மௌனம் என்னும் பேச்சு

– வழக்கறிஞர் த. இராலிங்கம் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை, நம்முடன் இருப்பவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளுமாறு சொற்களில் வெளிப்படுத்துவது, மிகத் தேவையானது. மேடைகளில் பேசுவதைக் குறிப்பிடவில்லை. சாதாரணமாக உரையாடும் போதே, இத்திறமை மிகவும் தேவைப்படுகின்றது. ஒரு திறமையாகவே இதைக் குறிப்பிடக் காரணங்கள் உண்டு. நம் கருத்தினை எப்படி வெளிப்படுத்துகின்றோம் என்பதே, நமது உறவுகளைத் தீர்மானிக்கிறது. குடும்பங்களில் … Continued

அன்று இன்று

கலாச்சாரம், ஆன்மிகம் என பல நற்பண்புகளுக்கு பெயர் போன தமிழக மாவட்டத்தில் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி 1931இல் இச்சிறுவன் பிறந்தான். அவுல் பக்கீர் என பெயரிடப்பட்ட இச்சிறுவனின் தந்தை ஜைனுலாபுதீன், தன்னிடம் இருந்த சில படகுகளை அங்கிருந்த மீனவர்களுக்கு வாடகைக்கு கொடுத்து வந்தார். முறையாக கல்வி கற்கவில்லையே அன்றி அடர்ந்த ஞானமும், அறிவும் … Continued

கைவிளக்கு

– இசைக்கவி ரமணன் பள்ளம் அழைத்தா பாய்ந்தது வெள்ளம் பாய்தல் நீரின் இயல்பு! பாதை போடும் பச்சைப்புல்லும் பழகிய உழைப்பின் சிரிப்பு! உள்ளம் உணர! உடலோ உழைக்க! உயிரோ ஒளியை ஊட்ட! ஒருநாள் உள்ளே கதவு திறக்கும் உண்மையை உண்மை காட்ட! 3. நீங்கள் யாராக அல்லது என்னவாக ஆக விரும்புகிறீர்கள்? What or who … Continued

நமக்குள்ளே

“முதலடிக்கு ஏது முகூர்த்தம்” என்ற திரு.ரமணன் அவர்களது கட்டுரை மிக அருமை. தன் குழந்தை முதலடி எடுத்து வைக்கும் அழகை கண்டு, ஒரு தாய் பெறும் மகிழ்ச்சியை இந்த கட்டுரை எனக்கு தந்துவிட்டது. இசைக்கவி ரமணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். கவிதா, கும்பகோணம். புத்தகம் என்ற ஒன்று நமக்கெல்லாம் பல காகிதங்களின் தொகுப்பு. ஆனால் … Continued

வேலைக்கு ஆட்கள் தேவையில்லை

காய்கறி மார்க்கெட்டில் கத்திரிக்காய் விற்கும்போது பார்த்திருக்கிறீர்களா? போட்டி போட்டுக் கொண்டு விற்பார்கள். “கிலோ இருபது ரூபாய்” என்று ஒருவர் கத்திக்கொண்டிருந்தால், எதிரில் இருப்பவர், “கிலோ பத்தொன்பது” என்று இன்னும் சத்தமாய் கத்துவார். அதுவும் நேரம் நேரம் ஆக ஆக, அடுத்த நாள் வைத்து விற்க முடியாத காய்கறியாய் இருந்தால் இன்னும் விலை குறைந்து கொண்டே இருக்கும். … Continued

உங்களை விளம்பரம் செய்யுங்கள்

– சாதனா இப்படியும் சில விளம்பரங்கள் தமிழில் வெளிவரும் செய்தித்தாள்களை பார்க்கும்போது ஏதோ ஒரு விளம்பர இதழ் போலவே தெரியும். காரணம் முதல் பக்கம் முழுவதும் விளம்பரமாக இருக்கும்.  சின்ன ஒரு கட்டத்தில் தலைப்பு செய்தியின் இரண்டு பாராக்களை போட்டுவிட்டு தொடர்ச்சி மூன்றாம் பக்கம் பார்க்க என்று போட்டிருப்பார்கள்.

பிஸினஸ்ல பின்னுங்க

– கிருஷ்ண வரதராஜன் பில்கேட்ஸின் பிஸினஸ் அட் தி ஸ்பீடு ஆஃப் தாட்ஸ் புத்தகத்தை கடந்த வாரம் மறு படியும் படித்தேன். அந்தப் புத்தகம் எனக்குப் பிடித்துப் போனதற்கு அதன் தலைப்பும் ஒரு காரணம், ‘எண்ணங்களின் வேகத்திற்கு வணிகம் செய்யுங்கள் ‘. வணிகத்தைப் பொறுத்தவரை, ‘இதை நாம் செய்யலாமா’ என்று புதிய ஐடியா ஒன்றை நீங்கள் … Continued

ஓர் அன்னையின் கனவு

– சுகி சிவம் அப்போது காயத்ரிக்கு வயது மூன்று அல்லது நான்கிருக்கும். அழைப்பு மணி அடித்தது. பிஞ்சுக் கைகளால் கதவைத் திறந்த பிள்ளை திரும்ப உள்ளே வந்தபோது, யார் மணியடித்தது என்று கேட்டார் அப்பாயி. ‘போஸ்ட்மேன்’ என்று ஒற்றைச் சொல்லில் பதில் வந்தது. உடனே ஓர் அறை விழுந்தது அந்தக் குழந்தைக்கு. போஸ்ட்மேன் அண்ணா என்று … Continued

வாழ நினைத்தால் வாழலாம்!

ருத்ரன் பதில்கள் நான் நேர்மறையில் சிந்திக்கிறேன். என் மனைவி எதிர்மறையில் சிந்திக்கிறாள். எனக்கென்று ஓர் இலக்கு வைத்திருக்கிறேன். அவள் இலக்கில்லாமல் இருக்கிறாள். மனைவிக்கு இலக்கை எப்படி உருவாக்குவது? அவளை எப்படி நேர் மறையாக சிந்திக்க வைப்பது? இதையே அவர்கள் சொல்லலாம். இவையெல்லாம் அவரவருடைய கண்ணோட்டம்தான். திருமணமான ஆரம்ப நாட்களில் இந்த சிக்கல்கள் வருவதில்லை. குடும்ப கௌரவம், … Continued

பொருளோடு வாழ்கிறீர்களா?

– ருக்மணி பன்னீர்செல்வம் இந்தக் கேள்வியானது இருபொருள்பட அமைந்ததுதான். உங்களுடைய வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாய், பொருள்பொதிந்ததாய் கட்டமைத்துக் கொண்டிருக்கிறீர்களா? என்பது ஒன்று. இன்றைய தேவை மட்டுமல்லாது எதிர் காலத்திற்கான தேவைகளுக்கும் பணத்தட்டுப்பாடு ஏற்படாதவண்ணம் முன்னேற்பாடுகள் செய்து வைத்து செல்வத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கி றீர்களா? என்பது மற்றொன்று.