர்த்தமுள்ளவை!!

– வழக்கறிஞர் த. இராமலிங்கம் தொலைக்காட்சி ஒன்றில், நகைச்சுவை நடிகர் ஒருவர், ஒரு துணுக்கினைச் சொல்லிவிட்டு, அவரே சிரித்துக் கொண்டிருந்தார். தற்செயலாக அதைப் பார்க்க நேரிட்டபோது, நகைச்சுவையை விட, ஆழமான ஒரு செய்தி அந்தத் துணுக்குக்குள் மறைந்திருப்பதாகவும், அது நகைச்சுவை என்னும் நீரில் கரைந்து போவதாகவும் பட்டது. அதை நம் பார்வையில் பார்க்கலாம். கணவன், மனைவி … Continued

விலங்குக்குள் மனிதம்

– வழக்கறிஞர் த. இராமலிங்கம் விலங்கினத்தில் இருந்து மனிதன் மாறுபட்டு இருப்பது, அவனது அறிவினால்தான். அந்த அறிவினால் பயன் ஒன்று இருக்க வேண்டும் அல்லவா? பிறருக்கு வரும் துன்பத்தினைத் தன் துன்பமாக எண்ணுவதுதான் அறிவின் உண்மை யான பயன் என்கிறான் வள்ளுவன். அப்படியொரு எண்ணம் தோன்றவில்லை என்றால், அறிவினால் விளையும் நன்மை வேறொன்றில்லை என்றும் கூறுகிறான். … Continued

இருப்பதை உணர்வோம்

வழக்கறிஞர் த, இராமலிங்கம் தனக்குள்ளே ஆற்றல் இல்லாதவர் என்று ஒருவருமே இல்லை. எந்த ஒரு மனித படைப்பும் வீணான படைப்பு இல்லை. நாம் நம்முடைய பலவீனங்களை மிக பலமாகவும், பலத்தை மிக பலவீனமாகவும் பிடித்திருக்கிறோம். ‘இழக்கும்வரை நம்மிடம் இருப்பதன் அருமை நமக்குத் தெரிவதில்லை’ என்று பொதுவாக நாம் அனைவருமே பேசிக் கொள்கிறோம். ஒன்றின் முக்கியத்துவத்தை உணராமல், … Continued

அவரவர் கடமை

– வழக்கறிஞர் த. இராமலிங்கம் வேடிக்கையான ஜென் கதை ஒன்று உண்டு. மிகப் பெரும் பணத்துடனும் அதிகாரத்துடனும் இருந்த ஒருவருக்கு, அனைத்திலும் பற்று குறைந்து கொண்டே வந்தது. மனம் தத்துவ சிந்தனைகளில் ஈடுபட்டது. தனது சிந்தனைகளை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்பியவர், ”எங்கே போய் படிப்பது… யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது…?” என்றெல்லாம் பலரிடமும் விசாரித்தார்.