அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை
ரவி தமிழ்வாணன் பாராட்டு
.ஏ.அப்துல்ஹமீது கல்வி அறக்கட்டளை சார்பாக பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது படிக்கும் மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி 23-01-2009 அன்று நடந்தது. ஆக்கூர் ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளி தொடங்கி மாயூரம் ஆசாத் பெண்கள்
உயர்நிலைப்பள்ளிசீர்காழியில் உள்ள அனைத்து உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் கான்வெண்ட்டுகளில் அடுத்தடுத்து இந்த விழா வெகு விமர்சையாக நடந்தது.
ரவி தமிழ்வாணன் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளையின் ஸ்தாபகர் அப்துல் மாலிக் அவர்கள் தனது சொந்த செலவில் இந்த உயர்ந்தச் சிந்தனையை சமூகத்தில் வளர்த்தெடுத்து வருகிறார். விழாவில் பள்ளி மாணவ மாணவியருக்கு 3000 புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் மாணவ மாணவிகளோடு பள்ளி ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். தவிர சிறப்பு அழைப்பாளராக துபாய் சாதிக், துபாய் கிபாய்துல்லா, ஆக்கூர் ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளி தாளாளர் பொறியாளர் இக்பால், மயிலாடுதுறைஆசாத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் என்கொயர் இக்பால். விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.வி.ராதாகிருஷ்ணன், பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.எஸ்.நடராஜன் ச.மு.இ.மே.நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராமன். எல்.எம்.சி பள்ளி உதவி தலைமை ஆசிரியர், சீர்காழி இந்தியன் வங்கி மேலாளர் கண்ணன், சீர்காழி பால்சாமி நாடார் அறக்கட்டளை தலைவர் எம்.ராமர், “பாட்டாளி மக்கள் கட்சியின் விவசாயப் பிரிவு தலைவர்” சேகர், சீர்காழி “யு.ஏ.இ. எக்சேஞ்” நூர்முகம்மது என பலரும் கலந்து கொண்டு அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளையின் பணிகளைப் பாராட்டி, அதன் ஸ்தாபகர் அப்துல் மாலிக் பி.இ., அவர்களை வாழ்த்திப் பேசி விழாவைச் சிறப்பித்தனர். விழா ஒருங்கிணைப்பாளரும் அறக்கட்ளையின் இணைச் செயலாளருமான கொள்ளிடம் இரவிச்சந்திரன் எல்லோருக்கும் நன்றி கூறினார்.
Leave a Reply