நமக்குள்ளே..

கவிதாசன் காட்டும் திசைகளானது ஓசை இல்லாமல் பசையாக பவ்யமாக எங்கள் மனதில் ஒட்டிக்கொள்கிறது, விழும் போதெல்லாம் விஸ்வரூபம் எடு, நீ புண்படும்போதெல்லாம் புன்னகை செய்து கொண்டே முன்னேறு என்ற வரிகள் மிகவும் அருமை. ”சிரமங்கள் இல்லாமல் சிகரங்கள் இல்லை” என்பதை அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளருக்கு நன்றி. தே.கவியரசு, தருமபுரி.

வீட்டிற்கொரு பில்கேட்ஸ்

உங்கள் குழந்தை பில்கேட்ஸ் ஆகவேண்டுமா? -அத்வைத் சதானந்த் பத்து வருடத்திற்கு முன்னால் ஒரு பத்திரிகையில் படித்த செய்தி இன்றும் எனக்கு பளிச்சென்று நினைவில் இருக்கிறது. அவர் உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர். அவர் பணத்தை எப்படி செலவிடுவது? என்று சில யோசனைகளை அதில் சொல்லி இருந்தார்கள். அவரிடம் இருக்கும் பணத்தை கொண்டு 80 நாடுகளின் ஒட்டுமொத்த உற்பத்தியை … Continued

வௌவால் வாழ்க்கை வாழுங்கள்

– சாதனா வௌவால் எப்படி இரவில் பறக்கிறது? டொனால்டு ஆர்.கிரிப்பின், ராபர்ட் கேலம்போஸ் என்ற இரு விலங்கியல் ஆய்வாளர்களுக்கு நீண்ட நாட்களாய் ஒரு சந்தேகம் இருந்து வந்தது. “கும்மிருட்டில் கூட எப்படி வௌவால்கள் எதிலும் மோதிக்கொள்ளாமல் பறக்கின்றன?” என்பதுதான் அவர்களின் சந்தேகம்.

வெற்றிப் பக்கங்கள்

-கிருஷ்ண வரதராஜன் உலகத்திலேயே, ‘அதிக உழைக்கும் திறன் உள்ளவர்கள், இந்தியர்கள்’ என்று ஒருவர் ஆய்வின் மூலம் கண்டறிந்தார். அந்த ஆய்வு முடிவை ஏற்றுக் கொள்ளாத அவரின் நண்பர்கள் கேலி செய்யும் பாவனையோடு கேள்வி கேட்டார்கள், ‘அப்படி யென்றால் இந்தியா இந்நேரம் வல்லரசாக வந்திருக்க வேண்டுமே?’

வார்த்தை புரிந்தால் வாழ்க்கைப் புரியும்

-ரிஷபாருடன் தமிழில் சில சொற்கள் மேம்போக்காகக் கையாளப்பட்டாலும் அடிப்படையில் அவற்றுக்கு வேறு பொருள் இருக்கும். கன்னா பின்னா என்றொரு பிரயோகம் உண்டு. கன்னன் என்பது கர்ணனைக் குறிக்கும் சொல். பின்னா என்பது, அவனுக்குப் பின்னால் பிறந்தவனாகிய தருமனைக் குறிக்கும். ஒருவரை கர்ணமகராசா, தரும மகராசா என்றெல்லாம் புகழ்வதுதான் கன்னா பின்னா என்று புகழ்வது. (உடனே உங்களுக்கு … Continued

வாழ நினைத்தால் வாழலாம் நிகழ்ச்சியில் ருத்ரன் பதில்கள்

ஒரு மனிதனின் புத்திசாலித்தனம் என்பது ஜீன்களின் மூலம் வருவதா? பயிற்சிகளின் மூலம் வருவதா? அடிப்படையில் அறிவு ஒன்றுதான். அதை நாம் எப்படி திறம்பட பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் அது மெருகேறுகிறது. நம் கணக்குப்படி இருநூறுக்கு இருநூறு வாங்கும் குழந்தை புத்திசாலி என்று நினைக்கிறோம். அந்தக் குழந்தைக்கு இருநூறுக்கு நூறு வாங்கிவிட்டு டெஸ்ட் மேட்சில் செஞ்சுரி அடிப்பது … Continued

பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள்..

இந்த மாதம் ரமேஷ் பிரபா (இன்று புகழின் உச்சியைத் தொட்டவர்களும் தங்களுக்கான நம்பிக்கையை எங்கிருந்தோ பெற்றிருப்பார்கள். அந்த அனுபவங்கள் குறித்து உதவி ஆசிரியர் கனகலட்சுமியுடன் உரையாடுகிறார்கள் பிரபலங்கள்) நான் எனது வாழ்க்கையில் நம்பிக்கை பெற்ற நொடிகளைப் பற்றி பேசுவதை விட மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய நொடிகளை பேசுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். காரணம் எனது … Continued

கற்பனைக்கு மேனி தந்து

அதிசயங்கள் சாத்தியம் என்கிறது அடோரா மல்டிமீடியா ‘கற்பனைக்கு மேனிதந்து கால்சதங்கை போட்டுவிட்டேன்!’ என்றொரு பாடல் உண்டு. ‘கற்பனைக்கு மேனிதந்து கால்சராய்’ கூடப் போடலாம் என்று சொல்கிறது, கிராபிக்ஸ் அனிமேஷன் மல்டி மீடியா துறை. புதுமைகள் புகுந்து வருவதற்கான வாசல் களைத் திறந்து கொண்டேயிருக்கும் கிராஃபிக்ஸ் அனிமேஷன் துறையில் இன்று விரல் நுனியில் நிகழ்கின்றன வியப்பூட்டும் ஜாலங்கள்.

நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும்

– ருக்மணி பன்னீர்செல்வம் அடிகுழாயில் ஊற்றப்படும் நீர்போல் நம்முடைய புலன்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளும், உள்வாங்கும் அறிவை எல்லாம் அப்படியே உள்ளிருப்பாய் வைத்திருப்பதில் பயன் ஒன்றும் இல்லை. (சிலர் அறிந்து கொள்வதுமில்லை, வைத்திருப்பதும் இல்லை என்பது வேறு விஷயம்). உள்ளே ஊற்றிய நீர் கீழிறங்கி விசையின் மூலம் பூமிக்கடியில் இருக்கும் ஊற்று நீரை வெளியே … Continued

நமக்குள்ளே…

ஜுன் 2011 இதழில் துணை ஆட்சியர் திரு.ங.எ.ராஜமாணிக்கம் அவர்களின் பேச்சு, தூங்கும் நெஞ்சங்களை தட்டி எழுப்பும் தன்மையுடன் வெளிவந்தது அருமை. கல்யாணப் பரிசு தொடர் நமது தினசரி வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆசிரியருக்கு நன்றி!! ஜெ.ச.நித்யா, மதுரை.