கான்பிடன்ஸ் கார்னர் – 5
தூரத்தில் தெரிந்த வெளிச்சத்தைத் தொடத் துணிந்த வீட்டில் பூச்சியிடம் வண்ணத்துப்பூச்சி கேட்டது. இறப்பு வருமென்று தெரிந்தும் நெருப்பை தொடுகிறாயே… ஏன்?” விட்டில் சொன்னது, “வழி தெரிவதற்காகவே வெளிச்சம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். வெளிச்சத்தை சென்று சேர்வதற்கே வழிகள் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம்” என்று.
கான்பிடன்ஸ் கார்னர் – 4
“முன்பின் அறியாத கடவுளை நான் நம்புவதில்லை” என்றார் அந்த ரயில் பயணி. அருகிலிருந்த சக பயணி, “அதனாலென்ன! நீங்கள் கடவுள் தன்மையை நம்புகிறீர்களே, அது போதும்” என்றார். நாத்திகருக்குப் புரியவில்லை. “இந்த ரயிலை இயக்குபவரை நீங்கள் முன் பின் அறிந்ததில்லை. ஆனால் பயணம் செய்கிறீர்கள்.
கான்பிடன்ஸ் கார்னர் – 3
குருவும் சீடர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். உயிரற்றவை எல்லாமே ஜடப்பொருள்கள் தானா என்ற கேள்வி எழுந்தது. சில விநாடிகள் யோசித்த குரு, “இல்லை” என்றார். ஜன்னலுக்கு அருகே வைக்கப்பட்டிருந் வீணையைக் காட்டினார். “மோதும் காற்றின் வேகத்திற்கேற்ப தந்திகள் அதிர்கின்றன.
கான்பிடன்ஸ் கார்னர் – 2
ஆணவம் மிக்க அரசன் ஒருவன், ஒரு ஞானியை சந்தித்தான். அவருடைய தீட்சண்யமும் எல்லோரையும் சம்மமாகப் பார்க்கும் தெளிவும் அரசனை அசௌகரியப்படுத்தியது. “என்னைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தெரிகிறது” என்று கேட்டான் அரசன். “ஒரு ஞானியைப்போல் செய்வதாகய் நினைத்து, “எனக்கு உங்களைப் பார்த்தால் பன்றியைப்போல் தெரிகிறது” என்றான் அரசன்.
கான்பிடன்ஸ் கார்னர் – 1
குளத்தில் விழுந்து மிதந்த மலரொன்று அதிலிருந்த மீனிடம் கேட்டது. “சுதந்திரத்துடன் இந்தக் குளத்தில் சுற்றிச் சுற்றி நீந்துகிறாயே, உனக்கு இந்தக் குளம் நிறைய உரிமை கொடுத்திருக்கிறதா?” மீன் சொன்னது. “இந்தக் குளத்திலிருக்கும் அழுக்கையெல்லாம் நான் சுத்தம் செய்கிறேன்.
பயம்கொள்ளாமல் இயங்கு
மின்னல் கிழித்த கோடுக ளெல்லாம் மழையின் கோலங்கள் ஆகும் செந்நெல் செழித்த வயல்களின் நடுவே தென்றல் கோலங்கள் போடும் தன்னில் பிறந்த எண்ணக் கோடுகள் சிந்தனைக் கோலங்கள் ஆகும் இன்னும் இன்னும் உள்ளே அமிழ எண்ணங்கள் இமயம் ஆகும்!
நமக்குள்ளே
“முதலடிக்கு ஏது முகூர்த்தம்” என்ற திரு.ரமணன் அவர்களது கட்டுரை மிக அருமை. தன் குழந்தை முதலடி எடுத்து வைக்கும் அழகை கண்டு, ஒரு தாய் பெறும் மகிழ்ச்சியை இந்த கட்டுரை எனக்கு தந்துவிட்டது. இசைக்கவி ரமணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். கவிதா, கும்பகோணம். புத்தகம் என்ற ஒன்று நமக்கெல்லாம் பல காகிதங்களின் தொகுப்பு. ஆனால் … Continued
இரட்டை சம்பளம் வாங்குங்கள்
– கிருஷ்ண வரதராஜன் கடந்த வாரம் ஒரு நிறுவனத்திற்கு பயிற்சிக்காக சென்றிருந்தேன். பயிற்சியில் பங்குபெற்ற பணியாளர்களை பார்த்துக் கேட்டேன். ‘உங்கள் சம்பளத்தை முடிவு செய்தது யார்?’ (இந்த இடத்தில், உங்கள் பதிலை யோசித்துவிட்டு மேலே படியுங்கள். ) சிலர், ‘மேலாளர்’ என்றார்கள். சிலர், ‘நிர்வாக இயக்குநர்’ என்றார்கள். நான் கேட்டேன், “சரி. இன்று உங்களுக்கு பயிற்சி … Continued
வேலைக்கு ஆட்கள் தேவையில்லை
காய்கறி மார்க்கெட்டில் கத்திரிக்காய் விற்கும்போது பார்த்திருக்கிறீர்களா? போட்டி போட்டுக் கொண்டு விற்பார்கள். “கிலோ இருபது ரூபாய்” என்று ஒருவர் கத்திக்கொண்டிருந்தால், எதிரில் இருப்பவர், “கிலோ பத்தொன்பது” என்று இன்னும் சத்தமாய் கத்துவார். அதுவும் நேரம் நேரம் ஆக ஆக, அடுத்த நாள் வைத்து விற்க முடியாத காய்கறியாய் இருந்தால் இன்னும் விலை குறைந்து கொண்டே இருக்கும். … Continued
நீங்கள் வேலைபார்க்கும் நிறுவனத்தில் தலைவராகத் தயாராகுங்கள்..!!
– கிருஷ்ணன் நம்பி இந்தக்கதை உங்கள் கதையாக இருக்கக் கூடாது என்ற பிரார்த்தனையோடு படிக்கத் துவங்குங்கள். தமிழ்நாட்டிலிருந்து டெல்லி செல்லும் அந்த ரயிலில்தான் திருவாளர் டென்ஷன் அமர்ந்திருந்தார். அவரைப்பற்றி தெரியாததால் அவரோடு பயணம் செய்த எல்லோரும் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார்கள். விக்கல் எடுத்த ஒருவர், திருவாளர் டென்ஷன் மினரல் பாட்டில் வைத்திருப்பதை பார்த்துவிட்டு, “சார் கொஞ்சம் … Continued