திசைகள் திறந்துவிடும்

உனக்கென உள்ளது ஓருலகம் – அதை
உருவாக்குவதே உன் கடமை
தனக்கெனத் தடைகள் வந்தாலும் – மனம்
தளராதிருப்பதே தனிப்பெருமை

மனக்கதவுகளைத் திறந்துவிடு – புது
மலர்ச்சியை உள்ளம் உணர்ந்துவிடும்
தினம்தினம் முயற்சி தொடர்ந்துவிடு – உன்
திசைகள் அனைத்தும் திறந்துவிடும் !

வெற்றிக்கு வியர்வை விலையாகும் – உன்
உன் வழியினில் புகழும் நிலையாகும்
கற்றதை நிகழ்த்துதல் கலையாகும் – அது
கைவரப் பெற்றால் நலமாகும்!

திட்டம் வகுப்பது பழகிவிட்டால் – உன்
திறமை செயலாய் வளர்ந்துவிட்டால்
எட்ட முடியும் எண்ணியதை – நீ
எளிதில் தொடுவாய் சிகரங்களை.
முயற்சியைத் தேடி வெற்றி வரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *