கான்பிடன்ஸ் கார்னர் – 1
குளத்தில் விழுந்து மிதந்த மலரொன்று அதிலிருந்த மீனிடம் கேட்டது. “சுதந்திரத்துடன் இந்தக் குளத்தில் சுற்றிச் சுற்றி நீந்துகிறாயே, உனக்கு இந்தக் குளம் நிறைய உரிமை கொடுத்திருக்கிறதா?” மீன் சொன்னது. “இந்தக் குளத்திலிருக்கும் அழுக்கையெல்லாம் நான் சுத்தம் செய்கிறேன்.
பயம்கொள்ளாமல் இயங்கு
மின்னல் கிழித்த கோடுக ளெல்லாம் மழையின் கோலங்கள் ஆகும் செந்நெல் செழித்த வயல்களின் நடுவே தென்றல் கோலங்கள் போடும் தன்னில் பிறந்த எண்ணக் கோடுகள் சிந்தனைக் கோலங்கள் ஆகும் இன்னும் இன்னும் உள்ளே அமிழ எண்ணங்கள் இமயம் ஆகும்!
நமக்குள்ளே
“முதலடிக்கு ஏது முகூர்த்தம்” என்ற திரு.ரமணன் அவர்களது கட்டுரை மிக அருமை. தன் குழந்தை முதலடி எடுத்து வைக்கும் அழகை கண்டு, ஒரு தாய் பெறும் மகிழ்ச்சியை இந்த கட்டுரை எனக்கு தந்துவிட்டது. இசைக்கவி ரமணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். கவிதா, கும்பகோணம். புத்தகம் என்ற ஒன்று நமக்கெல்லாம் பல காகிதங்களின் தொகுப்பு. ஆனால் … Continued
இரட்டை சம்பளம் வாங்குங்கள்
– கிருஷ்ண வரதராஜன் கடந்த வாரம் ஒரு நிறுவனத்திற்கு பயிற்சிக்காக சென்றிருந்தேன். பயிற்சியில் பங்குபெற்ற பணியாளர்களை பார்த்துக் கேட்டேன். ‘உங்கள் சம்பளத்தை முடிவு செய்தது யார்?’ (இந்த இடத்தில், உங்கள் பதிலை யோசித்துவிட்டு மேலே படியுங்கள். ) சிலர், ‘மேலாளர்’ என்றார்கள். சிலர், ‘நிர்வாக இயக்குநர்’ என்றார்கள். நான் கேட்டேன், “சரி. இன்று உங்களுக்கு பயிற்சி … Continued
வேலைக்கு ஆட்கள் தேவையில்லை
காய்கறி மார்க்கெட்டில் கத்திரிக்காய் விற்கும்போது பார்த்திருக்கிறீர்களா? போட்டி போட்டுக் கொண்டு விற்பார்கள். “கிலோ இருபது ரூபாய்” என்று ஒருவர் கத்திக்கொண்டிருந்தால், எதிரில் இருப்பவர், “கிலோ பத்தொன்பது” என்று இன்னும் சத்தமாய் கத்துவார். அதுவும் நேரம் நேரம் ஆக ஆக, அடுத்த நாள் வைத்து விற்க முடியாத காய்கறியாய் இருந்தால் இன்னும் விலை குறைந்து கொண்டே இருக்கும். … Continued
நீங்கள் வேலைபார்க்கும் நிறுவனத்தில் தலைவராகத் தயாராகுங்கள்..!!
– கிருஷ்ணன் நம்பி இந்தக்கதை உங்கள் கதையாக இருக்கக் கூடாது என்ற பிரார்த்தனையோடு படிக்கத் துவங்குங்கள். தமிழ்நாட்டிலிருந்து டெல்லி செல்லும் அந்த ரயிலில்தான் திருவாளர் டென்ஷன் அமர்ந்திருந்தார். அவரைப்பற்றி தெரியாததால் அவரோடு பயணம் செய்த எல்லோரும் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார்கள். விக்கல் எடுத்த ஒருவர், திருவாளர் டென்ஷன் மினரல் பாட்டில் வைத்திருப்பதை பார்த்துவிட்டு, “சார் கொஞ்சம் … Continued
உங்களை விளம்பரம் செய்யுங்கள்
– சாதனா இப்படியும் சில விளம்பரங்கள் தமிழில் வெளிவரும் செய்தித்தாள்களை பார்க்கும்போது ஏதோ ஒரு விளம்பர இதழ் போலவே தெரியும். காரணம் முதல் பக்கம் முழுவதும் விளம்பரமாக இருக்கும். சின்ன ஒரு கட்டத்தில் தலைப்பு செய்தியின் இரண்டு பாராக்களை போட்டுவிட்டு தொடர்ச்சி மூன்றாம் பக்கம் பார்க்க என்று போட்டிருப்பார்கள்.
பிஸினஸ்ல பின்னுங்க
– கிருஷ்ண வரதராஜன் பில்கேட்ஸின் பிஸினஸ் அட் தி ஸ்பீடு ஆஃப் தாட்ஸ் புத்தகத்தை கடந்த வாரம் மறு படியும் படித்தேன். அந்தப் புத்தகம் எனக்குப் பிடித்துப் போனதற்கு அதன் தலைப்பும் ஒரு காரணம், ‘எண்ணங்களின் வேகத்திற்கு வணிகம் செய்யுங்கள் ‘. வணிகத்தைப் பொறுத்தவரை, ‘இதை நாம் செய்யலாமா’ என்று புதிய ஐடியா ஒன்றை நீங்கள் … Continued
ஓர் அன்னையின் கனவு
– சுகி சிவம் அப்போது காயத்ரிக்கு வயது மூன்று அல்லது நான்கிருக்கும். அழைப்பு மணி அடித்தது. பிஞ்சுக் கைகளால் கதவைத் திறந்த பிள்ளை திரும்ப உள்ளே வந்தபோது, யார் மணியடித்தது என்று கேட்டார் அப்பாயி. ‘போஸ்ட்மேன்’ என்று ஒற்றைச் சொல்லில் பதில் வந்தது. உடனே ஓர் அறை விழுந்தது அந்தக் குழந்தைக்கு. போஸ்ட்மேன் அண்ணா என்று … Continued
ஆயிரம் சிறகுகள் முளைத்தன
– சிந்தனை கவிஞர் கவிதாசன் எனது முதல் கவிதை நூல் நனவுகளும் கனவுகளும் தலைப்பிரசவ வேதனையோடு 1983இல் வெளிவந்தது. நிகழ்காலத்தின் அவலங்களின் அழு குரல்களோடு எதிர்காலத்தின் நம்பிக்கைக் கீற்று களும் ஏக்கப் பெருமூச்சுகளும் அதில் கவிதைகளாக அரங்கேறி இருந்தன. சிற்பியில் விழுகின்ற மழைத்துளி முத்தாக மாறுவதைப்போல, நெஞ்சின் ஆழத்தில் விழும் சமுதாயப் பதிவுகளும் எதிர்பார்ப்புகளும் கவிதை … Continued