சிரி சிரி.. சிரிப்பு….. அடக் கடவுளே!

posted in: தொடர்கள் | 0

1950ல், மெல்போர்னில் நடந்த சம்பவம் இது. ஒரு நிறுவனம், தன் ஊழியர் ஒருவருக்கு நஷ்ட ஈடு தரவேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எதற்குத் தெரியுமா? அந்த ஊழியரின் தாடை எலும்பு பணிநேரத்தின் போது பிசகியதற்காக!! எப்படிப் பிசகியது? அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு அந்த ஊழியர் கொட்டாவி விடும்போது பிசகியது.

உத்தி’யோகம்’ உண்டா உங்களுக்கு…

posted in: தொடர்கள் | 0

ஹலோ! ஹலோ! தலைப்பைப் பார்த்ததுமே, “உங்களுக்கு வேலை உண்டா”ன்னு கேக்கறதா தப்பா எடுத்துக்காதீங்க! உத்தியோகம், அப்படீங்கறது நாம பார்க்கறவேலைதான் ஒத்துக்கறேன். ஆனா, நம் வேலையை காலையிலேருந்து மாலை வரை ஒரே மாதிரி செய்துகிட்டே போனா, உற்சாகமாகவும் இருக்காது. புதுசா எதையும் செய்யவும் முடியாது.

கொக்கு! பற! பற!

சிவராமன் வெற்றியாளர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகத் தெரியும். “நாம் சராசரி மனிதர்களால் சூழப்பட்டிருக்கிறோம். சராசரி நடைமுறைகள் சார்ந்தே வாழ்க்கையை அணுகவேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆனால், வேளை வரும்போது, நாம் வித்தியாசமானவர்கள் என்பதை வெளிப்படுத்தியே தீருவோம்” என்பதுதான் அது.

புதியதோர் உலகம் செய்வோம்

– இரா.கோபிநாத் நமது மூளை, பிறக்கும் போது தகவல் பதிவு செய்யப்படாத ஒரு வெற்று குறுந்தட்டு போன்றது. தன்னிச்சையாகச் செயல்பட வேண்டிய தகவல்கள் மாத்திரமே அதில் பொதிந்திருக்கும். பிறகு நமக்கு ஏற்படும் அனுபவங்கள் அதில் பதிவாகின்றன. இந்தத் தகவல்கள்தான் நமது சிந்தனைத் திறனை வடிவமைக்கின்றன.

நமது நம்பிக்கை ஆண்டு விழா

-பாணபத்திரன் நமது நம்பிக்கை மாத இதழின் முதலாம் ஆண்டு விழா கோவை பாரதிய வித்யா பவன் அரங்கில் 8-5-2005 அன்று நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வாசகர்கள் 5 மணியிலிருந்தே அரங்கில் குவியத் தொடங்கினர்.

பென்சில் போல் வாழ்ந்தால் வெற்றிதான்!

– சிவராமன் ஒரு மனிதர் தன் வாழ்வில் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று வந்தார். அவரது வெற்றிக்கெல்லாம் யார் வழிகாட்டி என்று நிருபர்கள் கேட்டார்கள். “இவர்தான்” என்று சுட்டிக் காட்டினார். அவர் காட்டிய திசையில், தங்க ஃபிரேம் போட்டு ஒரு பென்சில் புகைப்படம்! நிருபர்கள் திகைத்தார்கள். அவர் சொன்னார், “இந்தப் பென்சில் எனக்கு 5 … Continued

ஒரு நிர்வாகியின் டைரிக் குறிப்பு

-ஏ.ஜே. பராசரன் நிறுவனங்களின் நிர்வாக மேலாண்மையை வரையறுக்கும் போக்கில் மேக்ஸ் வெபர் போன்றவர்களின் கோட்பாடுகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து கடந்த இதழில் விரிவாக சிந்தித்தோம். இதில் மேஸ்லோ ஐந்தடுக்குக் கோட்பாடு ஒன்றை நிறுவினார். அதாவது, ஒரு நிறுவனத்தில் பணிபுரிய வருபவர்களுக்கு ஐந்து தேவைகள் இருக்கின்றன என்றார் அவர்.

சந்தைப் படுத்துவோம்! சாதனை குவிப்போம்!

-தி. க. சந்திரசேகரன் முன்னிலைப்படுத்துதல் என்றால் என்ன என்பதையும், அதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் சென்ற இதழில் கண்டோம். இனி அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி ஆராயலாம்.

ஒளிமயமான எதிர்காலம்

சுகி. சிவம் எது? எது? எப்ப? எப்ப? பதினாறாம் லூயி மன்னர் மட்டும் ஒரு சின்ன ஆபரேஷன் செய்து கொண்டிருந்தால் பிரெஞ்சுப் புரட்சியே நடந்திருக்காது என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும். ஓரளவு உண்மைதான் இந்தச் செய்தி.

என்ன செய்யலாம் எதிர்ப்புகளை?

-சினேகலதா cheap software எல்லாப் புராணங்களிலும், நல்ல காரியங்களுக்கு எதிர்ப்புகள் வருவதாகச் சொல்லப்படுகிறது. குழந்தைகளுக்கு சொல்லப்படுகிற எல்லாக் கதைகளிலுமே சாமானிய மனிதர்கள், பெரிய அரக்கர்களை வீழ்த்துகிறார்கள்.