ஒளிமயமான எதிர்காலம்

– சொல்வேந்தர் சுகிசிவம் யார் நீங்கள்? முடியாததை முடிப்பவரா? முடிந்ததை முடிப்பவரா? ஜாலியாக இருக்க வேண்டும். சுலபமான வேலை பார்க்க வேண்டும். தளுக்கான வேலை பார்த்து சுமாரான சம்பளம் வாங்கி, சினிமா, ஹோட்டல், செக்ஸ், சாராய சமாசாரங்களை அப்படி இப்படி எப்படியோ அனுபவித்தபடியே இருக்க வேண்டும். அலட்டிக் கொள்ளக் கூடாது. சட்டையோ, மூளையோ எதுவுமே கசங்கவே … Continued

ஒரு நிர்வாகியின் டைரிக் குறிப்பு

– ஏ.ஜே.பராசரன் சர்வதேச அளவில், நிர்வாகவியல் நிபுணர்கள் ஒரு சர்ச்சையைப் பெரிதாக விவாதித்து முடிவு கண்டிருக்கிறார்கள். தரத்தைத் தக்க வைத்துக் கொள்வது எந்தத் துறையில் கடினம்? உற்பத்தித் துறையிலா? சேவைத் துறையிலா?

எளிது… எளிது… வெல்வது எளிது!

– முகில் தினகரன் நாளை மறுநாள் சாவித்திரி அந்த ஊருக்குப் புறப்படுகிறாள்.முன்னதாக இன்றே மேஜை, நாற்காலி, கண்ணாடிகள், அலமாரிகள், மற்றும் ஒரு மகளிர் அழகு நிலையத்திற்குத் தேவையான அலங்கார வஸ்துகள், எல்லாவற்றையும் வேனில் ஏற்றி அனுப்பிவிட்டு இப்போதுதான் அறைக்குத் திரும்பினாள். வந்தவள் உடையைக் கூட மாற்றாமல் அப்படியே தொப் பென்று படுக்கையில் விழுந்து சோம்பல் முறித்தாள்.

மற்றுமொரு சுதந்திர நாள்

– மரபின் மைந்தன் ம. முத்தையா ஆகஸ்ட் 15ற்கு ஆயத்தமாகிறது நாடு. கொடியேற்றங்களும் கோலாகலங்களுமாய் அமர்க்களப்படும். அறிக்கைகள், உறுதி மொழிகளுக்குப் பஞ்சமிராது. அரசாங்கம் ஒருபுறம் கொண்டாட்டங்களில் மூழ்கிக் கிடக்க, சராசரி இந்தியன் தொலைக்காட்சி முன்னர் பக்திப்பரவசமாய்த் தவமிருப்பான்.

ஆளப்பிறந்தவன் நீ

– தயாநிதி பிறரைப் புண்படுத்தாமல் நமது ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ள சில குறிப்புகள் * ஆளுமைத்திறனுடன் செயல்பட வேண்டிய அடுத்த வார, மாத நிகழ்வுகளை முன் கூட்டியே தெரிவு செய்து, அந்நிகழ்வுகளின் போது எவ்வாறெல்லாம் சிறப்புடன் செயலாற்றலாம் என யோசித்து வைப்போம்.

ஆயிரம் ஆயுதம்!

– இயகோகா சுப்பிரமணியன் சிகரத்தில் கொடியை நாட்டிய பிறகு நின்றவர் யாரும் கிடையாது – வேறொரு சிகரம் தேடிச் செல்லாமல் வாழ்க்கைப் பயணம் முடியாது!

சிந்தனை செய் மனமே…

– இரா. கோபிநாத் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நாம் உள்வாங்கும் தகவல்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், நமது எண்ணங்களைக் கட்டுப்படுத்தலாம். எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நமது செயல்களைக் கட்டுப்படுத்தலாம், செயல்கள் மூலமாக விளைவுகளைக் கட்டுப்படுத்தலாம், வெற்றியடையலாம்.

வெற்றிப் பாதை : எண்ணத்தை சீரமைத்தால் வாழ்க்கை சீராகும்

– விழா அரங்கிலிருந்து பாணபத்திரன் நமது நம்பிக்கை மாத இதழும் பி.எஸ்.ஆர். சில்க் சாரீஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் வெற்றிப்பாதை’ பயிலரங்கின் முதல் நிகழ்ச்சி கடந்த 17.07.2005 ஞாயிறு அன்று கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள தாமோதர் அரங்கில் நடைபெற்றது.

என் அமெரிக்கப் பயணம்

– மரபின் மைந்தன் ம.முத்தையா நகர்ந்து கொண்டிருப்பது நதியின் இயல்பு. பயணம் செய்வது மனித இயல்பு. இந்தியச் சமய மரபில் பயணம் என்பது ஆன்மீக வளர்ச்சியின் அம்சம். கங்கை, காவிரி, கன்யாகுமரி என்று பல இடங்களுக்கும் பயணம் செய்து, எல்லா இடங்களும் இறைவனின் இருப்பிடம் என்பதை உணரச் செய்வதற்காகவே தீர்த்த யாத்திரைகள் சமயத்தின் பெயரால் செய்யப்பட்டன.