மனமே உலகின் முதல் கணினி
ஒவ்வொரு சப்தத்திற்கும் தனித்துவம் உண்டு. ஒவ்வொரு சப்தத்திற்கும் அவசியமும் அர்த்தமும் உண்டு. ஒவ்வொரு சப்தமும், நமக்கும் மற்றவர்க்கும் இடையே ஒருவித தாக்கத்தை உருவாக்குவதும் உண்டு. சப்தங்கள் நமக்கும் மற்றவருக்கும் எப்போதும் ஏதோ ஒரு செய்தியை சொல்லியே செல்கிறது. இவை அனைத்தையும் நாம் விழிப்புடன் கேட்டிருக்கிறோமா?
அறிய வேண்டிய ஆளுமைகள்
மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த இளைஞனுக்கு தான் ஏமாற்றப்படுகிறோம் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை. தூத்துக்குடி பக்கமுள்ள நாகலாபுரம் என்ற கிராமம்தான் அந்த இளைஞனின் சொந்த ஊர். படிக்க வசதியில்லாமல் பத்தாம் வகுப்புடன் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி விட்டு தங்கள் ஊர்க்கார இளைஞர்கள் பலரைப் போலவே சென்னையில் உள்ள தேநீர்க்கடைகளில் வேலை பார்க்க வந்த அந்த இளைஞனுக்கு … Continued
பூமியில் உலவிய புல்லாங்குழல்
– பிரதாபன் நபிகள் நாயகம் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்றும் அவர் வழியே இறை வாசகங்கள் அருளப் பட்டன என்றும் இசுலாம் சொல்கிறது. கோடிக் கணக்கானவர்கள் பின்பற்றும் ஒரு மார்க்கத்தின் மறைநூலை வெளிப்படுத்தியவர் எழுதப் படிக்க அறியாதவர் என்பதில் முக்கியமான ஓர் அம்சம் இருக்கிறது. புல்லாங்குழல் இசையின் பிறப்பிடமாக இருப்பதற்குக் காரணமே அதிலுள்ள வெற்றிடம் தான். தன்னுள் … Continued
சான் கொங்சாங்
அக்குழந்தை பிறந்தது ஏப்ரல் 7, 1954இல். இவர் பெற்றோரான சார்லஸும், லீ லீ சானும் இவருக்கு வைத்த பெயர் “சான் கொங்சாங்”. சான் பிறக்கும்போது 12 கிலோ எடையுடன் பிறந்ததால், அறுவை சிகிச்சை செய்து வெளி யெடுக்கக்கூட பணமின்றி வறுமையில் வாடிய இக்குடும்பம் நண்பர்களின் உதவியோடு இவரை பெற்றெடுத்தனர். மிகுந்த வறுமையையும் புறம் தள்ளி, “சான்”னின் … Continued
உறவுகளின் உன்னதம்
– வழக்கறிஞர் த. இராமலிங்கம் புது வண்டி வாங்கும்போது, முதல் சில மாதங்களுக்கு அல்லது குறிப்பிட்ட சில கிலோ மீட்டர் தூரம் வண்டி ஓடும் வரை, அதற்கு இலவசச் சேவை உண்டு. வண்டி வாங்கும் எவரும், இந்த இலவசச் சேவைகளை இழப்பதில்லை. மிகச்சரியாக அதைப் பயன்படுத்தி, வண்டியின் பொறியினை யையும் மற்ற பாகங்களையும் சரி செய்து … Continued
உற்சாகமாக நடப்போம்
– இசைக்கவி ரமணன் ஆறுமனமே ஆறு! அந்த ஆண்டவன் கட்டளை ஆறு! ஆறு என்றால் வழி, அறுத்துச் செல்வது என்று ஆறு என்று, ஆற்றுப்படை பற்றிப் பேசும்போது விளக்குவார்கள். 1. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? புறநகர்ப் பகுதியில் ஒரு புதிய குடியிருப்பு. எனில், நீங்கள் தேடும் முகவரி ஒரு நீண்ட கட்டுரை போலத்தான் இருக்கும். ஃப்ளாட் … Continued
நம்பிக்கை தான் என் பலம்
நேர்காணல்: கனகலட்சுமி டாக்டர். அம்பேத்கார் சட்டக் கல்லூரியின் முதல் திரு. ராமமூர்த்தி அவர்களுடனான நேர்காணல் உங்களைப் பற்றி… நாங்கள் நான்கு தலைமுறைகளாகவே பெங்களூரில் வசித்து வருகிறோம். என் தகப்பனார் பென்னி ஆலையில் வேலை பார்த்து வந்தார். என் கல்லூரி படிப்பு முடிந்ததும் அதே ஆலையில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆலையிலே பணிபுரிந்தவாறே டிப்ளமோ … Continued
போட்டிகளை எதிர்கொள்ளுங்கள்
விரித்து வைக்கப்பட்ட சதுரங்கப் பலகையில் அணிவகுத்திருக்கும் காய்களின் அடுத்த கட்ட நகர்வு குறித்த திட்டமிடுதல் யுத்தமா? விளையாட்டா? தீர யோசித்தால் இரண்டும்தான் என்றே தோன்றும். அதை விளையாட்டாகவே நாம் நினைத்தாலும் கூட எதிர்க்காய்களின் வீழ்ச்சியில்தான் இன்னொரு தரப்பின் வெற்றி இருக்கிறது.
நமது பார்வை
சூழலுக்கும் கறுப்புப் பணத்துக்கும் எதிராய் உள்ளடங்கி ஒலித்துக் கொண்டிருந்த குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டன. பொன்னான கனவுகளுடன் அன்னா ஹசாரே மீண்டும் மக்கள் சக்தியைத் திரட்டத் தொடங்கி விட்டார். அவருக்கு அதிக வேலை வைக்காமல் பொதுமக்களும் பொதுநல இயக்கங்களும் தாமாக முன்வந்து அன்னா ஹசாரே அருகே நிற்கிறார்கள்.
நமக்குள்ளே..
”சாட்சிகள் யாருமே இல்லாத உரையாடலில் என்னை நீ எப்படி நம்புகிறாய்? என்று நபிகள் கேட்டார். நபியே! இறைவன் இருக்கிறான் என்று நீங்கள் சொன்னீர்கள். நம்பினோம்” இந்த வரிகள் உண்மையில் எதார்த்தத்தை யோசிக்க வைக்கிற வார்த்தைகள் அழகு, வாக்கியங்களும் அழகு, அதைச் சொன்ன விதம் அழகோ அழகு.