திசைகளை திரும்பிப் பார்க்கிறேன்

posted in: தொடர்கள் | 0

– சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அன்று இரவு முழுவதும் நான் கண்ணீர் விட்டு அழுது கொண்டே இருந்தேன். எனது கண்கள் தூக்கத்தை விவாக ரத்து செய்து விட்டது. மனதிற்குள் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் போது விழிகளை மூடி எப்படி உறங்க முடியும்? எங்கள் வீடு, ஊருக்கு வடக்கில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. … Continued

கல்யாணப் பரிசு

– கிருஷ்ண வரதராஜன் அன்பைச் சொல்லும் அழகான வழி..! எனக்கு திருமணமாகி நான்கு வருடங்களாகி விட்டது. இத்தனை வருடத்தில் இதை வாங்கிக் கொடுங்கள். அதை வாங்கிக்கொடுங்கள் என்று எதைக் கேட்டும் என் மனைவி அனத்தியதில்லை. அவர் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது பூ. தலையில் வைக்க மல்லிகைப்பூ.

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

– மரபின்மைந்தன் ம. முத்தையா வில்மாவின் வெற்றிக்கதை சாதனை என்பதை ஒரு மலையாக உருவகம் செய்கிறபோதே, ஓர் உண்மை நம்மை உறுத்துகிறது. சாதனையின் உயரம் என்று சமூகம் எதையும் நிர்ணயிக்கவில்லை. எல்லாச் சிகரங்களையும்விட எவரெஸ்ட் பெரிய தென்பதால், எவரெஸ்ட்டை எட்டுவது சாதனையின் உச்சமென்று சொல்லப்படுகிறது.

அறிய வேண்டிய ஆளுமைகள்

– மரபின் மைந்தன் ம. முத்தையா ராபின் ஷர்மா கனடா நாட்டில் பிறந்து, உலகறிந்த தன்முன்னேற்றச் சிந்தனையாளராய், எழுத்தாளராய் விளங்குபவர் ராபின்ஷர்மா. பட்ங் ம்ர்ய்ந் ஜ்ட்ர் ள்ர்ப்க் ட்ண்ள் ச்ங்ழ்ழ்ஹழ்ண் என்ற புத்தகம், அவர்பால் உலகின் கவனத்தை ஈர்த்தது. சின்ன வயதில் பெற்றோர்கள் சொன்ன குட்டிக்குட்டிக் கதைகள் அவருக்குள் தேடலை மலர்த்தியதாகச் சொல்கிற ராபின் ஷர்மா, … Continued

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்..!

– மரபின்மைந்தன் ம. முத்தையா கொஞ்சம் முயன்றால் அதைச் செய்திருக்கலாம். சூழ்நிலை சரியாக இல்லை, பொறுப்பில்லாமல் எதையாவது முயற்சி செய்து சூடுபட வேண்டாமே என்று பார்த்தேன்”. சவால்களை எதிர்கொள்ளாத பலரும் சொல்லிக் கொள்கிற சமாதானம் இது. பொறுப்புடன் இருப்பதென்றால் கனவு களைத் துறப்பதல்ல. பொறுப்புடன் இருப்பதென்றால் சவால்களைத் தவிர்ப்பதல்ல. துணிந்து களத்தில் இறங்கி, முயன்று, வெற்றிகளைத் … Continued

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

– சிநேகலதா எல்லாமே ரைட் நம்பர் நிறைய நிறுவனங்களில் டெலிபோன் ஆபரேட்டர்கள் ஒவ்வொரு நாளும் அடிக்கடி சொல்கிற ஒன்று, ”சாரி! ராங் நம்பர்”. ஆனால் அமெரிக்காவின் மார்க்கெட்டிங் நிபுணர் ரோசென் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தின்படி, ஒரு நிறுவனத்திற்கு வருகிற எந்த அழைப்புமே ராங் நம்பர் இல்லை!

அறிய வேண்டிய ஆளுமைகள்

– மரபின் மைந்தன் முத்தையா வாரன் பஃபெட் ”என்ன! இன்னைக்கு இந்த கம்பெனியோட ஷேர் பத்து சதவிகிதம் பளீர்னு எகிறிடுச்சே! ‘அட ஆமாம்பா! நம்ம வாரன் பஃபெட் அங்கே பங்கு வாங்கியிருக்காரு! அதான்!” 1970களில், அமெரிக்காவிலுள்ள டீக் கடைகளில் டோநட் கடித்தபடி இப்படி சிலர் பேசியிருப்பார்கள். அந்த அளவுக்கு, பங்குச் சந்தைகளின் போக்கைத் துல்லியமாக கணித்தவர் … Continued

மாத்தி யோசி – 4

– அனுராஜன் உதாசீனம் – வெற்றிக்கு உத்தி அது வெற்றியாளர்களுடனான சந்திப்பு. தனக்கு நடந்த பாராட்டுக்கூட்டத்தில் பேசி முடித்து இறங்கிய என் நண்பர், வருத்தத்துடன் சொன்னார், ”நான் வெற்றி பெற்றபிறகு இவ்வளவு பேரும் என்னை கொண்டாடுகிறார்கள். ஆனால் நான் வெற்றி பெறப் போராடிக்கொண்டிருந்த தருணத்தில், யாருமே என்னைக் கண்டு கொள்ளவில்லை. அன்று என்னை உதாசீனப் படுத்தினார்கள், … Continued

ஈஷியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு

– சாதனா இந்த உலகம் ஆசிரியர்களால் ஆனது. இந்த உலகத்தில் உள்ள சாதனையாளர்கள் அனைவரும் ஓர் ஆசிரியரால் உருவாக்கப்பட்டவர்கள்தான். அப்துல் கலாம்கூட தனது இந்த வளர்ச்சிக்கு காரணம் என்று ஆசிரியரைத்தான் குறிப்பிடுகிறார். இதை நான் ஒரு நிகழ்ச்சியில் சொன்ன போது, ஒரு மாணவன்

வீட்டுக்குள் வெற்றி

– கிருஷ்ண வரதராஜன் உள்ளேன் ஐயா நான் முதன் முதலில் எழுதிய புத்தகம் நூற்றுக்கு நூறு. பல்வேறு தரப்பிலிருந்து அந்த புத்தகத்திற்கு பாராட்டு கிடைத்தாலும் என்னை பள்ளிப்பருவத்திலேயே, எழுத்திலும், பேச்சிலும் திருப்பிவிட்ட என் தமிழாசிரியர் அதைப் பெரிதாக சிலாகிக்கவில்லை.