சாதிக்கும் பாதையில் விவேகான்ந்த வெளிச்சம்

1. அன்பின் தன்மை விரிவடைதல். சுயநலம் என்பது சுருங்கிப் போதல். அன்புமயமானவன் வாழ்வை உணர்கிறான். அன்பில்லாதவன் வாழும்போதே சாகிறான். வாழ்வதற்கு சுவாசம் எவ்வளவு முக்கியமோ, அன்பு அவ்வளவு முக்கியம்.

அட்டைப்படக் கட்டுரை

உங்கள் குழந்தைகளும் சாதிப்பார்கள் -மரபின் மைந்தன் முத்தையா ஒரு குழந்தைக்கு, தன்னைப் பற்றிய அபிப்ராயமும், தன் தகுதிகள் குறித்த அறிமுகமும் பெற்றோர்களின் பாராட்டிலிருந்தோ வசவில் இருந்தோ பிறக்கிறது. சின்னத்தவறொன்றுக்கு “அட மக்குப் பயலே!” என்று தலையில் குட்டு வாங்கும்போது குட்டு, தலையில் பதிகிறது. தான் ஒரு மக்கு என்கிற எண்ணம் மூளையில் பதிகிறது.

அட்டைப்படக் கட்டுரை

உங்கள் விதிகளை உருவாக்குங்கள் – மரபின் மைந்தன் முத்தையா வாழ்க்கைக்கென்று முன்னோர் வகுத்த விதிகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நியாயமான – நிறைவான – நிம்மதியான வாழ்க்கைக்கு என்னென்ன வேண்டும் என்கிற முடிவை நீங்கள் முதலில் எடுங்கள். உங்கள் வாழ்வுக்கான விதிகளை மற்றவர்களுக்கு இடையூறில்லாமல் நீங்கள் உருவாக்குங்கள். உங்கள் கட்டுக்குள் உங்கள் வாழ்க்கை இருக்கும்போது … Continued

வெற்றி வேண்டுமா வழிகள் இதோ!!

-மரபின் மைந்தன் ம. முத்தையா எதைச் செய்தாலும் வெற்றிக்காகவே செய்கிறோம். ஆனால், எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான் வெற்றியும் தோல்வியும். செய்கிற வேலைகளும் தொழில்களும் வேறுபடலாம். பொதுவானதாக இருப்பது அணுகுமுறையும், நம்மை ஆயத்தம் செய்து கொள்கிற விதங்களும்தான். அவற்றில் கவனம் செலுத்துகிறபோது வெற்றிக்கான விதை விழுகிறது.

உங்கள் வாழ்வில் மூன்று சக்திகள்

உங்களையே நீங்கள் கேட்டுப் பார்க்க வேண்டிய கேள்வி இதுதான். உங்களால் ஆளுமைமிக்க மனிதராக விளங்க முடிகிறதா? இந்தக் கேள்வியைப் படித்தவுடனேயே உங்கள் நண்பர்கள் – உங்களுக்கு வேண்டியவர்கள் – உங்களைப் பற்றிச் சொல்லும் பாராட்டு மொழிகளும், உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்கள் உங்களிடம் காட்டும் பணிவும் உங்கள் நினைவுக்கு வரும். “ஆமாம்! நான் ஆளுமைமிக்க மனிதர்”தான் என்று … Continued

வருமானம் பெருக வளமான வழிகள்

நமக்கு நம்பிக்கை தருகிற முக்கியமான அம்சங்களில், முன்னணியில் இருப்பது வருமானம். நிறைய மனிதர்களின் அகராதியில், அதிக வருமானமென்றால் வேலைக்குப் போகாமல் காலாட்டிக் கொண்டே இருந்தாலும் வந்து சேர்கிற பணம் என்றொரு பொருள் இருக்கிறது.

மனஅழுத்தம் நீங்க 30 வழிகள்

-மரபின்மைந்தன் ம. முத்தையா வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் அழுத்தங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பலரும் ஆடிப்போய் விடுகிறார்கள். செய்த செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்த விளைவு ஏற்படாத போதும், எதிர்பாராத எதிர் விளைவுகள் ஏற்படும்போதும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

பின்னடைவுகளை பிளந்து முன்னேறு

– மரபின் மைந்தன் ம. முத்தையா வாழ்வில் சில சம்பவங்கள் நமக்கு சவால்விடும் விதமாய் அமையும். அத்தகைய சவால்கள் வரும்போதெல்லாம் தொடை தட்டி எழுபவர்கள் சோதனைகளைக் கடந்து சாதிக்கிறார்கள். தொடை நடுங்கி நிற்பவர்கள் தோற்கிறார்கள். இது ஒற்றை வரி உபதேசமல்ல. உண்மையின் சாரம். நிகரற்ற சாதனையாளர்கள் வாழ்வில் நிரூபிக்கப்பட்ட சத்தியம்.

இனிமேல் இல்லை மனச்சோர்வு

– மரபின் மைந்தன் ம. முத்தையா அச்சத்தில் இருப்பவர்களில் தொடங்கி உலை கொதிக்கும் நேரத்தில் அரிசிக்கு வழி தேடுபவர்கள்வரை பலதரப்பினருக்கும் ஏதோ ஒரு மனச்சோர்வு ஏற்படத்தான் செய்கிறது. தனிமை – தோல்வி பற்றிய அச்சம் – தோற்ற வலியின் மிச்சம் – இழப்புகள் – ஏமாற்றம்… என்று எத்தனையோ புறக்காரணங்களைப் பட்டியலிடலாம்.

இலட்சியத்தின் சுட்டுவிரல்

– மரபின் மைந்தன் ம. முத்தையா பாய்ந்து வரும் ஜீவநதியைப் பார்க்கும்போது அதன் பாதையும் பயணமும் இன்னதென்று பொதுப்படையாக யாரும் வகுத்துவிட முடியாது. ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து, பூமிப் பரப்பை ஈரப்படுத்தி, பயிர்களுக்கு உயிர் கொடுத்து, வேர்களை பலப்படுத்தி விரைந்து கொண்டே இருக்கிறது நதி.