தலைமுறை தொழிலதிபர்கள் தரும் பாடங்கள்

எல்லோரது மனதிலும் சாதாரணமாகவே ஒரு தொழிலதிபராக, எவரிடத்தும் பணிபுரியாமல் சுயமாகச் சம்பாதிப்பது தான் உண்மையான வெற்றி என்று ஒரு தவறான எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்தவர்களைச் சாராமல், அடுத்தவர்களது துணை, உதவி இல்லாமல் யாராக இருந்தாலும் வெற்றி என்பது சாத்தியமல்ல. சொல்லப்போனால் உங்களது மனதில் நீங்கள் வெற்றியாளராக நினைத்து, ஓர் உந்துசக்தியாகக் கருதிக் கொண்டிருக்கும் மனிதர்கூட. … Continued

மாத்தி யோசி

-அத்வைத் சதானந்த் உங்கள் எதிரி யார்? நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக்கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல்ஆம்ஸ்ட்ராங் என்று. நிலவில் முதன்முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது என்பதால் நானே சொல்லிவிடுகிறேன் அவர், எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். … Continued

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

– சிநேகலதா ”கற்பனை செய்வதில் முன்னனுபவம் உண்டா?” நேர்காணலில் கேட்டார், அதிகாரி. ”நிறைய உண்டு சார்! எங்க பூர்வீக வீட்டை வித்திருக்கேன். வயலை வித்திருக்கேன். மனைவி நகைகளை வித்திருக்கேன். என் ஸ்கூட்டரைக் கூட நேத்துதான் வித்தேன்” என்றாராம் வேலை கேட்டுவந்தவர். உள்ளதையெல்லாம் விற்றுவிட்ட சோக மல்ல விற்பனை. உற்சாகத்துடன் மேற்கொள்வது தான் விற்பனை. கொடுக்கப்பட்ட இலக்கை … Continued

அச்சுக் குதிரையில் அச்சமின்றி ஏறினேன்

– சிந்தனைக் கவிஞர் கவிதாசன் திசைகள் தோறும் வாய்ப்புகள் இருக்கும் திறமைகள் இருந்தால் வாவென அழைக்கும். அடுத்த நாள் கல்லூரிக்கு உற்சாகத்தோடு எனது இலட்சியத் தீர்மானங்களோடும் வந்தேன். ஆனால், கல்லூரியில் சோகம் தோய்ந்த முகத்தோடும் கலங்கிய கண்களோடும் கல்லூரியின் வளாகமெங்கும் மாணவர்கள் கூட்டங்கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். எனது வகுப்பறையின் முன்பாக நின்று கொண்டிருந்த எனது வகுப்பு … Continued

உந்தி எழு உயரப் பற

– பேராசிரியர் பர்வீன் சுல்தானா உந்தி எழு; உயரப்பற என்கின்ற தலைப்பை நான் வித்தியாசமாக உணர்கிறேன். ஒன்று, நமக்குள் ஒரு சக்தி இருக்கின்றது. இரண்டாவது, நாம் அடைய வேண்டிய இலக்கு, நமக்கு முன்னால் இருக்கின்ற சாத்தியக் கூறுகள் என நான் இந்த தலைப்பிற்கு பொருள் கொண்டுள்ளேன். நம் வாழ்வில் மாற்றங்கள் நிகழாமல் எதுவுமே நடை பெறுவதில்லை. … Continued

விலங்குக்குள் மனிதம்

– வழக்கறிஞர் த. இராமலிங்கம் விலங்கினத்தில் இருந்து மனிதன் மாறுபட்டு இருப்பது, அவனது அறிவினால்தான். அந்த அறிவினால் பயன் ஒன்று இருக்க வேண்டும் அல்லவா? பிறருக்கு வரும் துன்பத்தினைத் தன் துன்பமாக எண்ணுவதுதான் அறிவின் உண்மை யான பயன் என்கிறான் வள்ளுவன். அப்படியொரு எண்ணம் தோன்றவில்லை என்றால், அறிவினால் விளையும் நன்மை வேறொன்றில்லை என்றும் கூறுகிறான். … Continued

உங்கள் பிள்ளைகள் அயல்நாடுகளில் படிக்க போகிறார்களா?

பயன்மிக்க பாதுகாப்பு டிப்ஸ் – பிரதாபன் அயல்நாட்டில் படிப்பு என்னும் அற்புத மான வாய்ப்பு உங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கப் போகிறதா? வாழ்த்துக்கள். பல இலட்சங்கள் செலவுசெய்து புதிய இடத்தில் படிக்கப்போகும் பிள்ளைகள் அதீத உற்சாகத்தில் வம்பை வரவழைத்துக் கொள்ளாமல் இருப்பதும் முக்கியமில்லையா? சர்வதேச கல்வியியல் நிபுணர்கள், புதிய சூழலில் மாணவ மாணவியர் பின்பற்றவேண்டிய சில பாதுகாப்பு … Continued

புள்ளிகளை இணையுங்கள் பெரும்புள்ளிகளாய் ஆவீர்கள்..

– வினயா இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் என்ற கவிஞர் எழுதிய வரிகள் இவை. ஒரு மனிதன் தன்னுடைய வட்டத்தைப் பெருக்கிக் கொண்டே போகிற போது, அவனுடைய சக்திவட்டமும் பெருகி விரிகிறது என்பதை இந்தக் கவிதை வரிகள் சொல்லாமல் சொல்கிறது. தன்னை பிரபஞ்சத்தில் ஒரு துளியாகப் பார்ப்பவர்கள் சாதாரண மனிதர்கள். தங்களை பிரபஞ்சத்தின் ஒளியாகப் பார்ப்பவர்களே சாதனை மனிதர்கள்.

அறிய வேண்டிய ஆளுமைகள்

-மரபின் மைந்தன் முத்தையா டேல் கார்னகி சுயமுன்னேற்ற உலகில் ஒவ்வொருநாளும் உச்சரிக்கப்படும் பெயர்களில் ஒன்று டேல் கார்னகி. அமெரிக்காவில் உள்ள மிசௌரியில், ஏழை விவசாயிக்கு மகனாக 1888இல் பிறந்தவர் இவர். இனிதாகக் கழியவில்லை, இளமைப்பருவம். பொறுப்புக்களுடன் போராடிக்கொண்டே படிக்க வேண்டியிருந்தது.

பில்கேட்ஸ் தேவையா இது உங்களுக்கு..?

‘கம்டெக்ஸ்’ என்ற பெயரில் கம்ப்யூட்டர் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய பில்கேட்ஸ், ”கார் தயாரிக்கும் நிறுவனமாகிய ஜெனரல் மோட்டர்ஸ், கம்ப்யூட்டர் துறை போல் புதிய தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்திருந்தால், 25 டாலர்களுக்கு கார்கள் கிடைக்கும். ஒரு கேலன் டீசலுக்கு ஆயிரம் மைல்கள் ஓட்டலாம்” என்றாராம்.