உங்களை விளம்பரம் செய்யுங்கள்

– கிருஷ்ண வரதராஜன் வெற்றிக்காக என்னால் காத்திருக்க முடியாது விளம்பரத்திற்காக அதிகம் செலவிடும் என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லும் வாசகம்,ó ”வெற்றிக்காக என்னால் காத்திருக்க முடியாது.” ”இப்போது நான் செய்யும் பிஸினஸை இப்படி செய்து கொண்டிருந்தாலே போதும். ஐந்து வருடத்தில் முதலிடத்திற்கு வந்துவிடுவேன். ஆனால் அதுவரை என்னால் காத்திருக்க முடியாது. எனக்கு வெற்றி வேண்டும். … Continued

புதுவாசல்

நம்பிக்கை பள்ளதாக்கு -கிருஷ்ண வரதராஜன் நான்காவது ஆண்டாக சுதந்திரா ஹாலிடே ஸ்கூலில் சக்ஸஸ் சம்மர் கேம்ப் கொடைக்கானலில் நடைபெற்றது. ஒரு வார கேம்பில் ஒரு நாள் சைட் சீயிங் உண்டு. சைட் சீயிங் என்றவுடன் அனைவரும் பார்க்க விரும்பியது குணா கேவ் மற்றும் சூசைட் பாயிண்ட். குணா குகையில் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை கம்பி போட்டு மூடிவிட்டார்கள். … Continued

வெறி பிடித்தவர்கள் மட்டுமே உயிர் பிழைப்பார்கள்

வி. நடராஜன் இந்தத் தலைப்பை படித்தவுடன் ஏதோ வாழ்வைப் பற்றி எதிர்மறையான கண்ணோட்டத்துடன் எழுதப்படும் ஒரு விஷயமாக இதைப்பற்றி நீங்கள் எண்ணலாம். உண்மையில் சமீபத்தில் நான் படித்த ஒரு அருமையான புத்தகத்தின் ஆங்கிலத் தலைப்பின் தமிழாக்கம்தான் இது! ஆம்! உலகப் புகழ்பெற்ற கம்ப்யூட்டர் சிப் நிறுவனமான ‘இன்டெல்’ () என்னும் நிறுவனத்தின் தலைவராக 37 ஆண்டுகள் … Continued

பிறர் மீது நம்பிக்கை

posted in: Namadhu Nambikkai | 0

நேர்காணல்: சிவகுருநாதன் அம்மன் T.R.Y திரு.சோமசுந்தரம் இடைவிடா முயற்சி…. தொழில் நேர்மை…. தன்மீது நம்பிக்கை…. பிறர் மீது நம்பிக்கை…. தளர்வறியா உழைப்பு இவை எல்லாம் இருந்தால் ஒரு பழைய இரும்பு வியாபாரி பல நூறு கோடிகளில் வர்த்தகம் செய்யும் அளவுக்கு இரும்பு உருக்காலைக்கு அதிபராகவும் உயர்வு அடையலாம் என்பது நிர்தசனமான உண்மை! 1998ம்ஆண்டு வரை பழைய … Continued

பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள்

– கனகலஷ்மி இந்த மாதம் பாரதிகிருஷ்ணன் (இன்று புகழின் உச்சியைத் தொட்டவர்களும் தங்களுக்கான நம்பிக்கையை எங்கிருந்தோ பெற்றிருப்பார்கள். அந்த அனுபவங்கள் குறித்து உதவி ஆசிரியர் கனகலட்சுமியுடன் உரையாடுகிறார்கள் பிரபலங்கள்) அம்மாவின் மரணத்திற்குப் பிறகு அப்பாவுக்கும் எனக்கும் இடையில், ஒரு பெரிய சுவர் எழும்பி இருந்தது. யாரோடும் சேர்ந்து இருக்காமல், மதுரை வீட்டில் தனியே இருந்தார் அப்பா. … Continued

திசைகளை திரும்பிப் பார்க்கிறேன்

தேர்தலில் அமோக வெற்றி – சிந்தனைக் கவிஞர் கவிதாசன் முடியாது என்று முடங்கிவிட்டால் மூச்சுக் காற்றும் நின்றுவிடும் முடியும் என்று துணிந்து விட்டால் மூளைக்குள் மின்சாரம் பிறப்பெடுக்கும் தமிழ்மன்றத் தேர்தலில் நான் அமோக வெற்றி பெற்று தமிழ்மன்றச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னை எதிர்த்துப் போட்டியிட்ட அறிவியல் துறையைச் சார்ந்த ரவிச்சந்திரனைவிட 800 ஓட்டுக்கள் அதிகம் பெற்றிருந்தேன்.

சந்திப்புகளில் சாதிக்கலாமே..!

– பிரதாபன் எந்தத்துறையிலும் ஏற்றங் களைக் காண்பதற்கான ஏற்பாடுகள், சந்திப்புகள், சந்திப்புகளை சரியாகப் பயன் படுத்தினால், எதிரில் உள்ள மனிதரே உங்கள் ஏணியாக மாற வாய்ப்பி ருக்கிறது. ஒவ்வொரு மனிதரையும் உங்களுக்கு உதவக்கூடியவராய் மாற்றுவது உங்களிடம்தான் இருக்கிறது. முக்கியமாக, உங்கள் அணுகுமுறையில் இருக்கிறது. விநாடிகளில் விளங்கி விடும்: ஒரு மனிதரை எடை போடுவதற்கு நிறைய நேரம் … Continued

அன்று சொன்னவை..! அர்த்தமுள்ளவை!!

– வழக்கறிஞர் த. இராமலிங்கம் தொலைக்காட்சி ஒன்றில், நகைச்சுவை நடிகர் ஒருவர், ஒரு துணுக்கினைச் சொல்லிவிட்டு, அவரே சிரித்துக் கொண்டிருந்தார். தற்செயலாக அதைப் பார்க்க நேரிட்டபோது, நகைச்சுவையை விட, ஆழமான ஒரு செய்தி அந்தத் துணுக்குக்குள் மறைந்திருப்பதாகவும், அது நகைச்சுவை என்னும் நீரில் கரைந்து போவதாகவும் பட்டது. அதை நம் பார்வையில் பார்க்கலாம். கணவன், மனைவி … Continued

படம் சொல்லும் பாடம்

எந்த திசையில் பறந்தாலும் பிடிக்க முயன்றால்.. கனவுகளை கைவிட தேவையேயில்லை. இலக்கின் மீதான பார்வை விலகுகிற போது தான் தடைகள் தெளிவாக தெரிகின்றன.

அறிய வேண்டிய ஆளுமைகள்

– மரபின் மைந்தன் ம. முத்தையா கனவுகளால் ஆனதுதான் அந்த மனிதனின் வாழ்க்கை. ஆனால் மிகுந்த தீவிரத்தோடும் தெளிவோடும் அந்தக் கனவுகளை அவர் எட்டிப் பிடித்ததால் அவை இலட்சியங் களாயின.” இப்படி வர்ணிக்கப்பட்டவர், வால்ட் டிஸ்னி. குழந்தைகள் உலகின் கற்பனைப் பாத்திரங்களை படைத்துக் கொடுத்த பிரம்மா. அவரே ஒரு முறை சொன்னார். “உண்மையான படைப்பாற்றல் கனவு … Continued