வெற்றியாளர்களின் அசத்தல் கருவூலம்

வெற்றியாளர்களிடம் இந்தச் சமூகம் அறிய விரும்புவது என்ன? அவர்கள் வரவேற்பறையில் அடுக்கப்பட்டிருக்கும் விருதுகளின் எண்ணிக்கையா? இல்லை! அவர்களின் கையிருப்பில் உள்ள தொகை எவ்வளவு என்கிற கணக்கையா? இல்லை! அவர்களை வெற்றியாளர்களாய் வளர்த்தெடுத்த உந்துசக்தியையும், சரிவுகளை

நமது பார்வை

சவால் என்னும் சிறந்த வாய்ப்பு தகவல் தொழில்நுட்பத் துறையிலும் நிதிநிலையிலும் உலகந்தழுவிய நிலையில் ஏற்படும் பின்னடைவுகளின் பொழுதுகளில், இந்தக் கல்வியாண்டின் நிறைவை நோக்கி நகர்கிற இலட்சக்கணக்கான மாணவர்களின் இதயங்களில் பல கேள்விகள் எழுந்துள்ளன.

கான்ஃபிடன்ஸ்கார்னர் -6

அந்த மனிதருக்கு நண்பர்கள் உண்டு. ஆனால் அவர்கள் சொல்வதை அவர் கேட்பதில்லை. புதிதாக வீடு கட்டியிருந்தார். புதுமனை புகுவிழாவிற்கு நண்பர்களை அழைத்திருந்தார். எல்லா நண்பர்களுமே அந்த மனிதரின் அழகிய புகைப்படம் ஒன்றை பெரிதாக்கி சட்டமிட்டு அன்பளிப்பாக ஆளுக்கொன்றை அளித்தார்கள். காரணம் கேட்ட போது நண்பர்கள் சொன்னார்கள், “உனக்கு நிலைக்கண்ணாடியைப் பரிசளிக்க

கான்ஃபிடன்ஸ்கார்னர் -5

யார் பிச்சைக்காரன் என்பதில் ஓர் அறிஞர் தீர்ப்புச் சொல்ல வேண்டியிருந்தது. அவர் தெளிவாகச் சொன்னார். “பிச்சை எடுப்பவனை எல்லாம் பிச்சைக்காரன் என்று சொல்ல முடியாது. சராசரியான பிச்சைக்காரன் ஒருவனின் வாழ்க்கையை முதலில் பாருங்கள். மூன்று அம்சங்கள் தெரியும். முதலாவதாக, எது நடக்க வேண்டும் என்பது அவன்

கான்ஃபிடன்ஸ்கார்னர் -4

அந்தத் தெருவில் இரண்டு குதிரைகள் இணைந்தே திரியும். பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தெரியும். நெருங்கிப் பார்த்தால் ஓர் உண்மை புரியும். இரண்டு குதிரைகளில் ஒன்றுக்குக் கண் தெரியாது. கண்தெரியாத குதிரையை அதன் உரிமையாளர் கட்டிப்போடவில்லை. இன்னொரு குதிரையுடன் மேயவிட்டார்.

கான்ஃபிடன்ஸ்கார்னர் -3

கல்லுடைக்கும் வேலை அவனுக்கு. ஒரு வணிகரின் மாளிகையைக் கடந்து போகும் போதெல்லாம் பெருமூச்சு விடுவான். “நானும் வணிகனாய் இருந்தால் வசதியாய் வாழலாமே”. கொஞ்ச நாட்களில் வணிகன் ஆனான். ஓர் அதிகாரியைக் கண்டால் வணிகர்கள் பயந்தார்கள். அதிகாரி ஆக நினைத்தான். ஆகி விட்டான்.

கான்ஃபிடன்ஸ்கார்னர் -2

கிரேக்க நாட்டில் ஒரு கதையுண்டு. சிஸிபஸ் என்ற ஒருவனை, மலைக்கு மேல் ஒரு கல்லைக் கீழிருந்து உருட்டிச் செல்லுமாறு ஒரு தேவதை பணித்தது. கடனே என்று சிஸிபஸ் உருட்டிச் செல்வான். உச்சிக்குப் போனதும் அந்தக் கல் உருண்டு கீழே வந்துவிடும். இது தொடர்ந்தது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு சிஸிபஸ் ஒரு விழிப்புணர்வைப் பெற்றான்.

கான்ஃபிடன்ஸ்கார்னர் -1

தன் பிறந்த நாளுக்கு, தானே கைப்பட செய்த பைகளையும் அலங்காரப் பொருட்களையும் கொண்டுபோய் முதியோர் இல்லங்களில் விநியோகிப்பது அந்த இளம்பெண்ணின் வழக்கம். அந்த ஆண்டு குழந்தை பிறந்திருந்தது. எனவே, கைப்பைகள் செய்ய நேரமில்லை, ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம் என்றெல்லாம் யோசித்த போது வேறொன்று தோன்றியது. முதியோர் இல்லத்திற்குத் தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு போனாள் அந்தப்பெண்.

நமக்குள்ளே

நமது நம்பிக்கை ஜனவரி இதழில் வல்லமை தாராயோ ஸ்டாலின் குணசேகரன் அவர்களது உரை வீச்சு மிக அருமை. கிருஷ்ணா அவர்களின், “ஒபாமா சொல்லும் மாற்றம் உங்கள் வாழ்விலும்தான்” எனும் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. “தவறுகள் எதனால் நிகழ்கின்றன” என்ற பிரதாபனின் கட்டுரை தவறுகளை திருத்திக் கொள்ள உபயோகமாக இருந்தது. நமது நம்பிக்கை மேலும் சிறப்படைய … Continued

கோவைக்கு வந்த இமயங்கள்

“சிகரம் உங்கள் உயரம்” ஆண்டுவிழா சிறப்புக் கருத்தரங்கம் “இளம் இந்தியர்கள்” அமைப்பின் ஒருங்கிணைப்பில் ஜனவரி முதல் வாரத்தில் “கோயமுத்தூர் விழா” கோவையின் பல்வேறு இடங்களில் பற்பல அமைப்புகளின் ஆதரவில் கொண்டாடப்பட்டது.