நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் தலைவராக தயாராகுங்கள்

– கிருஷ்ண வரதராஜன் அந்த மரத்தடி பிள்ளையார் மீது மக்களுக்கு ஏகத்திற்கு வருத்தம் இருந்தது. எந்த வேண்டுதலையும் நிறைவேற்றுவதில்லை. தன் வேலையை ஒழுங்காகச் செய்வதில்லை என்ற கோபத்தில் இருந்தனர். ஒரு நாள் கோபம் எல்லை மீற பிள்ளையா ரோடு சண்டை போட கிளம்பி விட்டார்கள். நீ பிள்ளையார் இல்லை. வெறும் கல்தான் என்று கோபத்தோடு கல் … Continued

வேலைக்கு ஆட்கள் தேவையில்லை

வேலைக்கு ஆட்கள் தேவை. அதுவும் உடனடியாக தேவை. நிறுவனத்தில் உள்ள எல்லாத் துறைகளுக்குமே தேவை. இப்படிப்பட்ட சூழல்தான் ஏறத்தாழ எல்லா நிறுவனங்களிலும் இருக்கிறது. பணியாளர்கள் பற்றாக்குறை என்ற விஷயத்தில் சிறிய நிறுவனம் பெரிய நிறுவனம் என்ற வித்தியாசங்களெல்லாம் இல்லாமல் எல்லா நிறுவனங்களிலும் இதே சூழல்தான்.

முடியாதென்று நினைக்காதீர்கள்

ஒன்றைச் செய்ய முற்படும்போது அதற்கு இருக்கக்கூடிய ஒரே தடை, நம்மால் முடியாது என்கிற எண்ணம் மட்டும்தான். அந்த எண்ணத்தை அகற்றியவர்கள் அத்தனை பேரும் சாதித்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு வெளிச்சம் போட்டு காட்டுகிற உண்மை.

நடமாடும் விளம்பரங்கள்

– கிருஷ்ண வரதராஜன் அரசியல் தலைவர்களின் வருகையின்போது, அவர்கள் செல்லும் பாதையெல்லாம் அடைத்துக் கொண்டு நிற்கும், ‘உங்கள் உண்மைத் தொண்டன்’ வகை விளம்பரங்களை பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்? ‘இது தலைவருக்கான விளம்பரமா? இல்லை, வரவேற்பு தட்டிவைத்த, அந்த தொண்டனுக் கான விளம்பரமா?’

வெற்றியாளர்கள் எங்கே வித்யாசப்படுகிறார்கள்?

– கிருஷ்ண வரதராஜன் ஒவ்வொரு மனிதனுக்குள்ளுமே முடியும் என்ற எண்ணமும், என்னால் முடியாது என்ற எண்ணமும் கலந்துதான் இருக்கிறது. சில விஷயங்களில் என்னால் முடியும் என்று நினைக்கிறார்கள். சில விஷயங்களில் என்னால் முடியாது என்று நினைக்கிறார்கள். என்னால் லட்ச ரூபாய் நானோ கார் வாங்க முடியும் என்று நினைப்பவர் 15 லட்ச ரூபாய் வரும் இன்னோவா … Continued

படம் சொல்லும் பாடம்

எனக்கு மட்டும் ஏன் இப்படி? எதற்கு இப்படி? என்ற கேள்விகளையும் புகார்களையும் நாம் அன்றாடம் செய்து கொண்டிருக்கிறோம். எந்த வித உடல் குறையும் இல்லை, நாம் விரும்பியதை தேர்ந்தெடுக்க சுதந்திரம் உண்டு, இருந்தும் வாழ்வின் பாதி நேரங்களில் நமக்கு நிறைவே ஏற்படுவதில்லை. இந்த சிந்தனையை மாற்ற நாம் நிச்சயம் கற்றுகொள்ள வேண்டும், இந்த படங்கள் சொல்லும் … Continued

தென்னையப் பெத்தா இளநீரு

– பிரதாபன் இந்தியாவின் பெருநகரமொன்றில், தொழில் செய்து வரும் அந்த மனிதர் பல துறைகளில் வெற்றிக்கொடி நாட்டியவர். தென் மாவட்டமொன்றில் பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் கொண்ட தோப்பு அவருக்கு சொந்தமானது. தன் தொழில்சார்ந்த நண்பர்களை ஒருமுறை தன்னுடைய தோப்புக்கு அழைத்துப் போனார் அவர்.

உளிகள் நிறைந்த உலகமிது!

அறிமுகங்கள்! அனுபவங்கள்! ஆளுமைகள்! – மரபின் மைந்தன் ம. முத்தையா அந்தப் பையனையே வரச் சொல்லீடுங்களேன்” இப்படித்தான் எங்கள் பள்ளித்தலைமையாசிரியர் சொல்லியிருக்க வேண்டும். எனக்கு அழைப்பு வந்தது. உடனே நீங்கள் நான் பள்ளி மாணவனாக வகுப்பில் இருந்த போது பள்ளி உதவியாளர் வந்து ”தலைமையாசிரியர் அழைக்கிறார்” என்று சொன்னதாய் எண்ணினால் அது தவறு. நான் அப்போது … Continued

வேர் தேடும் வார்த்தைகள்

– வினயா உலக மயமாகிவிட்ட சில ஆங்கிலச் சொற்களின் உண்மையான மூலம் வேறு மொழிகளில் வேர் கொண்டிருக்கும். அந்த வேர் தேடிப் பயணம் போனால் புதிய புதிய தகவல்கள் கிடைக்கின்றன! ரோமானியர்களின் தெய்வம் ஜீனோ மானடா. பல அபாயங்களை முன்கூட்டியே அறிவித்து அவர்களைக் காத்த கடவுளாகிய மானடாவின் பெயர், Moneo என்ற இலத்தீன வார்த்தையிலிருந்து வந்தது. … Continued

பயிற்சியால் எல்லாமே முடியும்

வாடிக்கையாளர்கள், எந்த ஒரு நிறுவனத்தையும் வாழ வைப்பவர்கள். ஒவ்வொரு நிறுவனமும் புது வாடிக்கை யாளர்களைப் பெறவும், உள்ள வாடிக்கையாளர் களைத் தக்க வைத்துக் கொள் வதற்கும் நிறைய உத்திகளைக் கையாளுகின்றன. சில நிறுவனங்கள் இதற்காகத் தங்கள் பணியாளர்களுக்கு அளிக்கும் பயிற்சியும், சந்தையில் கொடுக்கும் விளம்பரங்களும், மற்றும் பிற செயல் களையும் கணக்கிட்டால் செலவுகள் பிரமிக்க வைக்கும்.