மரபின்மைந்தன் கவிதை

தடையில்லை

மரங்களின் வேர்கள் மண்ணோடு
மலர்களின் வாசனை காற்றோடு
உறவுகள் இருக்கட்டும் வாழ்வோடு
உணர்வுகள் கலக்கட்டும் வானோடு

இப்படி பூமியில் பிறக்கும்வரை
இருந்தோம் கருவில் கண்மூடி
தொப்புள்கொடியை வெட்டியபின்
தானாய் வளர்ந்தோம் உறவாடி

உனக்கென உறவுகள் அவசியம்தான்
உயர்வுக்கு அலையும் உடனிருக்கும்
தனக்கென மட்டும் வாழாதே
திசைகள் எட்டும் திறந்திருக்கும்

வீடு மட்டும் நீயில்லை
வரவும் செலவும் நீயில்லை
கூடு பறவையின் இடமில்லை
குதித்துக் கிளம்பு! தடையில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *