இந்த சுடர்களும் ஒளிரட்டுமே..!

உருகவைக்கும் உண்மை நிலை சில ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வரக்கூடியது தசைச்சிதைவு நோய். விருப்பமுடன் விளையாடும் போது விழுகிற குழந்தை அடிக்கடி விழுவதும், எழுவதற்கு சிரமப்படுவதும் ஆரம்ப அறிகுறிகள். உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாய் செயலிழந்து போக, கை கால்கள் மடங்கிக் கொள்ள, முடங்கிப் போகிற இந்த மலர்கள் சக்கர நாற்காலியில் காத்திருக்கின்றன… நிரந்தரமாய் குணமாக்கும் மருந்தொன்றை … Continued

நமக்குள்ளே

தலைவராக தகுதி உள்ளவர்கள் இன்று எப்படி இருக்க வேண்டும் என்று ரத்தினச்சுருக்கமாக அட்டைப்பட தலையங்கத்திற்கு கடைசிப்பக்கத்தில் விடை அளித்து விட்டார் அத்வைத் சதானந்த். ஆம் இப்ப எல்லோரும் தலைவராக தயாராக இருக்கோம். தங்கபரமேஸ்வரன், திட்டக்குடி. ஒவ்வொரு மனிதனுக்கும் அந்தரங்கமான நட்பாய் அன்றும் இன்றும் புத்தகங்களே இருக்கின்றன. நின்று, நிதானித்து, நெறிபட உரையாட புத்தகங்கள்போல் உற்ற துணை … Continued

வாழ நினைத்தால் வாழலாம்

– மனநல நிபுணர் டாக்டர் ருத்ரன் மனம் உள்ளம் மூளை என்கிற மூன்று பாகங்கள் இருக்கின்றன. மனம் என்று நீங்கள் சொன்னது உடலில் எங்கே இருக்கின்றது? அது அறிவாக இருக்கிறதா? அது மின்சாரம் போல இருக்கிறது. ஃபேன் ஓடுவதும் அதனால்தான். அது உங்கள் கண்களுக்குத் தெரியாது. மூளை என்பது இயந்திரம். அது செயல்பட இரத்தம் தேவை. … Continued

வெற்றி வாசல் 2010

மனநல மருத்துவர் டாக்டர் குமாரபாபு இன்றைய விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்துள்ள நிலையில் மூளையின் செயல்பாடு பற்றிய மர்மத்தை இன்றுவரை 5%வரைகூட அறிய முடியவில்லை. அமெரிக்காவில் டுவின் டவர் விபத்து நடந்த பின் அமெரிக்க அரசு கோடிக்கான பணத்தை மூளை பற்றி ஆராய்ச்சிக்கு ஒதுக்கியுள்ளது. என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்களோடு கலந்து வெளிவராத பல ஆய்வு கருத்துக்களை … Continued

தருவதையே பெறுகிறீர்கள்

வெற்றி வாசல் நிகழ்ச்சியில் நகைச்சுவைத்தென்றல் முனைவர் கு. ஞானசம்பந்தன் எங்கள் ஊர் சோழவந்தானில் பல மேடைப்பேச்சுகளை கேட்கும்போது நானும் ஒரு மேடைப் பேச்சாளராக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்தது. ஒருநாள் இந்த மேடை என் வசப் பட வேண்டும் என எண்ணினேன். வசப்பட வேண்டும் என்பதற்காக உழைத்தேன். எங்கள் ஊர் திரையரங்குகளில் மண்தரையில் அமர்ந்து … Continued

கான்பிடன்ஸ் கார்னர் – 6

ஒருவருக்குப் பயணத்தில் மிகுந்த ஆர்வமுண்டு. வாடகைக் கார் ஓட்டும் வேலைக்குச் சேர்ந்தார். பாதைகள் பற்றி அவருக்கிருக்கும் சந்தோஷம், புதிய இடங்களைப் பார்ப்பதில் இல்லை. எத்தனையோ சுற்றுலாத் தலங்களுக்கு ஓட்டிச் செல்வார். பயணிகள் சென்று வரும்வரை காரிலேயே இருப்பார். அவரளவுக்கு யாரும்

கான்பிடன்ஸ் கார்னர் – 5

கிளிஞ்சல்களைப் பொறுக்கி விளையாடும் குழந்தைக்கு படகில் போகிறவர்களைப் பார்த்து வியப்பு. அவர்கள் மீன் பிடிக்கப்போவது பற்றி அறிந்ததும் மேலும் ஆச்சரியம். கடலில் உப்பெடுக்கலாம். மீன் பிடிக்கலாம். முத்தெடுக்கலாம் என்றெல்லாம் தெரிந்ததும் இன்னும் வியப்பு. ”நான் மட்டும் ஏன் கிளிஞ்சல் பொறுக்குகிறேன்?” அப்பாவைக் கேட்டது.

கான்பிடன்ஸ் கார்னர் – 4

தன் அந்தரங்கமான ரகசியங்களை நண்பர் ஒருவருடன் பகிர்ந்து கொண்டார் அந்த மனிதர். ”யாரிடமும் சொல்லாதே” என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால், இரண்டு நாட்களுக்குள் அவரைப் பற்றிய ரகசியம் அனைவருக்கும் தெரிந்திருந்தது. கோபம் கொண்டு நண்பரிடம்

கான்பிடன்ஸ் கார்னர் – 3

தன்னைப் பற்றிய விமர்சனங்களையும் பாராட்டு மொழிகளையும் எல்லோரிடமும் சேகரித்துக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. அவற்றை ஒரு மூட்டையில் சேகரித்து வைத்திருந்தாள். வளர வளர அதை மறந்தும் போனாள். வெற்றிமிக்க இளம்பெண்ணாய் வளர்ந்து சிறந்த பிறகு அந்த மூட்டை அவள் கண்களில் பட்டது. எழுத்துக்கள்

கான்பிடன்ஸ் கார்னர் – 2

உடம்பில், வயிற்றை எதிர்த்து மற்ற அங்கங்கள் போராடின. கைகளும் கால்களும், ” உழைப்பது நாங்கள். சிரமப்படுவது நாங்கள். சாப்பாடு மட்டும் உனக்கா?” என்றன. வாயும் உணவை உட்கொள்ள மறுத்தது. பசியில் வயிறு பொருமி அடங்கியது.