எட் ஃபோர்மென் சொல்லும் எட்டு வழிகள்

வெற்றி என்பது எப்போதோ ஏற்படும் ஒன்றாயிருந்தால் போதாது. தொடர்ந்து நடப்பதாய் இருக்க வேண்டும். அத்தகைய வெற்றிக்கு வாழ்வை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் எட்டு வழிகளை வழங்குகிறார் எட் ஃபோர்மென்.

கல்லிலே கலைவண்ணம் வெற்றியின் பன்முகங்கள்

இந்திய தொழில் வர்த்தக சபை கோவையில் நடத்திய சேம்பர் ஷோ 2008 நிகழ்ச்சியில் ஜெம் நிறுவனங்களின் தலைவர் திரு.ஆர் வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து… நீங்கள் நினைத்ததை, முயற்சித்ததை, உழைத்ததை, நீங்கள் திட்டமிட்டதை, சரியான முறையில் எதிர்பார்த்த பலன் கிடைத்து, அதன்மூலம் உங்களுக்கு வருமானமும் கிடைத்தால் அது வெற்றி.

கான்பிடன்ஸ் கார்னர் – 6

சின்ன விஷயங்களுக்குக்கூடப் பெரிதாய் அலட்டிக் கொள்ளும் பிரச்சினையிலிருந்து மீள மனவியல் நிபுணரை சந்திக்கச் சென்றார் ஒரு மனிதர். சிறிது நேரம் கண்களை மூடச் செய்துவிட்டு பெரிய கண்ணாடித் தடுப்புக்கு மறுபுறம் இருந்த பழத்தைக் காண்பித்து “இது என்ன பழம்” என்றார்.

கான்பிடன்ஸ் கார்னர் – 5

ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று ஓர் இளைஞர் நண்பர்களிடம் கேட்டார். சிலர் சினிமாவுக்குப் போகச் சொன்னார்கள். சிலர் நண்பர்களுடன் செலவிடச் சொன்னார்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு யோசனை வந்தது. பிறகு, நேர நிர்வாகவியல் நிபுணரை அழைத்து ஆலோசனை கேட்டார் இளைஞர்.

கான்பிடன்ஸ் கார்னர் – 4

பள்ளி சென்ற சிறுமி திரும்புமுன் வானத்தை மேகங்கள் சூழ்ந்தன. மழை வந்தால் மகள் பயப்படுவாளே என்றெண்ணிய அன்னை, குடையுடன் ஓடும் முன்னே மழை கொட்டத் துவங்கிவிட்டது. பாதி தூரம் சென்றதும் பள்ளிக்கூடப்பையோடு மகள் வருவது தெரிந்தது.

கான்பிடன்ஸ் கார்னர் – 3

அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டுவாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியர். ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.

கான்பிடன்ஸ் கார்னர் – 2

“ஆசிரியர் நடத்தும் பாடத்தை எல்லோரும்தான் கவனிக்கிறோம். சிலர் மட்டும் நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள். சிலர் சுமாரான மதிப்பெண் பெறுகிறார்கள். சிலர் தோல்வியடைகிறார்களே…. எப்படி?” கேள்வி எழுப்பினான் மாணவன். ஆசிரியர் சொன்னார், “கவனிப்பது மூன்று வகை.

கான்பிடன்ஸ் கார்னர் – 1

வனங்களில் விறகு சேகரித்து வயிற்றைக் கழுவி வந்த அந்த மனிதனின் எதிரே ஒரு முனிவர் வந்தார். “இன்னும் முன்னால் போ” என்றார். போன இடத்தில் நிறைய சந்தனக் கட்டைகள் கிடைத்தன. அவற்றை விற்றதில் காசு நிறைய கிடைத்தது.

நமது நம்பிக்கை ஆசிரியருக்கு ‘தன்னம்பிக்கை நாயகர்’ விருது

நமது நம்பிக்கை மாத இதழ் ஆசிரியர் “கலைமாமணி” மரபின்மைந்தன் முத்தையா அவர்களுக்கு அனைத்திந்திய வ.உ.சி பேரவை சார்பில் “தன்னம்பிக்கை நாயகர்” என்னும் விருது 07-09-2008 அன்று வழங்கப்பட்டது. “கப்பலோட்டிய தமிழர்” தலைவர் வ.உ.சி அவர்களின் புதல்வர், வ.உ.சி.வாலேஸ்வரன் அவர்கள் இந்த விருதினை வழங்கிப் பாராட்டினார்.

தனிமனிதர்கள் வளர்ந்திட…

1. நேரந்தவறாமையைக் கடைப்பிடியுங்கள் 2. வாழ்வை ரசிக்க நேரம் ஒதுக்குங்கள் 3. உங்கள் வாழ்வில் யார் குறுக்கிடுகிறார்கள் என்பதை கவனமாய்ப் பாருங்கள்