உங்களுக்குத் தெரியும் என்பது தெரியுமா?

– பாவை வித்யாஷ்ரம் அறிமுக விழாவில் டாக்டர் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். அந்தப் பேராசிரியரின் பெயர் ராமசாமி. கல்லூரியின் என்.சி.சி அலுவலரும்கூட. “பாபு! என்னை அறையில் வந்து பார்!” என்றந்த மாணவனை அழைத்ததில் மாணவர் பதறிப் போனார். கல்லூரி மாணவர்களைக்கூட கை வைக்கும் அளவு கண்டிப்பான ஆசிரியர் அவர். அறையில் வைத்து அறை கொடுப்பாரோ என அஞ்சியபடியே … Continued

இந்திய ஜனாதிபதியாவேன்..

தொழிலதிபர் முகமது இலியாஸ் அதிரடி பேட்டி உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால்? என்னுடைய பிறந்த ஊர் தற்பொழுது வ.உ.சி மாவட்டத்திலுள்ள வல்ல நாடு என்ற குக்கிராமம். என்னுடன் பிறந்தவர்கள் ஏழு பேர். அதில் முதல் ஐவர் ஆண்கள் கடைசி இருவர் பெண்கள். நான் என்னுடைய பெற்றோருக்கு நான்காவது ஆண் மகன். என் பிறந்த தேதி 21-09-1959. … Continued

தேர்தல் என்பது எதுவரை

காதலும் கல்யாணமும் எதுவரை என்பதற்கு கவியரசு கண்ணதாசன் கேள்வி பதிலாகவே ஒரு பாடல் எழுதியிருப்பார். “காதல் என்பது எதுவரை? கல்யாண காலம் வரும்வரை! கல்யாணம் என்பது எதுவரை? கழுத்தினில் தாலி விழும்வரை!” என்பது அந்தப் பாடல். கவிஞர் இன்று இருந்திருந்தால், “தேர்தல் என்பது எதுவரை” என்று புதிய பாடல் ஒன்றை இயற்றியிருப்பார். நடந்து முடிந்த தேர்தலில் … Continued

இப்படியும் நடக்குது

குடியிருப்புப்பகுதியில் நாய் வளர்ப்பது வெகு சிரமம் என்று கருதியிருந்தோம். ஆனால் எங்கள் பொமரேனியன் நாய் டைகர், எங்கள் குடியிருப்பு முழுவதும் பிரபலமாகிவிட்டது. நம்மைத் தெரியாதவர்களுக்குக்கூட நம் நாயைத் தெரியும் என்பார் என் கணவர். ஒரு தடவை பொது விருந்தொன்றில் ஒருவரை எங்கள் உறவினர் அறிமுகம் செய்தார்.

எது என் பாதை

– பதினென் கவனகர் கனக சுப்புரத்தினம் ஆரம்பகாலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் வகுப்புகளில் நான் உற்சாகமாக பாடம் நடத்துவதையறிந்த எங்கள் பள்ளி நிர்வாகி, பள்ளி விழாவில், “நேருவைப் பற்றி பேச வேண்டும்” என்றார். மேடைப் பேச்சில் எனக்கு அனுபவம் இல்லையென்பதால் தயங்கியபடி, சரி என்றேன். விழா நாளும் வந்தது. என் பேச்சிற்கு மாணவர்கள் மத்தியில் பயங்கர … Continued

கான்பிடன்ஸ் கார்னர் – 4

”இருபது வயது வரை என் அம்மா என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார். அவர் முதுமையடைந்தவுடன் அவர் மரணம் வரை இருபது ஆண்டுகள் நான் அதை விட நான் நன்றாகப் பார்த்துக் கொண்டேன். கணக்கு நேராகி விட்டதல்லவா” என்று நபிகள் நாயகத்திடம் ஒருவர் கேட்டார். நபிகள் சொன்னார், ”கணக்கு நேராகாது. உன் அம்மா உன்னை வளர்த்தது, உன்னை

கான்பிடன்ஸ் கார்னர் – 3

பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்த கூட்டத்தில், ஒரு மனிதனின் வெற்றி எதிலிருக்கிறது என்று கேட்டார் அந்த ஞானி. ”படிப்பில்” என்றார்கள் சிலர். ”பெறும் விருதுகளில்” என்றனர் சிலர். ”சேர்த்த சொத்தில்” என்றனர் சிலர். ”செய்கிற நல்ல காரியங்களில்” என்றனர் சிலர். இல்லை யென்று மறுத்த ஞானி சொன்னார், ”பெறுகிற

கான்பிடன்ஸ் கார்னர் – 2

சிறுவனாய் இருந்தபோது தன்னை மிகவும் துன்புறுத்திய தந்தை முதுமை அடைந்தார். நடுத்தர வயதை எட்டிய மகன் சொன்னார், ”அப்பா! நீங்கள் இறந்து போனால் நான் வருத்தப் படுவேனோ இல்லையா என்று தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். நீங்கள் இறந்து போகும்வரை வருத்தப் படாமல் இருப்பீர்கள்

கான்பிடன்ஸ் கார்னர் – 1

சுதந்திரமாகவும் சுகமாகவும் 60 ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்த தம்பதிகள் பலரிடம், ”உங்கள் நீடித்த இல்லறத்தின் ரகசியம் என்ன?” என்று தனித்தனியே கேட்டார்கள். ”என் கணவர் எனக்காக செய்த தியாகங்கள்” என்று மனைவிமார்கள் சொன்னார்கள். ”என் மனைவி எனக்காக செய்த தியாகங்கள்” என்று கணவன்மார்கள் சொன்னார்கள்.

பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள்

இந்த மாதம் கலைமாமணி நாஞ்சில் நாடன் அவர்களே எனக்கு வாழ்க்கையில் நம்பிக்கை இழப்பு தருணங்கள்தான் அதிகம். படிப்பு, வேலை தேடி போன காலங்கள் என அனைத்திலும் ஒரு இருண்மை சிந்தனை (டங்ள்ள்ண்ம்ண்ள்ற்ண்ஸ்ரீ ர்ன்ற்ப்ர்ர்ந்) தான் இருந்தது. ”நான் எல்லாம் எங்கே படிச்சு, வேலை பார்த்து, சம்பாதிச்சு” என்றெல்லாம் தோன்றும். ஆனால் எனக்கொரு தோல்வியோ, வருத்தமோ, ஏமாற்றமோ … Continued