எது காதல்?

வாழ்க்கை என்பது பனிப்பாறை – அன்பின்
வெளிச்சத்தில் கரைந்தால் அது காதல்
ஆழ்கிற செயலே தவமாகும்- அதில்
அறவே தொலைந்தால் அது காதல்

மூழ்கித் துயரில் தொலைபவரை – சென்று
மீட்கத் தெரிந்தால் அது காதல்
தோழமை இன்றித் துவள்பவரைத் – தொட்டுத்
தோளுடன் அணைத்தால் அது காதல்

வயதில் கிளர்ச்சியில் வருவதல்ல – இந்த
வாழ்வின் மலர்ச்சி அது காதல்
முயலும் உறுதியில் தெரிகிறதே – அந்த
முனைப்பின் மகிழ்ச்சி அது காதல்
உயரும் வழிகளை சொல்லி வைத்து – நல்ல
ஊக்கம் கொடுத்தால் அது காதல்
பயங்கள் அறியாத் தெளிவினிலே – பல
புதுமைகள் படைத்தால் அது காதல்

ஆண் பெண் நட்பின் அருமையினை – நன்கு
அறிந்தவர் நேசம் அது காதல்
காண்பவை எதையும் பரிவுடனே – உங்கள்
கண்கள் பார்த்தால் அது காதல்
வீண்பழி விரக்தி, துரோகங்கள் என்றும்
வாராதிருந்தால் அது காதல்
மாண்புகள் எல்லாம் மலர்கின்ற – அன்பு
மணக்கும் என்றால் அது காதல்

உங்களின் காதல் எந்தவகை – இன்று

  1. alamu

    romba nalla kavidhai. kadhal pala vagai.. adil enge koriyavaio sila

    endha kavidhaiyai kadhalithu viten naan…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *