உன் வாழ்க்கை மாறும்

– மரபின்மைந்தன் ம. முத்தையா

ஒருவானம் தானே ஒரு வாய்ப்பு தானே
உன்வாழ்வை உருவாக்க நீ வா
உதவாது சோர்வு! அது இல்லை தீர்வு
உரம்கொண்ட நெஞ்சோடு நீ வா?

சுருளாத வலிவும் சரியான தெளிவும்
சுகம்சேர்க்கும் உன்வாழ்வில் … நீ வா!
சுடர்வீசும் கண்கள் சுமைதாங்கும் தோள்கள்
சலியாத மனம்கொண்டு நீ வா!

இருக்கின்றபோதே ஜெயிக்கின்ற வாழ்வு
இதுதானே நாம்காண வேண்டும்!
எதிர்ப்பின்றி எதையும் உதிர்க்கின்ற நடையும்
இருந்தாலே புகழுன்னைத் தீண்டும்!

கருவான கனவு நனவாகும் பொழுது
காலங்கள் உன்பேரை கூறும்
கனமான கவலை அடியோடு உதறு
கணப்போதில் உன்வாழ்க்கை மாறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *