கான்பிடன்ஸ் கார்னர் – 3
பெர்லின் ஒலிம்பிக்ஸில் ஒரு விசித்திரமான தீர்ப்பு வெளிவந்தது. இரவு 10.30 மணிக்கு மேல் விளக்கொளி வெள்ளத்தில் நடந்த போல்வால்ட் போட்டியில் முதலாவதாக வந்தவரையும் நான்காவதாக வந்தவரையும் நடுவர்களால் இனங்காண முடிந்தது. இருவருமே அமெரிக்க வீரர்கள். ஆனால் இரண்டாவது இடத்திலும் மூன்றாவது இடத்திலும் இரண்டு ஜப்பானியர்கள்.