நீங்களும் பொதுமேடைகளில் பேசலாம்
முனைவர் எக்ஸ்.எல்.எக்ஸ்.வில்சன் உங்களுக்கு வேண்டியவர்கள் யாராவது உங்களை பொதுமேடையில், மக்கள் மத்தியில் உரை நிகழ்த்த வேண்டும் என்று உங்களை அழைக்கும்போது, உங்கள் மனநிலை எவ்வாறு இருக்கும்? பொதுவாக பலருக்கு இது ஒரு கடினமான செயல்பாடாகவே இருக்கும். பொதுவாக நாம் ஐந்து அல்லது ஆறு நபர்களுடன் எளிதாக பேச முடிகிறது.