எதுவும் கைகூடும்

இவர்கள் எழுந்த மனதுக்குள்ளே
சுற்றும் காற்று நுழைவதில்லை!
கவலைகள் வளர்ந்த இதயத்திலே
கனவின் வெளிச்சம் விழுவதில்லை!

எட்டுத் திசையும் திறந்திருக்கும்
இதயத்தில் வெற்றி விளைகிறது!
கட்டிவைக்காத கனவுகளே
காரியமாய் அங்கு மலர்கிறது!

தன்னைத் தீவென மாற்றுபவன்
தனக்குள் மூழ்கித் திணறுகிறான்!
என்றும் எங்கும் கலப்பவனே
எல்லா வகையிலும் உயருகிறான்!

ஆமையின் ஓடு சுமையாகும்
ஆதலினால் நடை மெதுவாகும்!
பூமி முழுவதும் உறவென்றால்
புதுமைகள் தினமும் உருவாகும்!

மூடிகள் இல்லா மனதோடு
முன்னேற்றங்கள் எளிதாகும்!
தேடிய எதுவும் கைகூடும்
தேவைகள் அனைத்தும் நிறைவேறும்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *