நமக்குள்ளே

மாற்றங்களின் பலம் மகத்தானது கட்டுரை எந்த தொழிலிலும் செய்யும் புதிய சின்னச்சின்ன மாற்றங்கள் மகத்தான வெற்றியை தருகிறது என்று உணர்த்தியது. கட்டுரையின் இறுதியில், மாற்றம் வந்தால் ஏற்றம் வரும். ஏற்றமே வெற்றியைத் தரும் என்ற வரிகளைப் படித்ததும் எங்களுக்கு தேர்தல்தான் ஞாபகத்திற்கு வந்தது. ஷங்கர், கோபி மரபின்மைந்தன் முத்தையா அவர்களின் அறியவேண்டிய ஆளுமைகள் தொடர் அடுத்த … Continued

படம் சொல்லும் பாடம்

எந்த திசையில் பறந்தாலும் பிடிக்க முயன்றால்.. கனவுகளை கைவிட தேவையேயில்லை. இலக்கின் மீதான பார்வை விலகுகிற போது தான் தடைகள் தெளிவாக தெரிகின்றன.

புது வாசல்

நம்பிக்கை மேல் நம்பிக்கை ஒரு நாட்டின் அரசருக்கு, அவரது ஒற்றன் ஒரு அவசர செய்தியை கொண்டு வந்திருந்தான். “தலைமை மருத்துவர் தங்களுக்கு கொடுப்பதற்காக கொண்டுவந்து கொண்டிருக்கும் மருந்தில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறது.” சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கே அரண்மனை வைத்தியர் வந்துவிட்டார். ஒற்றன் கண் ஜாடை காட்டினான், ‘அரசே இம்மருந்தை சாப்பிடவேண்டாம் இதில்தான் விஷம் கலந்திருக்கிறது.’

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 6

கடுமையான பாலைவனத்தில் முகாமிட்டிருந்தார் அந்த ராணுவவீரர். அவருடைய மனைவியும் உடன் சென்றிருந்தார். தகிக்கும் வெய்யிலையும் எங்கும் வீசியடிக்கும் அனலையும் மணலையும் அவரால் தாங்க முடியவில்லை. தன் தந்தைக்குக் கடிதம் எழுதினார். அவர் தந்தை பதிலெழுதினார்.

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 5

யார் வழி நடத்த வேண்டும், யார் வழி நடக்க வேண்டும் என்கிற பிரச்சினை, அலுவலகம் ஒன்றில் அடிக்கடி எழுந்தது. இந்த சிக்கல் மேலதிகாரியின் கவனத்திற்கு சென்றது. சம்பந்தப்பட்ட அனைவரையும் ஓரிடத்தில் அமர வைத்த அதிகாரி, அறைக்குள் அங்கு மிங்கும் வேகமாக நடந்துவிட்டு, “புரிகிறதா?” என்றார்.

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 4

குளிர் நிரம்பிய பொழுதொன்றில் காலணிகள் கடையின் ஜன்னல் வழியே ஏக்கத்துடன் காலணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனின் தோளில் கரமொன்று படிந்தது. புன்னகை முகத்துடன் பெண்மணி ஒருவர், “என்ன பார்க்கிறாய்” என்று கேட்டார். “எனக்கு ஒரு ஜோடி காலணிகள் தருமாறு கடவுளைக் கேட்டுக்

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 3

இரவு வேளைகளில் தன்னை ஒரு பேய் துரத்துவது போன்ற கனவு அந்த மனிதனுக்கு அடிக்கடி வந்தது. பகலில் அந்தக் கனவைப் பற்றி நினைத்தாலே உடல் நடுங்கும். அவ்வளவு மோசமான கனவு அது. ஒருநாள் அதே கனவு. அதே பேய். இப்போது கனவில் அந்தப் பேய், அந்த மனிதனின் மிக அருகே வந்துவிட்டது. அந்த மனிதன் கேட்டான், … Continued

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 2

கூண்டில் இருந்த அந்தக்கிளி, “விடுதலை வேண்டும்! விடுதலை வேண்டும்” என்று விடாமல் மிழற்றிக் கொண்டிருந்தது. மனமிரங்கிய மனிதர் ஒருவர் அதன் கூண்டைத் திறந்து விட்டார். கதவு திறந்த பிறகும்கூட கிளி, “விடுதலை வேண்டும்! விடுதலை வேண்டும்” என்று குரல் கொடுத்ததே தவிர வெளியே வர வில்லை. நாமே பிடித்து வெளியே விடலாம் என்று கையைக் கூண்டில்

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 1

காதலனைக் காணாமல் கலங்கினாள் அந்தப் பெண். கவலை தீர வழி கிடைக்குமென்று குருவிடம் போனாள். அவரோ அவளைப் பேச விடாமல் ஒரு பை நிறைய ஆரஞ்சுப் பழங்களைக் கொடுத்து, “இதை உடனே அந்த மலையுச்சிக்குக் கொண்டு போ” என்றார். மனச் சுமையும் கைச்சுமையும் தாங்கி மெல்ல நடை போட்டாள்.

வண்ணப் பலகையல்ல வரலாற்று கல்வெட்டு

வளரும் சிகரங்கள் குடந்தையில் தொடங்கிய இளந்தளிர் இயக்கம் கும்பகோணம் சீமாட்டி ரெடிமேட்ஸ் நிறுவனம் விடுத்த அழைப்பின் பேரில் பெற்றோர் களுடன் வந்து குவிந்த குழந்தைகள் முகங்களில், அரங்கில் நுழைந்ததுமே மின்னலிட்டது மகிழ்ச்சி. அவர்களுக்கான இருக்கைகளில், அவர்களுக்கு முன்னரே அமர்ந்திருந்தன சில அழகிய பைகள். உள்ளே குழந்தைகளுக்கு விருப்பமான தின் பண்டங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அழகிய நாப்கின், … Continued