உறியடி வாழ்க்கை

– மரபின் மைந்தன் ம. முத்தையா

குறிக்கோள் நோக்கிப் பயணம் போகையில்
கனவுகள் குதிரைகள் ஆகும்
குதிரையை சுண்டிக் கிளம்பிடு தோழா
கருதிய எதுவும் கைகூடும்

மறிக்கும் தடைகளை அகற்றும் சக்தி
மனிதனின் கனவுக்குண்டு
மயக்கம்- தயக்கம் முற்றிலும் நீக்கி
முயன்றால் வெற்றிகள் உண்டு

தறியின் சுதியில் தாள கதியில்
இழைகள் நெசவும் ஆகும்
கனவின் சுதியில் செயல்கள் பிறந்தால்
காலம் உன்பெயர் கூறும்

உறியடிக்கான வழுக்கு மரமாய்
உள்ளது தம்பி உலகம்
உந்தி உந்தி மேலேஏறு
உலகம் உன்னைப் புகழும்.

5 Responses

  1. rasa.ganesan

    வித்தியாசமான நம்பிக்கை வரிகள் :

    குறிக்கோள் நோக்கிப் பயணம் போகையில்
    கனவுகள் குதிரைகள் ஆகும்
    குதிரையை சுண்டிக் கிளம்பிடு தோழா
    கருதிய எதுவும் கைகூடும்