மனமே உலகின் முதல் கணினி

ஒவ்வொரு சப்தத்திற்கும் தனித்துவம் உண்டு. ஒவ்வொரு சப்தத்திற்கும் அவசியமும் அர்த்தமும் உண்டு. ஒவ்வொரு சப்தமும், நமக்கும் மற்றவர்க்கும் இடையே ஒருவித தாக்கத்தை உருவாக்குவதும் உண்டு. சப்தங்கள் நமக்கும் மற்றவருக்கும் எப்போதும் ஏதோ ஒரு செய்தியை சொல்லியே செல்கிறது. இவை அனைத்தையும் நாம் விழிப்புடன் கேட்டிருக்கிறோமா?

பூமியில் உலவிய புல்லாங்குழல்

– பிரதாபன் நபிகள் நாயகம் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்றும் அவர் வழியே இறை வாசகங்கள் அருளப் பட்டன என்றும் இசுலாம் சொல்கிறது. கோடிக் கணக்கானவர்கள் பின்பற்றும் ஒரு மார்க்கத்தின் மறைநூலை வெளிப்படுத்தியவர் எழுதப் படிக்க அறியாதவர் என்பதில் முக்கியமான ஓர் அம்சம் இருக்கிறது. புல்லாங்குழல் இசையின் பிறப்பிடமாக இருப்பதற்குக் காரணமே அதிலுள்ள வெற்றிடம் தான். தன்னுள் … Continued

சான் கொங்சாங்

அக்குழந்தை பிறந்தது ஏப்ரல் 7, 1954இல். இவர் பெற்றோரான சார்லஸும், லீ லீ சானும் இவருக்கு வைத்த பெயர் “சான் கொங்சாங்”. சான் பிறக்கும்போது 12 கிலோ எடையுடன் பிறந்ததால், அறுவை சிகிச்சை செய்து வெளி யெடுக்கக்கூட பணமின்றி வறுமையில் வாடிய இக்குடும்பம் நண்பர்களின் உதவியோடு இவரை பெற்றெடுத்தனர். மிகுந்த வறுமையையும் புறம் தள்ளி, “சான்”னின் … Continued

உறவுகளின் உன்னதம்

– வழக்கறிஞர் த. இராமலிங்கம் புது வண்டி வாங்கும்போது, முதல் சில மாதங்களுக்கு அல்லது குறிப்பிட்ட சில கிலோ மீட்டர் தூரம் வண்டி ஓடும் வரை, அதற்கு இலவசச் சேவை உண்டு. வண்டி வாங்கும் எவரும், இந்த இலவசச் சேவைகளை இழப்பதில்லை. மிகச்சரியாக அதைப் பயன்படுத்தி, வண்டியின் பொறியினை யையும் மற்ற பாகங்களையும் சரி செய்து … Continued

உற்சாகமாக நடப்போம்

– இசைக்கவி ரமணன் ஆறுமனமே ஆறு! அந்த ஆண்டவன் கட்டளை ஆறு! ஆறு என்றால் வழி, அறுத்துச் செல்வது என்று ஆறு என்று, ஆற்றுப்படை பற்றிப் பேசும்போது விளக்குவார்கள். 1. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? புறநகர்ப் பகுதியில் ஒரு புதிய குடியிருப்பு. எனில், நீங்கள் தேடும் முகவரி ஒரு நீண்ட கட்டுரை போலத்தான் இருக்கும். ஃப்ளாட் … Continued

போட்டிகளை எதிர்கொள்ளுங்கள்

விரித்து வைக்கப்பட்ட சதுரங்கப் பலகையில் அணிவகுத்திருக்கும் காய்களின் அடுத்த கட்ட நகர்வு குறித்த திட்டமிடுதல் யுத்தமா? விளையாட்டா? தீர யோசித்தால் இரண்டும்தான் என்றே தோன்றும். அதை விளையாட்டாகவே நாம் நினைத்தாலும் கூட எதிர்க்காய்களின் வீழ்ச்சியில்தான் இன்னொரு தரப்பின் வெற்றி இருக்கிறது.

நமக்குள்ளே..

”சாட்சிகள் யாருமே இல்லாத உரையாடலில் என்னை நீ எப்படி நம்புகிறாய்? என்று நபிகள் கேட்டார். நபியே! இறைவன் இருக்கிறான் என்று நீங்கள் சொன்னீர்கள். நம்பினோம்” இந்த வரிகள் உண்மையில் எதார்த்தத்தை யோசிக்க வைக்கிற வார்த்தைகள் அழகு, வாக்கியங்களும் அழகு, அதைச் சொன்ன விதம் அழகோ அழகு.

வாங்க டீ சாப்பிடலாம்

காலை பத்தரை மணியிருக்கும். முன்னும் பின்னும் இருவர் முகம் நிறைய சிரிப்புடன் அழைத்துவர, பேண்ட் சட்டை போட்ட பலியாடு போல் அந்த பேக்கரிக்குள் அவர் அழைத்து வரப்பட்டார். “மூணு முட்டை பப்ஸ் மூணு டீ” என்று ஆர்டர் செய்த கையோடு, “சொல்லுங்ணா” என்று தொடங்கினார், முதலில் வந்த இளைஞர். “பழனிவேல் சொன்னாப்லீங் கண்ணா! நீங்க இன்வெஸ்ட் … Continued

நிலை உயரும்போது..

-வழக்கறிஞர் த. இராமலிங்கம் கிராமத்துக் கதைகளை எழுதுவதில் வல்லவரான பெரியவர் திரு.கி.ராஜ நாராயணன் அவர்களின் எழுத்தில், கரிசல் மண்ணின் மணம் ததும்பும். அத்துடன், அவற்றில் மிக ஆழமான செய்திகளும் கிடைக்கும். கொஞ்சம் அதிகாரம் கிடைத்தாலும் மனிதன் அதை வைத்து எப்படி ஆடுகின்றான் என்பதனைச் சொல்லும் கதை இது.

கைவிளக்கு

முதலடிக்கு ஏது முகூர்த்தம் இசைக்கவி ரமணன் முற்றத்தில் தவழ்ந்து முழங்கால் தேயும் குழந்தை, முதலடி எடுத்து வைக்கும் அழகைப் பார்த்திருக்கிறீர்கள்தானே? பிஞ்சுக் கரங்கள் இரண்டும் வெட்ட வெளியில் துடுப்புத் துழவ, முழங்கால் நிமிர்வதும் குழைவதுமாய்த் தயங்க, பஞ்சுப் பாதம் பதியாமல் தள்ளாட, சின்னவிழி இரண்டும் சிறுவானாய் விரிய, அதிர்ச்சியும் எக்களிப்புமாய் அது தட்டித் தடவித் துள்ளி … Continued