விடியலுக்கு வெளிச்சமாய் நிற்போம்!

– சிந்தனைக் கவிஞர் கவிதாசன்

கற்ற பள்ளியை
நினைக்கும்பொழுது…
காலத்தின் மணற்பரப்பில்
கால் பதிக்கிறோம்!

கற்பித்த ஆசிரியர்களை
வணங்கும் போதெல்லாம்
வரலாற்றின் பக்கங்களில்
இடம் பிடிக்கிறோம்!

பள்ளி நண்பர்களைச்
சந்திக்கும் பொழுது –
பிள்ளைப் பருவத்தில்
மீண்டும் பிறக்கிறோம்!

இளைய தலைமுறைக்கு
வழிகாட்டும் பொழுது –
கலங்கரை விளக்கமாக
உயர்ந்து நிற்கிறோம்!

ஆகவே
ஆண்டுக்கொரு முறையாவது
கற்ற பள்ளிச் செல்வோம்…
நாளை விடியலுக்கு
வெளிச்சமாய் நிற்போம்!

இதைப் புத்தாண்டின்
முதல் தீர்மானமாக
நெஞ்சில் வைப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *