உறியடி வாழ்க்கை

– மரபின் மைந்தன் ம. முத்தையா குறிக்கோள் நோக்கிப் பயணம் போகையில் கனவுகள் குதிரைகள் ஆகும் குதிரையை சுண்டிக் கிளம்பிடு தோழா கருதிய எதுவும் கைகூடும் மறிக்கும் தடைகளை அகற்றும் சக்தி மனிதனின் கனவுக்குண்டு மயக்கம்- தயக்கம் முற்றிலும் நீக்கி முயன்றால் வெற்றிகள் உண்டு

உளிகள் நிறைந்த உலகமிது!

அறிமுகங்கள்! அனுபவங்கள்! ஆளுமைகள்! – மரபின் மைந்தன் ம. முத்தையா அந்தப் பையனையே வரச் சொல்லீடுங்களேன்” இப்படித்தான் எங்கள் பள்ளித்தலைமையாசிரியர் சொல்லியிருக்க வேண்டும். எனக்கு அழைப்பு வந்தது. உடனே நீங்கள் நான் பள்ளி மாணவனாக வகுப்பில் இருந்த போது பள்ளி உதவியாளர் வந்து ”தலைமையாசிரியர் அழைக்கிறார்” என்று சொன்னதாய் எண்ணினால் அது தவறு. நான் அப்போது … Continued

அறிய வேண்டிய ஆளுமைகள்

கொலம்பஸ்: மிதந்து திரிந்த பறவை பிறந்தார் என்று தெரியும். ஆகஸ்ட் 26 ஆ அக்டோபர் 31 ஆ என்று சர்ச்சை. அமெரிக்காவைக் கண்டறிந்தார் என்று தெரியும். கண்டறிந்த முதல் ஐரோப்பியரா இல்லையா என்பதில் சர்ச்சை. இப்படி, சர்ச்சைகளின் நாயகனாகவே சரித்திரத்தில் சித்தரிக்கப்படுபவர்தான் கிறிஸ்டோஃபர் கொலம்பஸ்.

நாளையென்ன தேடு?

-மரபின் மைந்தன் ம. முத்தையா கோடையென்றும் குளுமையென்றும் பருவநிலை மாறும் வாடிநின்ற நிலைமையொரு வீச்சினிலே தீரும் தேடுவதை எட்டும்வரை தொடர்ந்திருக்கும் பாடு

அறிய வேண்டிய ஆளுமைகள்

– மரபின் மைந்தன் ம. முத்தையா கனவுகளால் ஆனதுதான் அந்த மனிதனின் வாழ்க்கை. ஆனால் மிகுந்த தீவிரத்தோடும் தெளிவோடும் அந்தக் கனவுகளை அவர் எட்டிப் பிடித்ததால் அவை இலட்சியங் களாயின.” இப்படி வர்ணிக்கப்பட்டவர், வால்ட் டிஸ்னி. குழந்தைகள் உலகின் கற்பனைப் பாத்திரங்களை படைத்துக் கொடுத்த பிரம்மா. அவரே ஒரு முறை சொன்னார். “உண்மையான படைப்பாற்றல் கனவு … Continued

வானம் வழங்கும் பாடம்

– மரபின் மைந்தன் முத்தையா சூரிய வாளியில் வெய்யிலை நிரப்பி சூட்டைத் தெளிக்குது வானம் காரியம் இதனைப் பார்த்துக் கொண்டே காத்துக் கிடக்குது மேகம் பேரிகை போல இடியை முழக்கிப் பொழிய நெருங்குது நேரம் வீரியம் வளர்த்து வேளை வருகையில் வீசியடிப்பதே ஞானம்!

வாக்குச் சீட்டு

ஏரிகள் நதிகள் குளங்களுக்கெல்லாம் வான்மழைத் துளிகள் வாக்குச்சீட்டு! பேரலை வீசும் சமுத்திரத்துக்கோ ஆறுகள் எல்லாம் வாக்குச்சீட்டு! தூரிகை தீண்டும் வண்ணங்களெல்லாம் ஓவியன் கைகளில் வாக்குச்சீட்டு! காரியம் நிகழ்த்தும் வல்லமை- நமக்கு நாமே வழங்கும் வாக்குச்சீட்டு!

அறிய வேண்டிய ஆளுமைகள்

-மரபின் மைந்தன் முத்தையா டேல் கார்னகி சுயமுன்னேற்ற உலகில் ஒவ்வொருநாளும் உச்சரிக்கப்படும் பெயர்களில் ஒன்று டேல் கார்னகி. அமெரிக்காவில் உள்ள மிசௌரியில், ஏழை விவசாயிக்கு மகனாக 1888இல் பிறந்தவர் இவர். இனிதாகக் கழியவில்லை, இளமைப்பருவம். பொறுப்புக்களுடன் போராடிக்கொண்டே படிக்க வேண்டியிருந்தது.

உருட்டிய தாயத்தின் எண்ணிக்கை

உருட்டிய தாயத்தின் எண்ணிக்கை ஒவ்வொரு தடவையும் கலந்துவரும் விரட்டிய பாம்பால் விழுந்தவரும் ஏணியில் ஏறவே பரமபதம்! தோற்பதும் வெல்வதும் தொடருவது தொடக்கத்தில் யாருக்கும் இருப்பதுதான் ஆட்டத்தின் சூட்சுமம் விளங்கிவிட்டால் அதன்பின்னர் வெற்றி தொடர்கதைதான்!

அறிய வேண்டிய ஆளுமைகள்

– மரபின் மைந்தன் ம. முத்தையா ஸ்டீன் கோவே ” எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது; அது எந்த தேவதையின் குரலோ” என்றொரு பாடல் உண்டு. ஒரு குரல், ஒரு வரி, ஒரு புத்தகம், ஒரு வார்த்தை கூட சிலரின் வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடும். குடும்பத்துடன் விடுமுறையை உல்லாச மாகக் கழித்துக் கொண்டிருந்த விடுமுறைநாளில், வாசித்துக் கொண்டிருந்த … Continued