நமது பார்வை

தமிழகத்தில் உள்ள மின்வெட்டு பரவலாக ஏற்படுத்தியுள்ள அதிருப்தியும் அது தொடர்பாக எழும் விவாதங்களும் வளர்ந்து கொண்டே போகின்றன. இந்தியாவின் பல பகுதிகளில் இதே நிலைதான் என்று அரசு சொல்கிறது. தேசம் முழுவதும் மின்சாரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் சமச்சீரான விநியோகம் நிகழுமெனில் அதுவே நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

நமது பார்வை

ஒலிம்பிக் பந்தயங்களில் உலகம் காட்டும் ஈடுபாடும், வெற்றியாளர்களுக்கு அரசாங்கம் ஊக்குவிக்கும் விதமாகப் பரிசுகள் வழங்குவதும் புரிந்துகொள்ளக் கூடியதே.

நமது பார்வை

புகைப்பிடித்தலுக்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கும் மத்திய அரசு, அடுத்துடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புகைப்பிடித்தலின் மூலம் ஏற்படும் நோய்களின் கொடுமையை விளக்கும் புகைப்படங்களை சிகரெட் பெட்டிகளில் அச்சிடுவது பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆலோசித்து வரவதாகத் தெரிகிறது. இது பாராட்ட வேண்டிய முயற்சி.

நமது பார்வை

எண்ணெய் வளம் இல்லை இந்தத் திருநாட்டில்… என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்று யாராவது கேட்டால் எண்ணெய் வளம் இந்தத் திருநாட்டில் என்று எளிதாகச் சொல்லி விடலாம். சர்வதேசச் சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் விதமாக எரிபொருள் விலை அடிக்கடி ஏறுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது.

சேது சமுத்திரத் திட்டம்…

145ஆண்டுகளுக்குப் பிறகு சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுவதற்கான அரசாணை பிறந்திருக்கிறது. அந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்திருப்பதால் பொருளாதார நன்மை, வாழ்க்கைத் தரத்தில் மேம்பாடு, உலகளாவிய புதிய வாய்ப்புகள் போன்ற உயரிய நன்மைகள் மலர உள்ளன.

நமது பார்வை: இந்தக் கோலம் என்று மாறும்?

மக்கள் பிரதிநிதிகளின் மண்டபங்கள் மோதல் மேடைகளாகவே மாறிவிட்டிருக்கின்றன. நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களும், சட்டமன்றக் கூட்டத் தொடர்களும் அமளியிலும் வெளிநடப்பிலுமே முடிகின்றன.