லிப்ட் தத்துவம்
– கிருஷ்ண வரதராஜன் உடல் உழைப்பிற்கு வாய்ப்பில்லாத எழுத்தாளர் வேலை என்னுடையது என்பதால் பெரும்பாலும் நான் லிப்ட்டை தவிர்த்து படிகளில்தான் மேலேறுவேன். எதிர்படும் யாராவது, ”வாங்க சார். லிப்ட்ல போகலாம். சீக்கிரம் மேலே போகலாம்” என்பார்கள். ”நான் சீக்கிரம் மேலே போக விரும்பாததால்தான் படியிலேயே செல்கிறேன்” என்பேன், இரட்டை அர்த்தத்தோடு.