ஆபத்திலும் சோகத்திலும் கூட…

– சோம. வள்ளியப்பன் ‘உங்களுக்குள் கற்றுக்கொள்ளும் மனப்பான்மை இருந்தால் போதும். சொல்லித் தருவதற்கு எல்லா இடத்திலும் எந்நேரமும் ஆசிரியர்கள் தோன்றுவார்கள்’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. மார்ச் மாதம் 11ம் தேதி. மதியம் 2.46 மணி. ஜப்பானின் மேற்காக, பசிபிக் மகாசமுத்திரத்தில், கடலுக்கு அடியில் 34 கி.மீ ஆழத்தில், சுமார் ஆறு நிமிடங்கள் வரை … Continued

கல்யாணப் பரிசு

யுத்தம் செய்யாத தம்பதிகள் – கிருஷ்ண வரதராஜன் உலகிலேயே அதிக சண்டைகள் நடக்கும் இடம் எது? ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா, இஸ்ரேல் என்று பட்டியலிட்டு விடாதீர்கள். ஏனெனில் உலகிலேயே அதிக சண்டைகள் நடக்கும் இடம் வீடுதான். இங்கே வார்த்தைகள்தான் ஆயுதங்கள். சில பேர் காயப்படுத்துவதற்காக, வார்த்தைகளை ஆயுதங்களாக பயன்படுத்துவார்கள். சிலர் தன்னை தற்காத்துக்கொள்வதற்காக வார்த்தை ஆயுதத்தை கையில் … Continued

புது வாசல்

நம்பிக்கை மேல் நம்பிக்கை ஒரு நாட்டின் அரசருக்கு, அவரது ஒற்றன் ஒரு அவசர செய்தியை கொண்டு வந்திருந்தான். “தலைமை மருத்துவர் தங்களுக்கு கொடுப்பதற்காக கொண்டுவந்து கொண்டிருக்கும் மருந்தில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறது.” சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கே அரண்மனை வைத்தியர் வந்துவிட்டார். ஒற்றன் கண் ஜாடை காட்டினான், ‘அரசே இம்மருந்தை சாப்பிடவேண்டாம் இதில்தான் விஷம் கலந்திருக்கிறது.’

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 6

கடுமையான பாலைவனத்தில் முகாமிட்டிருந்தார் அந்த ராணுவவீரர். அவருடைய மனைவியும் உடன் சென்றிருந்தார். தகிக்கும் வெய்யிலையும் எங்கும் வீசியடிக்கும் அனலையும் மணலையும் அவரால் தாங்க முடியவில்லை. தன் தந்தைக்குக் கடிதம் எழுதினார். அவர் தந்தை பதிலெழுதினார்.

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 5

யார் வழி நடத்த வேண்டும், யார் வழி நடக்க வேண்டும் என்கிற பிரச்சினை, அலுவலகம் ஒன்றில் அடிக்கடி எழுந்தது. இந்த சிக்கல் மேலதிகாரியின் கவனத்திற்கு சென்றது. சம்பந்தப்பட்ட அனைவரையும் ஓரிடத்தில் அமர வைத்த அதிகாரி, அறைக்குள் அங்கு மிங்கும் வேகமாக நடந்துவிட்டு, “புரிகிறதா?” என்றார்.

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 4

குளிர் நிரம்பிய பொழுதொன்றில் காலணிகள் கடையின் ஜன்னல் வழியே ஏக்கத்துடன் காலணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனின் தோளில் கரமொன்று படிந்தது. புன்னகை முகத்துடன் பெண்மணி ஒருவர், “என்ன பார்க்கிறாய்” என்று கேட்டார். “எனக்கு ஒரு ஜோடி காலணிகள் தருமாறு கடவுளைக் கேட்டுக்

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 3

இரவு வேளைகளில் தன்னை ஒரு பேய் துரத்துவது போன்ற கனவு அந்த மனிதனுக்கு அடிக்கடி வந்தது. பகலில் அந்தக் கனவைப் பற்றி நினைத்தாலே உடல் நடுங்கும். அவ்வளவு மோசமான கனவு அது. ஒருநாள் அதே கனவு. அதே பேய். இப்போது கனவில் அந்தப் பேய், அந்த மனிதனின் மிக அருகே வந்துவிட்டது. அந்த மனிதன் கேட்டான், … Continued

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 2

கூண்டில் இருந்த அந்தக்கிளி, “விடுதலை வேண்டும்! விடுதலை வேண்டும்” என்று விடாமல் மிழற்றிக் கொண்டிருந்தது. மனமிரங்கிய மனிதர் ஒருவர் அதன் கூண்டைத் திறந்து விட்டார். கதவு திறந்த பிறகும்கூட கிளி, “விடுதலை வேண்டும்! விடுதலை வேண்டும்” என்று குரல் கொடுத்ததே தவிர வெளியே வர வில்லை. நாமே பிடித்து வெளியே விடலாம் என்று கையைக் கூண்டில்

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 1

காதலனைக் காணாமல் கலங்கினாள் அந்தப் பெண். கவலை தீர வழி கிடைக்குமென்று குருவிடம் போனாள். அவரோ அவளைப் பேச விடாமல் ஒரு பை நிறைய ஆரஞ்சுப் பழங்களைக் கொடுத்து, “இதை உடனே அந்த மலையுச்சிக்குக் கொண்டு போ” என்றார். மனச் சுமையும் கைச்சுமையும் தாங்கி மெல்ல நடை போட்டாள்.

வானம் வழங்கும் பாடம்

– மரபின் மைந்தன் முத்தையா சூரிய வாளியில் வெய்யிலை நிரப்பி சூட்டைத் தெளிக்குது வானம் காரியம் இதனைப் பார்த்துக் கொண்டே காத்துக் கிடக்குது மேகம் பேரிகை போல இடியை முழக்கிப் பொழிய நெருங்குது நேரம் வீரியம் வளர்த்து வேளை வருகையில் வீசியடிப்பதே ஞானம்!